யூடியூப் மியூசிக்: ஆல்பம் மற்றும் பாடல்களை ஆஃப்லைனில் டவுன்லோடு செய்யும் வசதி அறிமுகம்

ஆல்பங்களை ஆஃப்லைனில் பதிவு செய்ய உதவும் யூடியூப் மியூசிக்

|

யூடியூப் மியூசிக் செயலிக்கான புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் பாடல்கள், ஆல்பம் மற்றும் பிளே லிஸ்ட் உள்ளிட்டவற்றை டவுன்லோடு செய்து ஆஃப்லைனில் பயன்படுத்த முடியும்.

யூடியூப் மியூசிக்: ஆல்பம் மற்றும் பாடல்களை ஆஃப்லைனில் டவுன்லோடு செய்யு

யூடியூப் மியூசிக் செயலிக்கான புதிய அப்கிரேடு கூகுள் வழங்கியுள்ளது. யூடியூப் மியூசிக் மூலம் பாடல்கள், ஆல்பங்கள் மற்றும் பிளே லிஸ்ட் உள்ளிட்டவற்றை டவுன்லோடு செய்து ஆஃப்லைனில் பயன்படுத்த வழி செய்கிறது.

தரவுகளை ஆஃப்லைனில் பதிவு செய்யும் வதியை யூடியூப் ஏற்கனவே வீடியோ செயலியில் வழங்கி வருகிறது. யூடியூப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலியில் ஆஃப்லைன் வசகி வழங்கப்பட்ட நிலையில் இம்முறை யூடியூப் மியூசிக் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக மிக்ஸ்டேப் அம்சம் மூலம் மியூசிக்களை டவுன்லோடு செய்யும் வசதி யூடியூபில் வழங்கப்பட்டது.

ரூ.5,999/-க்கு 5000எம்ஏஎச் பேட்டரியுடன் ஐடெல் பவர்ப்ரோ பி41.!ரூ.5,999/-க்கு 5000எம்ஏஎச் பேட்டரியுடன் ஐடெல் பவர்ப்ரோ பி41.!

இம்முறை வாடிக்கையாளர்கள் யூடியூப் மியூசிக் செயலியை கொண்டு மிக எளிமையாக இசையை டவுன்லோடு செய்ய முடியும். இதற்கு மெனு ஐகான் அருகில் உள்ள சேவ் ஆஃப்லைன் எனும் ஆப்ஷனை கிளிக் செய்தாலே போதுமானது.

இந்த செயலி இசையை ஆடியோ அல்லது வீடியோவாக டவுன்லோடு செய்ய வேண்டுமா என்பதை கேட்கும், இங்கு உங்களுக்கு வேண்டிய அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்.

சமீபத்தில் கூகுள் மியூசிக் செயலியுடன் யூடியூப் மியூசிக் இணைக்கப்பட இருப்பதை யூடியூப் உறுதி செய்தது. எனினும் இது எவ்வாறு இணைக்கப்பட இருக்கிறது என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. இரு சேவைகளை இணைத்து புதிய பெயரில் இதே சேவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு சேவைகள் இணைப்பிற்கு பல்வேறு வல்லுநர்களும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஒரே நிறுவனத்தை் சேர்ந்த இரு சேவைகளை பயன்படுத்துவது குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவி வந்தது.

Best Mobiles in India

Read more about:
English summary
YouTube Music and Google Play Music will soon be merged into a single entity soon enough before which YouTube Music had unveiled a feature that allows users to save music and videos offline.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X