Home
News

YouTube இருக்கா.. ரூ.219-க்கு வச்சாச்சு பிரீமியம்.. 2 பேருக்கு அக்சஸ்.. 30 நாட்கள் சாந்தா.. ப்ரீ-ட்ரையல் ஓகே!

நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜியோஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப்களை போலவே கோடிக்கணக்கான சந்தாதாரக்கள் பயன்படுத்திவரும் யூடியூப் (YouTube) ஸ்ட்ரீமிங்குக்கும் பிரீமியம் திட்டங்கள் வந்துள்ளன. இதில் ரூ.219 திட்டம் புதிதாக களமிறங்கி இருக்கிறது. அதேபோல ஒரே நேரத்தில் 2 பேர் ஸ்ட்ரீமிங் செய்யும்படி சாந்தா கொடுக்கப்படுகிறது. இந்த யூடியூப் பிரீமியம் திட்டத்தின் (YouTube Premium Plan) விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விளம்பரங்கள் இல்லாமல் வீடியோ ஸ்ட்ரீமிங், பேக்கிரவுண்ட் பிளே மற்றும் ஆஃப்லைன் டவுன்லோட் போன்ற சலுகைகளை யூடியூப் பிரீமியம் திட்டங்கள் கொடுக்கின்றன. இந்த சலுகைகள் இல்லாமல் வழக்கமாக பயன்படுத்தும்படி கட்டணமில்லா யூடியூப் சந்தா கிடைக்கிறது. இதுவரை பிரீமியம் திட்டங்களில் ஒருவர் அல்லது 5 பேர் ஸ்ட்ரீமிங் செய்யும்படி மட்டுமே சலுகை கிடைத்தது.

YouTube இருக்கா.. ரூ.219-க்கு வச்சாச்சு பிரீமியம்.. 2 பேருக்கு அக்சஸ்!

ஆனால், இப்போது நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜியோஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப்களை போலவே மல்டிபிள் டிவைஸ்களில் ஸ்ட்ரீமிங் செய்யவதற்கு பல்வேறு ஆப்ஷன்களில் கிடைக்க தொடங்கி இருக்கிறது. ரூ.219 விலைக்கு புதிய திட்டம் வந்திருக்கிறது. இது பைலட் பேஸ் (Pilot Phase) முறையில் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, டெஸ்டிங் முறையில் வருகிறது.

ஏற்கனவே, ரூ.149 முதல் யூடியூப் பிரீமியம் திட்டங்கள் கிடைக்கின்றன. இதுபோக ஃபேமிலி மற்றும் ஸ்டுடென்ட் என்று மொத்தம் மூன்று திட்டங்களாக மட்டுமே கிடைத்தன. இதில் ஒருவர் அல்லது 5 பேர் ஸ்ட்ரீமிங் செய்யும்படி சலுகை கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஏற்ப விலையும் அதிகமாக இருந்தது. ஆனால், இந்த புதிய திட்டம் பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது.

யூடியூப் பிரீமியம் ரூ 219 திட்ட விவரங்கள் (YouTube Premium Rs 219 Plan Details): முன்பே சொன்னதை போல இந்த பிரீமியம் திட்டத்தில் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோ ஸ்ட்ரீமிங், பேக்கிரவுண்ட் பிளே மற்றும் ஆஃப்லைன் டவுன்லோட் போன்ற சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால், இந்த பிரீமியம் திட்டத்தை பெறுவதற்கு வயது வரம்பு இருக்கிறது.

ஆகவே, 13 வயதுக்கு மேற்பட்ட யூடியூப் பிரியர்கள் மட்டுமே இந்த திட்டத்தை பெற்று கொள்ள முடியும். இந்த பிரீமியம் திட்டத்தில் மேலும் ஒருவரை ஆட் செய்து கொள்ளலாம். ஆகவே, ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களில் ஸ்ட்ரீமிங் செய்து கொள்ள முடியும். இதேபோல அடுத்தடுத்த திட்டங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த திட்டத்துக்கு ப்ரீ-ட்ரையல் சலுகை உள்ளது.

அதாவது, இந்த திட்டத்தை ஒரு மாதத்துக்கு பயன்படுத்திவிட்டு, அதன்பிறகு சந்தாவை செலுத்தி கொள்ளலாம். இப்போது பழைய திட்டங்களை பார்ப்போம். ரூ.149 விலையில் யூடியூப் பிரீமியம் திட்டம் தொடங்குகிறது. இதில் ஒருவருக்கு மட்டுமே ஸ்ட்ரீமிங் சலுகை கொடுக்கப்படும். அதே நேரத்தில் இதை பெறுவதற்கு வயது வரம்பு கிடையாது. ப்ரீ-ட்ரையல் சலுகையும் இதில் கிடையாது.

இதற்கு அடுத்து ரூ.299 விலையில் ஃபேமிலி திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஒரே நேரத்தில் 5 டிவைஸ்களில் ஸ்ட்ரீமிங் செய்து கொள்ளலாம். ஆனால், 13 வயதுக்கு மேல் இருக்கும் யூடியூப் பிரியர்கள் மட்டுமே இந்த திட்டத்தை பெற முடியும். இந்த யூடியூப் பிரீமியம் திட்டத்துக்கு ஒரு மாதத்ததுக்கு ப்ரீ-ட்ரையல் சலுகை கொடுக்கப்படுகிறது.

இதற்கு அடுத்து வெறும் ரூ.89 விலையில் யூடியூப் பிரீமியம் திட்டம் கிடைக்கிறது. ஆனால் இதை மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த அனைத்து திட்டங்களுக்கும் ஒரு மாதங்கள் மட்டுமே சந்தா கொடுக்கப்படும். அதேபோல ரூ.149 திட்டத்தை தவிர மற்ற திட்டங்களுக்கு ஒரு மாதத்துக்கு ப்ரீ-ட்ரையல் சலுகை கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
YouTube Premium Rs 219 Plan With 1 Month Subscriptions Two-person Access Check Pilot Phase Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X