இலவசமாக YouTube Premium சந்தா வேண்டுமா? அப்போ 'இதை' உடனே செய்யுங்கள்.. ஆனா..ஒரு சின்ன பிடிப்பிருக்கு..

|

YouTube என்பது உலகின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான பொழுதுபோக்கு வீடியோக்கள் மற்றும் புதிய தகவல் வழங்கும் அறிவு சார்ந்த வீடியோக்கள் என்று எண்ணில் அடங்காத பிரிவுகளில் பல டன் வீடியோக்களை இந்த தளம் கொண்டுள்ளது. கூகுளுக்குச் சொந்தமான இந்த வீடியோ இயங்குதளம், பயனர்களுக்காக 'பிரீமியம்' மாதிரி சந்தாவை அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறது. இந்த யூடியூப் பிரீமியம் சந்தாவை இலவசமாக பெற ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

YouTube Premium சந்தா எதற்காக? நார்மல் யூஸர்ஸ்களுக்கு எழும் சிக்கல் என்ன?

YouTube Premium சந்தா எதற்காக? நார்மல் யூஸர்ஸ்களுக்கு எழும் சிக்கல் என்ன?

யூடியூப் இன் பிரீமியம் சந்தா உண்மையில் என்ன செய்யும்? இதற்காக ஏன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவசமாக கிடைக்கும் நார்மல் யூடியூப் பயன்பாட்டில் இருக்கும் சிக்கல் மற்றும் தொந்தரவுகள் என்ன? சாதாரமனாக, நாம் பயன்படுத்தும் யூடியூப் பயன்பாட்டில் நாம் எண்ணில் அடங்காத வீடியோக்களை பார்வையிடுகிறோம். இந்த வீடியோக்களை நாம் பார்க்கும் போது, இடையூறாக வீடியோவிற்கு இடையில் பல விளம்பரங்கள் தோன்றி மறைகிறது. சில விளம்பரங்களை நீங்கள் 5 நொடிகளில் ஸ்கிப் செய்துவிடலாம்.

YouTube Premium சந்தா ஏன் தனித்துவமானது?

YouTube Premium சந்தா ஏன் தனித்துவமானது?

இன்னும் சில நேரங்களில், இந்த அனுபவம் மோசமாகிறது. அது தான் ஸ்கிப் செய்ய முடியாத கட்டாய விளம்பரங்கள். இந்த விளம்பரங்களை நீங்கள் முழுவதுமாக பார்த்து முடித்த பின்னர் மட்டுமே உங்கள் வீடியோவை பார்க்க அனுமதிக்கப்படுவீர்கள். இது தான் நார்மல் யூடியூப் யூசர்கள் சந்திக்கும் சிக்கல்களாகும். இந்த சிக்கல் எதையும் நீங்கள் சந்திக்க விரும்பவில்லை என்றாலோ, கூடுதலாக பிரீமியம் யூடியூப் பிரத்தியேக வீடியோக்களை பார்த்து ரசிக்க விரும்பினாலோ கட்டாயம் உங்களுக்கு YouTube Premium சந்தா தேவைப்படும்.

அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?

இலவச YouTube Premium சந்தா

இலவச YouTube Premium சந்தா

இதன் மூலம் பயனர்கள் அனைத்து பிரத்தியேக பிரீமியம் உள்ளடக்கம் வீடியோவையும் விளம்பரங்கள் இன்றி அனுபவிக்க முடியும். இப்போது, இந்தியர்களுக்கு இந்த YouTube பிரீமியம் மெம்பர்ஷிப்பை இலவசமாகப் பெற ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும், இதில் ஒரு பிடிப்பு உள்ளது என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இன்றைய சூழ்நிலையில் இலவசம் என்ற வார்த்தைக்கான அர்த்தமே மாறிவிட்டது என்பதே இதற்கான மற்றொரு காரணம். சரி, இப்போது எப்படி யூடியூப் பிரீமியம் மெம்பர்ஷிப் இலவசமாக கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?

யாருக்கெல்லாம் இந்த யூடியூப் பிரீமியம் மெம்பர்ஷிப் இலவசமாக கிடைக்கும்?

யாருக்கெல்லாம் இந்த யூடியூப் பிரீமியம் மெம்பர்ஷிப் இலவசமாக கிடைக்கும்?

தேர்ந்தெடுக்கப்பட்ட Xiaomi மற்றும் Redmi ஸ்மார்ட்போன்களை வாங்கும் பயனர்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு YouTube Premium தற்போது இலவசமாகக் கிடைக்கிறது. Xiaomi India, ஒரு அறிக்கையில், தகுதியான வாடிக்கையாளர்கள் YouTube Premium சந்தாவை மூன்று மாதங்கள் வரை இலவசமாகப் பெறுவார்கள் என்று கூறியது. Xiaomi இதைச் செய்வது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, Xiaomi இன் துணை பிராண்டுகளில் ஒன்றான Poco, பயனர்களுக்கு இதே சலுகையை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..

இவர்களுக்கு மட்டும் இந்த இலவச சலுகை கிடைக்காது

இவர்களுக்கு மட்டும் இந்த இலவச சலுகை கிடைக்காது

யூடியூப் பிரீமியம் மூலம், பயனர்கள் தங்கள் சாதனங்களில் உள்ள உள்ளடக்கத்தை மிக உயர்ந்த தரத்தில் பதிவிறக்கம் செய்து, ஆஃப்லைனில் இசை கேட்கும் அனுபவத்தை அனுபவிக்க முடியும். இருப்பினும், YouTube பிரீமியத்தை இலவசமாகப் பயன்படுத்துவதற்கான இலவசச் சலுகையை நீங்கள் ஏற்கனவே பெற்றிருந்தால், Xiaomi ஃபோன் மூலம் அதை மீண்டும் இலவசமாகப் பெறுவதற்கு நீங்கள் தகுதியான வாடிக்கையாளர் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். யூடியூப் பிரீமியம் சந்தாவை வாங்காத பயனர்களுக்கு இது நிச்சயம் பயனளிக்கும்.

இந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கஇந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

எந்த சாதனங்களின் மேல் இந்த இலவச YouTube Premium சலுகை கிடைக்கும்?

எந்த சாதனங்களின் மேல் இந்த இலவச YouTube Premium சலுகை கிடைக்கும்?

தற்போது, ​​நீங்கள் Xiaomi 11, Xiaomi 12 Pro, Xiaomi 11T அல்லது Xiaomi 11i ஐ வாங்க நினைத்தால், மூன்று மாதங்களுக்கு YouTube Premium சந்தாவை பெறத் தகுதி உடையவராவீர்கள். Redmi Note 11, Note 11S மற்றும் பல Redmi சாதனங்களை நீங்கள் வாங்கும் போது, இரண்டு மாதங்களுக்கு தகுதியான இலவச YouTube Premium சந்தா சலுகையைப் பெற முடியும். ஜனவரி 31, 2023 ஆம் தேதி வரை இந்தச் சாதனங்களை வாங்கும் போது, உங்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது. YouTube Premium பொதுவாக மாதத்திற்கு ரூ.129 என்ற கட்டணத்தை வசூலிக்கிறது. தற்போது இந்திய சந்தையில் உள்ள மற்ற OTT (ஓவர்-தி-டாப்) தளங்களை விட இது மலிவானது.

Best Mobiles in India

English summary
YouTube Premium Is Now Currently Available For Free In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X