யாருய்யா இவரு: ஆபாச பேச்சு, பிட்காயின் முதலீடு, வெளிநாட்டு பழக்கம்- யூடியூப் மதன் அதிரடி கைது!

|

சமூகவலைதளங்களில் ஆபாச பேச்சு மூலம் பிரபலமடைந்த மதன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இதற்கிடையில் யூடியூபர் மதன் உடன் ஆன்லைனில் விளையாடும் நபர்கள் அதிகமானோர் தொழிலதிபர்கள் வாரிசாகவும் வெளிநாட்டவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதை போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மதனின் வங்கி கணக்கு குறித்து ஆய்வு

மதனின் வங்கி கணக்கு குறித்து ஆய்வு

இதையடுத்து போலீஸார் யூடியூப் மதனின் வங்கி கணக்கு குறித்து ஆய்வு செய்தனர். அதில் வங்கி கணக்குகள் முதலீடுகள் குறித்து பார்க்கையில், மதன் யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்த ரொக்கத்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் கிரிப்டோகரன்ஸியான பிட்காயினில் மதன் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிட்காயின் மதிப்பு அதிகரிப்பு

பிட்காயின் மதிப்பு அதிகரிப்பு

கிரிப்டோகரன்ஸியான பிட்காயின் மதிப்பு அதிகரிப்பு குறித்து அனைவரும் அறிந்ததே. இணையம் சார்ந்த பண பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சேர்ந்தது பிட்காயின். உலகளாவிய பணம் செலுத்தும் முறைமையாக பிட்காயின் இருக்கிறது. இதை தினசரி 24 மணிநேரம் என்ற வீதம் 365 நாட்களுக்கு பரிவர்த்தனை செய்யலாம். இந்த கிரிப்டோநாணயத்தின் மதிப்பு குறுகிய காலங்களில் பலமடங்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய குற்றப்பிரிவு போலீஸார்

மத்திய குற்றப்பிரிவு போலீஸார்

யூடியூபர் மதனின் மனைவி கிருத்திகாவை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். குடும்பத்தினர், வங்கி கணக்கு என அனைவரையும் போலீஸார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வரும் நிலையில், மதன் சரணடைய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்த போதிலும் யூடியூப் சேனலில் பெண்களுடன் பேசி மதன் வீடியோ வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் யூடியூப் மதன் தனிப்படை போலீஸாரால் தருமபுரியில் கைது செய்துள்ளனர்.

மொபைல் கேம் விளையாட அதிக ஆர்வம்

மொபைல் கேம் விளையாட அதிக ஆர்வம்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பப்ஜி மொபைல் கேமை விளையாட அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும். அதிலும் பப்ஜி மொபைல் கேம் இந்தியாவில் தடை செய்யப்பட்டாலும் விபிஎன் (VPN) முறையில் சட்டவிரோதமாக அந்த விளையாட்டை சிலர்
விளையாடி வருகின்றனர்.

எளிதில் வெல்வதற்காக டிப்ஸ்

எளிதில் வெல்வதற்காக டிப்ஸ்

இந்நிலையில் பப்ஜி உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் வீடியோ கேம்களில் எளிதில் வெல்வதற்காக டிப்ஸ் சொல்லித்தரும் வகையில் மதன்என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். குறிப்பாக ஆரம்பத்தில் மதனின் ஆபாசமான பேச்சுகளுக்கு கிடைத்தஒரு சில மோசமான வரவேற்பு டாக்ஸிக் மதன் 18+' என்கிற மற்றொரு யூடியூப் சேனலை தொடங்குவதற்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது.

யூடியூப் சேனல்களில் பதிவேற்றியுள்ள பல வீடியோக்கள்

யூடியூப் சேனல்களில் பதிவேற்றியுள்ள பல வீடியோக்கள்

மேலும் மதன் யூடியூப் சேனல்களில் பதிவேற்றியுள்ள பல வீடியோக்கள் ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் தன்னோடு ஆன்லைனில் விளையாடும் சக போட்டியாளர்களை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்மதன்.

குறிப்பாக பெண்கள் என்றால் மதன் வார்த்தைகளில் ஆபாசம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் மதனின் ஆபாச பேச்சுகள் குறித்து சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புளியந்தோப்பு சைபர் பிரிவு போலீஸார் உத்தரவிட்டிருந்தனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Youtube Madan Arrested in Dharmapuri: Police Investigate Youtube Madan Bank Account!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X