Home
News

YouTube இருக்குல.. ரூ.89 எடுத்து வைங்க.. இனி Ad-Free தான்.. வந்தது பிரீமியம் லைட் பிளான்.. என்னென்ன இருக்கு?

யூடியூப் (YouTube) வைத்திருக்கும் ஒட்டுமொத்த யூசர்களின் வயிற்றிலும் பாலை வார்க்கும்படி ரூ.89 விலை கொண்ட பிரீமியம் லைட் (Premium Lite) திட்டம் புதிதாக களமிறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ரூ.149 விலைக்கு ஆரம்ப விலை திட்டம் இருந்தது. இப்போது, அதைவிட மலிவான விலைக்கு இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய லைட் திட்டத்தின் முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓடிடி தளங்களுக்கு நிகரான வீடியோ கன்டென்ட்கள் யூடியூபிலும் கிடைக்கின்றன. இதனாலேயே யூடியூப் பிரீமியம் திட்டம் (YouTube Premium Plan) கொடுக்கப்பட்டது. இதிலும் தனிநபர் திட்டம் (Individual Plan), பேமிலி திட்டம் (Family Plan) மற்றும் இரு நபர்கள் திட்டம் (Two-person Plan) என்று ஆப்ஷன்கள் இருக்கின்றன. இதுபோக மாணவர்களுக்காக பிரத்யேகமாக திட்டமும் இருக்கிறது.

YouTube இருக்குல.. ரூ.89 எடுத்து வைங்க.. இனி Ad-Free தான்.. வந்தது!

இந்த ஸ்டூடென்ட் (Student Plan) மட்டுமே ரூ.100 பட்ஜெட்டுக்கும் கீழாக வெறும் ரூ.89 விலைக்கு கிடைத்தது. அதோடு 1 மாதத்துக்கு ப்ரீ-டிரயலும் கொடுக்கப்பட்டது. இதுபோன்ற ஒரு மலிவு விலை திட்டம் இல்லையே என்று மாணவர்கள் அல்லாத யூடியூப் யூசர்கள் நினைத்தனர். இது யூடியூப் நிறுவனத்துக்கு கேட்டுவிட்டது போல, புதிய திட்டத்தை களமிறங்கி இருக்கிறது.

யூடியூப் பிரீமியம் லைட் ரூ.89 திட்டம் (YouTube Premium Lite Rs 89 Plan): இந்த லைட் திட்டத்துக்கு மற்ற திட்டங்களை போலவே 1 மாதத்துக்கு சந்தா கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் வீடியோக்களை விளம்பரங்கள் இல்லாமல் ஸ்ட்ரீம் செய்து கொள்ளலாம். இந்த சலுகை மட்டுமே கிடைக்கிறது. விளம்பரம் அல்லாத யூடியூப் மியூசிக் (YouTube Music) இதில் கிடைக்காது.

அதேபோல டவுன்லோட் (Download) மற்றும் பேக்கிரவுண்ட் பிளே (Background Play) செய்து கொள்ள முடியாது. அதேபோல யூடியூப் கிட்ஸ் (YouTube Kids) தளத்திலும் உங்களுக்கு விளம்பரங்கள் வராது. ஒருவேளை டவுன்லோட் செய்ய வேண்டும், பேக் கிரவுண்ட் பிளே கிடைக்க வேண்டும் என்று கேட்டால் ரூ.149 விலை கொண்ட திட்டத்துக்கு யூசர்கள் செல்லலாம்.

யூடியூப் பிரீமியம் ரூ.149 திட்டம் (YouTube Premium Rs 149 Plan): முந்தைய திட்டத்தில் யூடியூப் மற்றும் யூடியூப் கிட்ஸ் ஆகிய தளங்களில் மட்டும் விளம்பரங்கள் அல்லாத சலுகைகள் கிடைத்து. ஆகவே, லைட் திட்டத்தில் 2 சலுகைகள் மட்டுமே இருக்கிறது. ஆனால், இந்த பிரீமியம் திட்டத்தில் 5 சலுகைகள் கிடைக்கிறது. இதிலும் யூடியூப் & யூடியூப் கிட்ஸ் தளங்களில் விளம்பரம் வராது.

அதேபோல யூடியூப் மியூக் ஆப் மூலம் ஆடியோக்களை கேட்கும்போது, அதிலும் விளம்பரங்கள் வராது. இதுபோக யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த வீடியோக்களை ஆஃப்லைனில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகள் போக பேக்கிரவுண்ட் பிளே சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. வீடியோக்களை டவுன்லோட் செய்து வைக்க முடியும்.

இந்த சலுகைகள் ஒரு நபருக்கு மட்டுமே கிடைக்கும். அதுவே 2 நபர்களுக்கு டவுன்லோட், பேக்கிரவுண்ட் பிளே, விளம்பரம் அல்லாத யூடியூப், யூடியூப் மியூசிக் மற்றும் யூடியூப் கிட்ஸ் ஆகிய சலுகைகள் வேண்டுமானால், ரூ.219 விலையில் கிடைக்கும் இரு-நபர்கள் திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதுபோக பேமிலி திட்டம் ரூ.299 விலைக்கு கிடைக்கிறது.

இதில் பேமிலி திட்டத்தில் மொத்தமாக 5 டிவைஸ்களில் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீமிங் கிடைக்கிறது. ஆகவே, மொபைல், டிவி, லேப்டாப், டேப்லெட் போன்ற டிவைஸ்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இதிலும் டவுன்லோட், பேக்கிரவுண்ட் பிளே, விளம்பரம் அல்லாத யூடியூப், யூடியூப் மியூசிக் மற்றும் யூடியூப் கிட்ஸ் ஆகிய சலுகைகள் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
YouTube Rolls Out Premium Lite in India At Rs 89 Month Offering Affordable Ad Free Viewing
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X