Home
News

யூடியூப் வீடியோவில் அடையாளத்தை மறைக்க புதிய வசதி!

By Super
யூடியூப் வீடியோவில் அடையாளத்தை மறைக்க புதிய வசதி!

வீடியோவில் முகத்தை மறைக்க உதவும் 'ஃபேஸ் ப்ளர்' வசதியை யூடியூப் வழங்குகிறது.

யூடியூப்பில் ஒரு நிமிடத்திற்கு 13 லட்சம் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பொழுதுபோக்கு, முக்கிய தகவல் என்று விதவிதமான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இப்படி வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் போது, அந்த வீடியோவில் இருக்கும் குறிப்பிட்ட நபரது முகம் தெரிய வேண்டாமே! என்று நினைத்தால், முகத்தை மட்டும் தெரியாதவாறு மறைக்க 'ஃபேஸ் ப்ளர்' என்ற வசதியை வழங்குகிறது யூடியூப். இந்த வசதயின் மூலம் எந்த அடையாளத்தை மறைக்க வேண்டுமோ, அதை எளிதாக மறைக்க

முடியும்.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த சுனாமி பற்றி வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த வீடியோ யூடியூபில் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது என்று பெவ் மூலம் நடத்தப்பட்டுள்ள ஆய்வில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெரும்பாலும் தங்களது போராட்டத்தை விளம்பரப்படுத்த முயன்று கொண்டிருக்கும் போராளிகளால், முக்கிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இன்று வீடியோ என்றாலே யூடியூப் என்று பலரும் சொல்லும் அளவுக்கு யூடியூப் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிறுவனத்தில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களில் முகத்தினை தெரியாத வகையில் மறைக்க ஃபேஸ் ப்ளர் என்ற வசதியை வழங்குவது மிக முக்கியமான ஒன்று தான்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X