நம்ம மேல யூடியூப்-க்கு இவ்ளோ அக்கறையா? ப்ரேக் எடுக்க நோட்டிபிகேசன்.!

இந்த 'டேக் பிரேக்' அம்சத்தின் உதவியுடன் பயனர்கள் 15 நிமிடம், 30 நிமிடம், 60 நிமிடம்,90 நிமிடம் மற்றும் 180 நிமிட இடைவேளைகளில் நியாபகமூட்டல் வைக்கலாம்.

|

கூகுளின் வீடியோ சேவை வழங்கும் தளமான யூடியூப் கன்டென்ட் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்துவருகிறது. அதனுடன் பயனர்களுக்கு பாதுகாப்பான தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள இந்நிறுவனம், வீடியோ பார்க்கும் போது இடைவேளை எடுக்கும் வகையில் பயனர்களுக்கு நியாபகப்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

நம்ம மேல யூடியூப்-க்கு இவ்ளோ அக்கறையா? ப்ரேக் எடுக்க நோட்டிபிகேசன்.!


கூகுளின் 'டிஜிட்டல் வெல்பீயிங்' (Digital wellbeing) முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, ஆண்ராய்டு பி உடன் இந்த புது வசதியையும் அறிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட்டின் மூலம் பயனர்கள் குறிப்பிட்ட இடைவேளை நேரத்திற்கு நினைவூட்டல்(ரிமைண்டர்) வைக்க யூடியூப் அனுமதிக்கிறது.

டைமர் அந்த இடைவேளை நேரத்தை அடையும் போது வீடியோ தானாகவே நின்றுவிடும். பின்னர் பயனரை இடைவேளை எடுத்துக்கொள்ளுமாறு யூடியூப் அறிவுரை வழங்கும். இந்த புதிய அப்டேட் யூடியுப் ஆண்ராய்டு செயலியின் 13.17+ பதிப்புகளுக்கும், ஆண்ராய்டு பி பதிப்பிலும் கிடைக்கிறது.

நம்ம மேல யூடியூப்-க்கு இவ்ளோ அக்கறையா? ப்ரேக் எடுக்க நோட்டிபிகேசன்.!


இந்த 'டேக் பிரேக்' அம்சத்தின் உதவியுடன் பயனர்கள் 15 நிமிடம், 30 நிமிடம், 60 நிமிடம்,90 நிமிடம் மற்றும் 180 நிமிட இடைவேளைகளில் நியாபகமூட்டல் வைக்கலாம். நினைவூட்டல் நேரத்தை அடைந்தவுடன் பின்புலத்தில் வீடியோ நின்றுவிட்டு , பயனரை நினைவூட்டலை நீக்கி வீடியோவை தொடர் அல்லது யூடியூப்-ன் அறிவுரையான "take a break, there is more to life" வழி செல் என்ற தேர்வுகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

இந்த புதிய அப்டேட்டில் நோட்பிகேசன் கண்ட்ரோல்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளின் குறிப்பிட்ட நேர இடைவெளியில் மட்டும யூடியூப் நோட்பிகேசன் சத்தம் மற்றும் அதிர்வுகளை தடுத்துவைக்கலாம். பொதுவாக, இந்த அம்சத்தில் இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை நோட்பிகேசன்கள் தடுக்கப்பட்டிருக்கும். எனினும், பயனர்கள் தங்களுக்கு ஏற்றவாறு நேரத்தை மாற்றிக்கொள்ளலாம்.

நம்ம மேல யூடியூப்-க்கு இவ்ளோ அக்கறையா? ப்ரேக் எடுக்க நோட்டிபிகேசன்.!


மேலும் இந்த தளத்தில் நோட்டிபிகேசன் டைஜிஸ்ட் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யூடியூப் நோட்டிபிகேசன்களை மற்றவற்றுடன் சேர்த்து ஒரே தொகுப்பாக மாற்றப்படும். இந்த டைஜிஸ்ட் ன் டெலிவரி நேரத்தை தேர்வு செய்ய Settings>Notifications>ScheduledDigest க்கு செல்லவும்.

யூடியூப்பில் உள்ள time watched profile' என்னும் வசதியின் மூலம் பயனர்கள் தங்கள் வீடியோ பார்க்கும் வழக்கத்தை அறியலாம். தினமும் சராசரியாக எவ்வளவு நேரம் வீடியோ பார்க்கிறோம், இந்த நாள் , முந்தைய நாள் உள்பட கடந்த ஏழு நாட்கள் எவ்வளவு நேரம் வீடியோ பார்க்க செலவளித்தோம் என்பதையும் பார்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
YouTube rolls out Notification Digest and it asks you to take a break ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X