யூடியூபில் புதிய வசதி: இனி 3 வினாடி முன்னோட்டம் பார்க்கலாம்

யூடியூப் முன்னோட்டத்தை பார்க்கும் வசதி 30 வினாடிகளுக்கு மேல் உள்ள யூடியூப் வீடியோக்களுக்கு மட்டுமே பொருந்தும்

By Siva
|

உலகின் நம்பர் ஒன் வீடியோ இணையதளமான யூடியூப் இணையதளத்தில் கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறலாம். இந்த நிலையில் இந்த இணையதளத்தில் தற்போது ஒரு குறிப்பிட்ட வீடியோவை பார்ப்பதற்கு முன்பே அதன் முன்னோட்டத்தை 3 வினாடிகள் அதன் தம்நெயிலில்(Thumbnail) பார்த்து கொள்ளலாம்.

யூடியூபில் புதிய வசதி: இனி 3 வினாடி முன்னோட்டம் பார்க்கலாம்

இதற்கு அந்த தம்நெயிலில் மவுசை வைத்தாலே போதும். பெரும்பாலான நாடுகளில் இந்த வசதி கடந்த ஜூன் மாதம் முதலே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் இன்னும் ஒருசில நாடுகளில் வரும் பிப்ரவரி முதல் அரிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது

நாம் தற்போது ஜூலை மாதத்தின் பாதியை கடந்துவிட்டோம். ஆனால் ஜூன் மாதத்திலேயே தம்ப்நெயில் மூலம் வீடியோ முன்னோட்டத்தை பார்க்கும் வசதி யூடியூபில் உள்ளது என்பது பலருக்கு தெரிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யூடியூபில் உள்ள ஹோம் பக்கத்தில் அல்லது, சியர்ச் ரிசல்ட் பக்கத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட வீடியோவை பார்க்கும் பக்கத்தில் இந்த முன்னோட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த பிரிவியூ GIF பைல்கள் போல் தோன்றும்

மேலும் இந்த முன்னோட்ட வசதி டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரில் குரோம் பிரெளசரில் 32க்கும் மேற்பட்ட வெர்ஷன்களிலும், ஓபரா பிரெளசரில் 19க்கும் மேற்பட்ட வெர்ஷனில் மட்டுமே தெரியும். இன்னும் மொபைல் வெர்ஷனுக்கு இந்த வசதி அறிமுகம் செய்யப்படவில்லை

மேலும் இந்த முன்னோட்டத்தை பார்க்கும் வசதி 30 வினாடிகளுக்கு மேல் உள்ள யூடியூப் வீடியோக்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்கும் குறைவான நேரத்தில் உள்ள வீடியோவில் இந்த வசதி இருக்காது. மேலும் லைவ் வீடியோக்களுக்கும் இந்த வசதி பொருந்தாது.

மேலும் இந்த முன்னோட்ட வீடியோ, மொத்த வீடியோவின் முதல் பாதியில் இருந்து மட்டுமே எடுக்கப்படும். ஏனெனில் முதல் பாதியில் உள்ள முன்னோட்டத்தை பார்த்தவுடனே இந்த வீடியோவை பார்க்கலாமா? வேண்டாமா? என்பதை பயனாளிகள் முடிவு செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.

யூடியூப்பர்கள் பயனாளிகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் ஒரு வீடியோவின் முன்னோட்டத்தை பார்க்க முடியாவிட்டால், அது விரைவில் எப்போது வேண்டுமானாலும் முன்னோட்டமாக இருக்காது

Best Mobiles in India

Read more about:
English summary
YouTube now shows previews for videos on its desktop website.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X