பிரைவேட் மெசேஜ், புதிய வீடியோ சேரிங் வசதி என அசத்துகிறது யூடியூப்.!

லேப்டாப் அல்லது கணிணி மூலமாக பயனர்கள் யூடியூப் இணையதளத்திற்கு செல்லும் போது, மேல் தலைப்பின் வலதுபக்கம் 'Chat bubble' ஐகானை உங்களால் பார்க்கமுடியும்.

|

தற்போது சந்தையில் உள்ள வீடியோ சேவை வழங்கும் தளங்களில் சிறந்து எது என்றால் யூடியூப் என்று சந்தேகமே இல்லாமல் கூறிவிடலாம். யூடியூப் மூலம் வீடியோக்களை தேடவும் அதை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்ளவும் தான் நமது பெரும்பாலான ஓய்வு நேரத்தை பயன்படுத்துகிறோம் எனக் கூறினால் அது மிகையாகாது.

பிரைவேட் மெசேஜ், புதிய வீடியோ சேரிங் வசதி என அசத்துகிறது யூடியூப்.!

முன்னதாக யூடியூப் வீடியோக்களை மொபைல் ஆப் மூலம் பகிர இன்-ஆப் மெசேஜிங் என்ற எளிய வசதி இருக்கிறது. இப்போது அதே பகிரும் வசதி யூடியுப் இணைய வெர்சனிலும் கிடைக்கிறது. மொபைல் செயலியின் ஆக்டிவிடி டேப்-ல் இருக்கும் இவ்வசதி, இணைய பயனர்களுக்கும் தற்போது கிடைக்கும் வகையில் யூடியூப் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.

லேப்டாப் அல்லது கணிணி மூலமாக பயனர்கள் யூடியூப் இணையதளத்திற்கு செல்லும் போது, மேல் தலைப்பின் வலதுபக்கம் 'Chat bubble' ஐகானை உங்களால் பார்க்கமுடியும். இது நோட்டிபிகேசன் பெல் மற்றும் ஆப்ஸ் ஐகானுக்கு இடையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்சனை பயனர் கிளிக் செய்தவுடன், யூடியூப்புக்கு உள்ளேயே வீடியோக்கள் மற்றும் மெசேஜ்களை பகிர விரும்பும் பயனர்களின் பட்டியல் காண்பிக்கப்படும். இணையம் மற்றும் செயலியில் இயங்கும் அனைத்து மெசேஜிங் சேவைகளைப் போலவே, இந்த வசதியும் இணையம் மற்றும் செயலியில் நிகழ்நேரத்தில் ஒத்திசையவல்லது.


மெசேஜ் பட்டியலில் உள்ள கான்டேக்டை பயனர் கிளிக் செய்தவுடன், கீழ் வலது மூலையில் சாட் விண்டோ ஒன்று தோன்றும். இந்த வசதி பேஸ்புக் மெசன்ஞர் இணையதளத்தை போன்றதாகும். பயனர் இணையதளத்தில் நுழைந்தவுடன் காண்பிக்கப்படும் இந்த சாட் விண்டோவை பயனர் மினிமைஸ் செய்ய முடியும். சாட் மூலம் பகிரப்பட்ட வீடியோக்களை ஒரு கிளிக் செய்வதன் மூலம் எளிதாக ஓடச்செய்யலாம்.

பிரைவேட் மெசேஜ், புதிய வீடியோ சேரிங் வசதி என அசத்துகிறது யூடியூப்.!

மேலும் யூடியூப் தனது வீடியோ சேரிங் பக்கத்தை முழுவதுமாக மேம்படுத்தி, வீடியோக்களை இணையதளத்தில் யாருக்கு வேண்டுமானாலும் எளிதில் அனுப்ப பயனர்களை அனுமதிக்கிறது.யூடியூப்வெளியிட்ட முந்தைய பதிப்பில் உள்ள உள்ளார்ந்த இணைப்பு மற்றும் சமூக வலைதள பகிரல் வசதிகளுடன், சமீபத்தில் தொடர்புகொண்ட பயனர்களின் பட்டியல் கொண்ட பாப்அப் திரை தோன்றும் வசதியும் உள்ளது. அதில் உள்ள பயனர்களை கிளிக் செய்து மெசேஜ்களை டைப் செய்து 'Send' பட்டனை கிளிக் செய்வதன் மூலம் எளிதில் வீடியோவை பகிர முடியும்.
Best Mobiles in India

English summary
YouTube receives Private messages and a new video sharing feature for its web version; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X