Home
News

அடப்பாவமே.. Google Maps செயலியை நம்பி சென்ற இருவர்.. ஆற்றில் மூழ்கிய கார்.. நடந்தது இதுதான்.!

கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலி ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. ஆனாலும் இதை சில இடங்களில் கவனமான பயன்படுத்த வேண்டும். அதாவது கூகுள் மேப்ஸ் செயலி உதவியுடன் மருத்துவமனைக்குச் சென்ற இருவர், வழி தவறி ஆற்றில் காரை விட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதாவது முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ் செயலி. முன்பெல்லாம் ஒரு இடத்திற்கு வழி தெரியவில்லை என்றால் உடனடியாக அருகில் உள்ள ஆட்டோ டிரைவர்களை தான் தேடுவோம். இடத்தை சொன்னால் போதும் எந்த இடத்தில் டிராபிக் அதிகம், எந்த வழியாகச் செல்லலாம் என அனைத்தையும் துல்லியமாக தெளிவுபடுத்தி விடுவார்கள்.

Google Maps செயலியை நம்பி சென்ற இருவர்.. ஆற்றில் மூழ்கிய கார்..

ஆனால் தற்போது போனில் உள்ள இந்த கூகுள் மேப் செயலியைத் தட்டினால் போதும் நீங்கள் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டுமோ அந்த இடத்தை துல்லியமாகக் காட்டிவிடும். குறிப்பாக இந்த செயலியில் தொடர்ந்து பயனுள்ள வகையில் பல புதிய அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்றுதான் கூறவேண்டும். எனவே தான் இந்த கூகுள் மேப்ஸ் செயலியை அதிக மக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். பெரும்பாலும் சரியான இடங்களைக் காட்டும் கூகுள் மேப்ஸ், ஒரு சில நேரங்களில் தவறான பாதையைக் காட்டி விடுகிறது.

இந்நிலையில் கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவர், தன் நண்பருடன் கர்நாடகாவில் உள்ள மருத்துவமனைக்குக் கூகுள் மேப்ஸ் உதவியுடன் சமீபத்தில் காரில் அதிகாலை சென்றுள்ளார். அப்படி செல்லும் போது பள்ளஞ்சி என்ற இடத்தில் தரைப்பாலம் இருந்துள்ளது.

Google Maps செயலியை நம்பி சென்ற இருவர்.. ஆற்றில் மூழ்கிய கார்..

அந்த பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழையால், இந்த பாலமானது மழைநீரில் மூழ்கியது. ஆனால் இது தெரியாத அப்துல் ரஷீத், சாலையில் தான் மழைநீர் தேங்கி இருக்கிறது என நினைத்து, காரை ஓட்டினார். அந்த சமயம் ஆற்றில் நீர் வேகமாகச் செல்ல, கார் அடித்துச் செல்லப்பட்டது.

அதன்பின்பு ஒரு மரத்தின் மீது மோதியதில் கார் நின்றது, அப்போது, காரின் கதவைத் திறந்து வெளியே வந்த அப்துல் ரஷீத் மற்றும் அவரது நண்பர், இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு உடனே மொபைல் போனில் தகவல் கொடுத்தனர். பின்பு சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், அப்துல் ரஷீத் மற்றும் அவரது நண்பரைப் பத்திரமாக மீட்டனர்.

Google Maps செயலியை நம்பி சென்ற இருவர்.. ஆற்றில் மூழ்கிய கார்..

அதேபோல் அவர்களது காரையும் மீட்டனர். இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. என்ன தான் அதிநவீன தொழில்நுட்பம் இருந்தாலும், அதைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். கூகுள் மேப்ஸ் செயலியில் அனைத்து அம்சங்களும் உள்ளன. ஆனாலும் குறிப்பிட்ட இடங்களில் இதைப் பயன்படுத்தும் போது நன்கு யோசிக்க வேண்டும்.

மேலும் சில வாரங்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி, கூகுள் மேப்ஸ் செயலி உடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஜெமினி-ஐ (Gemini AI) சேர்ந்து இயங்கும் வகையில் அப்டேட் செய்துள்ளது கூகுள் நிறுவனம். எனவே இதன் மூலம் நீங்கள் வாய்ஸ் கமெண்ட் வாயிலாகவே நீங்கள் போக வேண்டிய இடத்திற்குக் குறிப்புகளை பெற முடியும். அதுவும் பைக் ஓட்டும் போது இந்த இந்த ஜெமினி மற்றும் கூகுள் மேப்ஸ் உடனான உரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
youths who went to the hospital following Google Maps drove the vehicle into the river: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X