89 வயதான யூடியூப் கேமர் பாட்டிக்கு கின்னஸ் விருது! எதற்கு தெரியுமா?

|

வழக்கத்திற்கு மாறான சாதனைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள, அனைவரும் கின்னஸ் புத்தகத்தைத் தான் புரட்டிப் பார்க்க வேண்டும். அப்படி கின்னஸ் புத்தகத்தில் வழக்கத்திற்கு மாறான மற்றும் நம்பமுடியாத சாதனையைச் செய்ததாக 89 வயதான பாட்டி தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ளார். அதுவும் இவர் செய்த சாதனை கேமிங் தளத்தில் என்பது கூடுதல் சுவாரசியம். அப்படி இவர் என்ன சாதனையைச் செய்தார் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

 வீடியோ கேம்ஸ் யூடியூபர் ஹமகோ மோரி

வீடியோ கேம்ஸ் யூடியூபர் ஹமகோ மோரி

ஹமகோ மோரி, என்ற வீடியோ கேம்ஸ் யூடியூபர் தான் தற்பொழுது கின்னஸ் புத்தகத்தில் புதிய இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். வீடியோ கேம்ஸ் இல் புதிய சாதனையா? ஹமகோ மோரி 90 வயதை நெருங்கியுள்ளார், சரியாகச் சொன்னால் இவருக்கு 89 வயது ஆகி 280 நாட்கள் கடந்துள்ளார். மிகவும் வயதான பழமையான வீடியோ கேம் யூடியூபர் என்ற பெயரில் கின்னஸ் புத்தகத்தில் தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ளார்.

யூடியூப் நிறுவனம் பாராட்டு

கேமர் பாட்டி என்று செல்ல பெயருடன் யூடியூபில் பிரபலமான 89 வயதான ஜப்பானியப் பெண்மணி மோரி, சமீபத்தில் வயதான வீடியோ கேமர் பாட்டி என்ற காரணத்திற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாதனை செய்தியைத் தனது வீடியோ சேனல் பக்கத்தில் வெளியிட்டு பதிவேற்றம் செய்திருக்கிறார். அவரது சாதனையைக் கவனித்த யூடியூப் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அவரை பாராட்டியுள்ளது.

எங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை! எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க!எங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை! எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க!

கின்னஸ் புத்தகத்தில் உலகின் முதல் வயதான கேமர்

கின்னஸ் புத்தகத்தில் உலகின் முதல் வயதான கேமர்

கின்னஸ் புத்தகத்திற்காகத் தனது சாதனையை வெளிப்படுத்த வீடியோ ஆதாரங்களைச் சேகரிப்பது தான் கடினமாக இருந்தது என்று கேமர் பாட்டி கூறியுள்ளார். அவர் உலக சாதனைக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர், கின்னஸ் உலக சாதனையின் பிரதிநிதியின் முன் வீடியோ கேம் விளையாடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். இவரின் கேமிங் ஆட்டத்தைப் பார்த்த பிரதிநிதிகள் அனைவரும், இப்படி ஒரு சிறந்த கேமரை கண்டதில்லை என்று பாராட்டியுள்ளனர்.

தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்!தமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்!

2.5 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள்

2.5 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள்

கேமர் பாட்டி யூடியூபில் சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார், அவர் தனது சொந்த விளையாட்டு வீடியோக்களை அந்த சேனலில் ஸ்ட்ரீம் செய்கிறார். அவர் சமீபத்தில் விளையாடிய சில விளையாட்டுகள் டேஸ் கான், டான்ட்லெஸ் மற்றும் கால் ஆஃப் டூட்டி: மாடர்ன் வார்ஃபேர், பேட்டில்பீல்ட் 4, ஸ்கைரிம், ஜிடிஏ வி, ரெசிடென்ட் ஈவில் 3, ரெசிடென்ட் ஈவில் 3 ரீமேக் மற்றும் டார்க் சோல்ஸ் ஆகியவை அடங்கும்.

Best Mobiles in India

English summary
YouTube 89 Year Old Gamer Grandma Becomes The World's Oldest Gamer : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X