Home
News

இனி ஸ்கிப் செய்ய இயலாத 30 நொடி விளம்பரங்கள் கிடையாது-யூட்யூப்.!

ஸ்கிப் செய்ய இயலாத 30 நொடி விளம்பரங்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது யூட்யூப் அது குறித்து ஓர் பார்வை.

By Ilamparidi

உலகின் மிகப்பெரிய வீடியோ தளமான யூட்யூப் தனது வலைத்தளத்தில் அதிகப்படியான விடீயோக்களை கொண்டுள்ளது.உலகு முழுதும் தனது வலைத்தளத்திற்கென்று குறிப்பிட்ட அளவிலான பயனாளர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

அத்தகைய யூட்யூப் தனது பார்வையாளர்கள் மற்றும் பயனாளர்களுக்காக விடீயோக்களுக்கு இடையே 30 நொடிகளுக்கு ஸ்கிப் செய்ய இயலாதவகையில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

அதுகுறித்த தகவல்கள் கீழே.!

யூட்யூப்:

யூட்யூப்:

உலகின் மிகப்பெரும் இணைய உலவியான கூகுளின் வீடியோ இணையத்தளமே யூட்யூப் ஆகும்.அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த இணையத்தளமானது தனது இணையத்தளத்திற்கென்று உலகு முழுமைக்கும் அதிகப்படியான பயனாளர்கள் மற்றும் பார்வையாளர்களைக்கொண்டுள்ளது.

சேனல்:

சேனல்:

அதிகப்படியான விடீயோக்களை யூட்யூத் கொண்டிருப்பதற்கான காரணம் அதன் பயனாளர்களும் யூட் யூப்பில் தங்களுக்கென்று தனியே சேனலினை துவக்கி அதன் வழியாக தமது விடீயோக்களை பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியும்.இதன் காரணமாகவும் இந்த இணையத்தளத்திற்கென்று குறிப்பிடாத தகுந்த அளவிலான பயனாளர்கள் உள்ளனர்.

விளம்பரங்கள்:

விளம்பரங்கள்:

தனது பயனாளர்கள் வழியாக அதிகப்படியான வீடியோக்கள் பகிரப்படும் யூட்யூப்பில் பார்வையாளர்கள் விடீயோக்களை பார்த்துக்கொண்டிருக்கையிலே விளம்பரங்கள் தோன்றி ஒளிபரப்பாகும்.இதனை ஸ்கிப் செய்யவும் இயலாது.30 நொடிகள் கழித்தே ஸ்கிப் செய்ய இயலும்.இதனால் யூட்யூப் பயனாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

2018ன் துவக்கத்திலிருந்து:

2018ன் துவக்கத்திலிருந்து:

பயனாளர்கள் சிரமத்திற்கு உள்ளாவது உள்ளிட்ட காரணங்களால் தனது விளம்பரங்கள் தொடர்பான கொள்கையில் சில மாற்றங்களை அடுத்த ஆண்டின் துவக்கத்திலிருந்து மாற்ற உள்ளது.அது என்னவெனில் பயனாளர்களின் சிரமத்தினைக் குறைத்து எந்த இடையூறும் இன்றி வீடியோ பார்த்த சிறந்த அனுபவத்தினை உண்டாக்கிட வேண்டி 30 நொடி விளம்பரங்களை நிறுத்திட உள்ளதாக காம்பைன்(campaign)என்ற இதழ் தெரிவித்துள்ளது.

6 முதல் 20 நொடிகள்:

6 முதல் 20 நொடிகள்:

மேலும்,இது தொடர்பாக கூகுள் அளித்துள்ள தகவல்களின்படி 30 நொடி விளம்பரங்களுக்கு பதிலாக 6 முதல் 20 நொடி வரை ஒளிபரப்பாகக் கூடிய விளம்பரங்களை விடீயோக்களுக்கு இடையில் ஒளிபரப்பக்கூடும் எனத் தெரிகிறது.இதனை ஸ்கிப் செய்ய இயலாது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ முதல் ஏர்டெல் வரை எல்லோருக்கும் ஆப்பு.? உஷராகிக்கோ.!!

Best Mobiles in India

English summary
YouTube to finally stop showing those unskippable 30 seconds ad.Read more about this in Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X