இனி YouTube வீடியோக்களை யூடியூப் தளத்திலேயே டவுன்லோட் செய்யலாமா? புது வசதி சூப்பர்.!

|

முந்தைய காலத்தில் எல்லாரும் டிவியில் தான் பாடல்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசித்து வந்தனர். அப்போது, அதுவே நமக்கு பொக்கிஷமாகத் தெரிந்தது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியால் இவை அனைத்தும் இப்போது நம் கைகளுக்குள் வந்து விட்டது. கூகிள் நிறுவனத்தின் YouTube தான் இப்போது பெரும்பாலான மக்களுக்குப் பொழுதுபோக்காக அமைந்துள்ளது. பாடல்கள், வீடியோக்கள் என்று முழு நேரமும் மக்களை என்கேஜ்டாக வைத்துள்ளது.

முக்கியமான வீடியோ தளமாக மாறிய YouTube

முக்கியமான வீடியோ தளமாக மாறிய YouTube

முன்னர் ஓய்வு நேரத்தில் வீடியோக்கள் பார்த்து வந்த காலம் மாறி, இப்போது வீடியோ பார்ப்பதும் உருவாக்குவதுமே ஒரு வேலையாகி விட்டது. இப்போது பலரை நட்சத்திர அந்தஸ்திற்குக் கொண்டு சேர்த்துள்ள பெருமையும் இந்த ஆப்ஸிற்கு உரியது. மேலும் மிகவும் பிரபலமான நடிகர் நடிகைகள் மற்றும் மற்ற பல துறைகளைச் சார்ந்த நட்சத்திரங்கள் என்று அனைவரும் தங்களுக்கென்று ஒரு கணக்கைத் தொடங்கி தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

பல லட்சங்களில் YouTube நட்சத்திரங்கள் புரளுகிறார்களா?

பல லட்சங்களில் YouTube நட்சத்திரங்கள் புரளுகிறார்களா?

இதன் மூலம், பல லட்சங்களில் நட்சத்திரங்கள் புரளுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. நன்கு பிரபலமான நட்சத்திரங்கள் போக, இப்போது பல சாமானியரையும் நட்சத்திர அந்தஸ்திற்குக் கொண்டு சேர்க்கும் தளமாக யூடியூப் மாறியுள்ளது. இதனால், இதன் பயனாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. மக்களின் டேட்டா வேகமாக தீர்வதற்கும் இந்த ஆப்ஸ் ஒரு காரணமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SBI வங்கி கணக்குடன் ஆதார் தகவலை இணைக்கணுமா? ஆன்லைன் & ஆப்லைன் முறை டிப்ஸ் இதோ.!SBI வங்கி கணக்குடன் ஆதார் தகவலை இணைக்கணுமா? ஆன்லைன் & ஆப்லைன் முறை டிப்ஸ் இதோ.!

YouTube வீடியோக்களை டவுன்லோட் செய்ய என்ன செய்ய வேண்டும்?

YouTube வீடியோக்களை டவுன்லோட் செய்ய என்ன செய்ய வேண்டும்?

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, YouTube-ல் கோடிக்கணக்கான விடீயோக்களை நாம் பார்க்க அனுமதிக்கப்படுகிறோம். ஆனால், அவற்றை டவுன்லோட் செய்துகொள்ள YouTube நம்மை அனுமதிப்பதில்லை. இந்த வேலையை செய்வதற்கு நாம் எப்போதும், ஒரு மூன்றாம் தரப்பு ஆப்ஸ் அல்லது இணையதள பக்கத்தை நம்பி இருக்க வேண்டியதுள்ளது. இப்படிச் செய்யும் போது ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்பின் வேகம் மற்றும் இயக்கம் பாதிக்கப்படுகிறது.

YouTube Download அம்சம் அறிமுகமா? இனி டைரக்ட் டவுன்லோட் செய்யலாமா?

YouTube Download அம்சம் அறிமுகமா? இனி டைரக்ட் டவுன்லோட் செய்யலாமா?

இதற்குத் தீர்வாக தற்போது YouTube நிறுவனம் டவுன்லோட் வசதியுடன் கூடிய ஒரு அப்டேட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இப்படி ஒரு அப்டேட்டை தான் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்தனர், ஒரு வழியாக இப்போது இந்த அம்சத்தை YouTube நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சரி, இந்த அம்சத்தை எப்படிப் பயன்படுத்துவது? யாருக்கெல்லாம் இது கிடைக்கும் என்பது போன்ற விபரங்களைத் தெளிவாகப் பார்க்கலாம்.

WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!WhatsApp இல் யார் உங்களை Block செய்தார்கள் என்று தெரியனுமா? இந்த 5 டிப்ஸை பாருங்க.!

எப்படி இந்த யூடியூப் டவுன்லோடு அம்சம் செயல்படும்?

எப்படி இந்த யூடியூப் டவுன்லோடு அம்சம் செயல்படும்?

சமீபத்தில் ஷார்ட்ஸ் என்ற ஒரு புதிய அப்டேட்டை அறிமுகம் செய்த YouTube இப்போது டவுன்லோட் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உங்களுக்கு விருப்பமான வீடியோக்களை இனி நீங்கள் நேரடியாக, உங்களுடைய பிரௌசரில் இருந்தே டவுன்லோட் செய்துகொள்ளலாம். உங்கள் யூடியூப் அக்கௌன்ட்டின் கீழ் டவுன்லோட் செய்து தேவைப்படும்போது பார்த்துக்கொள்ளலாம். வேலை ரீதியாக வீடியோக்கள் பார்ப்பவர்களுக்கு இந்த அம்சம் மிகவும் உபயோகமாக இருக்கலாம்.

உங்களுக்கு பிடித்தமான குவாலிட்டியில் டவுன்லோட் செய்யலாமா?

உங்களுக்கு பிடித்தமான குவாலிட்டியில் டவுன்லோட் செய்யலாமா?

ஏனெனில் ஒவ்வொரு முறையும் தலைப்பை டைப் செய்து தேடுவது நேரத்தை விரயம் தான் ஆக்கும். அந்த சமயத்தில் இந்த டவுன்லோட் அம்சம் மிகவும் உதவிக்கரமாக இருக்கும். இந்த டவுன்லோட் பட்டன் வீடியோவிற்கு கீழ் ஷேர் மற்றும் கிளிப் பட்டன்களுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் விருப்பப்படும் வீடியோக்கு கீழ் டவுன்லோட் பட்டனை தேர்வு செய்து எந்த குவாலிட்டியில் வேண்டுமோ அதையும் தேர்வு செய்து இனி நீங்கள் டைரக்ட் ஆகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

6GB RAM உடன் மலிவு விலையில் வரும் ஒரே போன் itel Vision 3 Turbo மட்டுமே.! என்னென்ன அம்சங்கள்.!6GB RAM உடன் மலிவு விலையில் வரும் ஒரே போன் itel Vision 3 Turbo மட்டுமே.! என்னென்ன அம்சங்கள்.!

இந்த ஃபார்மட்டில் மட்டும் டவுன்லோட் செய்ய முடியாதா?

இந்த ஃபார்மட்டில் மட்டும் டவுன்லோட் செய்ய முடியாதா?

அதிகபட்சமாக முழு HD தரத்தில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இந்த வீடியோக்களை உங்கள் YouTube அக்கௌன்ட்டில் மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. MP4 வீடியோவாக பதிவிறக்கம் செய்ய முடியாது. YouTube பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு டவுன்லோட் செய்வதில் எந்த கட்டுப்படும் கிடையாது. அவர்களுக்குத் தேவையான அணைத்து வீடியோக்களையும் டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.

YouTube பிரீமியம் பயனர்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது?

YouTube பிரீமியம் பயனர்களுக்கு என்ன நன்மை கிடைக்கிறது?

ஆனால் பிரீமியம் சப்ஸ்கிரிப்ஷ்ன் இல்லாதவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வீடியோக்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அதற்கு மேல் போகும் பட்சத்தில் வீடியோ உரிமையாளர் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். தேவை பட்டால் பிரீமியம் சந்தாவை பெற்று டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்று YouTube உங்களுக்குப் பரிந்துரைகளைக் காட்டும். இந்த புதிய YouTube Download அம்சம், பயனளிக்குமா? இல்லை மக்கள் மீண்டும் மூன்றாம் தரப்பு இணையத்தளங்களையே பயன்படுத்துவார்களா என்று நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
YouTube Brings New Download Videos Feature To Download Multiple Qualities For Desktop Browser Users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X