Subscribe to Gizbot

40 வருடங்களுக்கு முன்பு மாயமான நபர் யூடியூப்பில் கண்டுபிடிப்பு.!

Written By:

கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனமான யூடியூப், வீடியோ சேவைகளை வழங்கி வருகிறது. யூடியூப் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா அருகே உள்ள சான் ஃபருனோ என்ற இடத்தில் அமைந்துள்ளது.

40 வருடங்களுக்கு முன்பு மாயமான நபர் யூடியூப்பில் கண்டுபிடிப்பு.!

மணிபூர் மாநிலத்தில் இருக்கும் இம்பால் என்ற இடத்தை சேர்ந்தவர் கோம்திரம் கம்பீர் சிங்(65), இவர் கடந்த 1978-ஆம் ஆண்டு வீட்டில் இருந்து காணமால் போயிருக்கிறார். அதன்பின்பு அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.மேலும் கம்பீர் சிங் மும்பையில் இருக்கும் பல்வேறு ஆலைகளில் வேலை செய்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி மும்பை ரயில் நிலையத்தில் கம்பீர் சிங் பாடியதை வீடியோ எடுத்த ஃபேஷன் டிசைனர் ஒருவர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?

இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று கம்பீர் சிங் பாடிய வீடியோவை பார்த்த அவரின் குடும்பத்தாரால் அவர் மிக எளிமையாக அடையாளம் காணப்பட்டார்.

அதன்பின்பு இம்பால் காவல் துறையை அணுகி அவரின் புகைப்படத்தை அளித்துள்ளனர், பின்பு அவர்களும் புகைப்படத்தை மும்பை பந்த்ரா பகுதி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

40 வருடங்களுக்கு முன்பு மாயமான நபர் யூடியூப்பில் கண்டுபிடிப்பு.!

மேலும் பந்த்ரா போலீசார் புகைப்படத்துடன் ரயில் நிலையத்திற்கு சென்று கம்பீர் சிங்கை அடையாளம் கண்டுபிடித்து அழைத்து வந்துள்ளனர். மேலும் கம்பீர் சிங் தெரிவித்தது என்னவென்றால் இம்பாலில் எனது தந்தை விவசாயி, பின்பு 1976 ஆம் ஆண்டில் மும்பைக்கு வரவும் முடிவெடுத்ததை நினைவுபடுத்தினார்.

English summary
YouTube helps Manipur man reunite with family after 40 years; Read more about this in Tamil GizBot

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more