உற்சாக செய்தி: கடைசியா யூடியூப்பில் அந்த அம்சம் வந்தாச்சு- இனி டேட்டா வீண் ஆகாது!

|

யூடியூப்பில் கடந்த நான்கு மாதங்களாக செயலியின் நெரிசலை குறைக்க இடைநிறுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்த சேவை தற்போது மீண்டும் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்

பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்

கொரோனா பரவலைத் தடுக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை செல்போனில் செலவழித்து வருகின்றனர்.

பிரதான இணைய சேவை

பிரதான இணைய சேவை

ஸ்மார்ட்போன்களில் பல்வேறு தேவைகளுக்கும் பிரதானமாக இருப்பது இணைய சேவை. ஸ்மார்ட்போன்கள் நாம் பல்வேறு பயன்பாடுகளில் உள்நுழைந்து பயன்படுத்தினாலும், ஏதாவது ஒரு காரணத்துக்கு யூடியூப் சென்றுவிடுவோம், யூடியூப் உள்ளே நுழைந்ததுதான் சமயம் எப்போது வெளியே வருவோம் என்பது நமக்கே தெரியாது.

யூடியூப்பில் நேரத்தை செலவிடும் பெரும்பாலானோர்

யூடியூப்பில் நேரத்தை செலவிடும் பெரும்பாலானோர்

அதுவும் இந்த கொரோனா காலத்தில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை ஸ்மார்ட்போனில் குறிப்பாக யூடியூப்பில் செலவிட்டு வருகின்றனர். இதையடுத்து மார்ச் மாதம் முதல் யூடியூப் செயலியின் நெரிசலைக் குறைக்க 1080 ஹெச்டி மற்றும் 720 பிக்சல் ரெசொல்யூசன் சேவையை தற்காலிமாக நிறுத்தப்பட்டன.

Airtel பயனரா நீங்க, அப்போ உஷார்! 12 லட்சம் வாடிக்கையாளர்கள் சத்தமில்லாமல் அப்ஸ்காண்ட்!

480 பிக்சல் வரை மட்டுமே ரெசல்யூஷன்

480 பிக்சல் வரை மட்டுமே ரெசல்யூஷன்

பெரும்பாலானோர் வழக்கத்தை விட அதிகமாக வீடியோக்களை பார்ப்பதாலும் அதிகரித்து வந்த பயன்பாட்டின் காரணமாகவும் செயலியின் நெரிசலை குறைக்க 480 பிக்சல் வரை மட்டுமே ரெசல்யூஷன் வழங்கப்பட்டது. நான்கு மாதங்களுக்கு பிறகு இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்ட அம்சம் மீண்டும் வந்திருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் பிரதான வீடியோ பகிர்வு இணையதளம்

உலகின் பிரதான வீடியோ பகிர்வு இணையதளம்

உலகின் பிரதான வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப் வழங்கும் முக்கிய அம்சங்களில் ஒன்றுதான் அதன் 720 பிக்சல் மற்றும் 1080 ஹெச்டி ரெசல்யூஷன் பயன்பாடாகும். தினசரி டேட்டாக்களை மீதம் வைத்து என்ன செய்வது என்ற தெரியாதவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரிதளவு மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிக்கை வழங்கவில்லை

அதிகாரப்பூர்வ அறிக்கை வழங்கவில்லை

மேலும் இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் சில பயனர்கள் ஹெச்டி ரெசல்யூஷன் மொபைல் டேட்டா மூலம் கிடைக்கவில்லை என்றும் வைபை மூலம் பயன்படுத்தும் போது மட்டுமே கிடைக்கிறது எனவும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து யூடியூப் அதிகாரப்பூர்வ அறிக்கை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

source: hindustantimes.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Youtube after 4 months bringing back hd video quality in india

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X