யுட்யூப் செயலி - அப்டேட் செய்யப்பட்ட சிறப்பம்சங்கள்..!
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் கூகுள் நிறுவனம் புதிய அப்டேட் மூலம் யுட்யூப் இன்டர்பேசில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. புதிய அப்டேட்டில் மூன்று புதிய டேப்களை வழங்கி இருக்கின்றது யுட்யூப்.
அப்டேட் செய்யப்பட்ட யுட்யூப் செயலியில் ஹோம், சப்ஸ்க்ரிப்ஷன்ஸ் மற்றும் அக்கவுன்ட் என மூன்று புதிய டேப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வீடியோக்களை சுலபமாக தேட முடியும் என்பதோடு வீடியோக்களையும் பரிந்துரை செய்கின்றது.

ஹோம் டேப் இல்லாமல் அப்டேட் செய்யப்பட்ட யுட்யூப் செயலியில் புதிய வீடியோக்களை கண்டறிய சப்ஸ்க்ரிப்ஷன்ஸ் டேப் வழி வகுக்கின்றது. இதோடு சிறிய பெல் போன்ற ஐகானும் வழங்கப்பட்டுள்ளது, இது குறிப்பிட்ட சேனல்களின் புதிய வீடியோக்களை எடுத்துக்காட்டும்.
அக்கவுன்ட் டேப் மூலம் உங்களது ப்ளே லிஸ்ட், ஹிஸ்ட்ரி மற்றும் பதிவேற்றம் செய்த வீடியோ போன்றவைகளை பார்க்க முடியும். இந்த மூன்று டேப்களும் விரைவில் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதளத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications