Home
News

பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் படுகாயம்.! உஷார்.!

இந்தியாவில் பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. அதுவும் இப்போது வரும் ஸ்மார்ட்போன்கள் மேம்பட்ட தொழில்நுட்ப வசதியுடன் வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் சின நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

என்னதான் அதிநவீன ஸ்மார்போன்கள் வெளிவந்தாலும், அவற்றை பயன்படுத்தும் போது கவனமான இருக்க வேண்டும். குறிப்பாக பேட்டரி சூடாவது தெரிந்தால் சிறிது நேரம் போனை ஆஃப் செய்து விடுவது நல்லது. அதேபோல் தேவையில்லாத நேரத்தில் மொபைல் டேட்டா ஆஃப் செய்து விடுவதும் நல்லது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு செல்போன் வெடித்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் படுகாயம்.!

இந்நிலையில் அதேபோன்று செல்போன் வெடிப்பு சம்பவம் கேரளாவில் மீண்டும் நடந்துள்ளது. ஆனால் இந்தமுறை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் படுகாயமடைந்துள்ளார். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கேராள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஹரிஸ் ரஹ்மான் (23) என்பவர் இந்திய ரயில்வே ஒப்பந்த ஊழியர் ஆவார். இவர் தனது பணியை வழக்கம்போல் செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததாகக் கூறப்படுகிறது. பின்பு அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் தீப்பற்றி எரிந்ததில்,அதிர்ச்சியடைந்த ரஹ்மான் கத்தியுள்ளார். இதைக் கண்ட அவரது நண்பர்கள் உடனடியாக பேண்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

அதன்பின்பு தொடைப்பகுதியில் காயங்களுடன் ரஹ்மானை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீக்காயத்துக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து ரஹ்மான் கூறும்போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய எனது மொபைல் போன் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும்.

அதேபோல் போன் வெடிப்பதற்கான காரணம் என்னவென்றால். செல்போனில் இருக்கும் பேட்டரி மட்டும்தான். பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது. அப்போது செல்போனும் தானாக வெடிக்கிறது. பேட்டரி வெடிப்பதற்குக் காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை
பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும்.

ஆனால் வேறு ஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது. எடுத்துக்காட்டாக, குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும்.

பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் படுகாயம்.!

அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுவது மிகவும்நல்லது.

குறைந்த விலை போன்களை தேர்வுசெய்வதை விட, போன்களில் இருக்கும் பாதுகாப்பு அம்சம், சிப்செட், பேட்டரி உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொண்டு அதன்பின்பு போன்களை வாங்குவது மிகவும் நல்லது. விலை சற்று உயர்வாக இருந்தாலும் நிறைய பாதுகாப்பு அம்சங்களை கொண்ட போன்களை வாங்குவது நல்லது. அதேபோல் சார்ஜ் போட்டுக்கொண்ட போன் பேசுவது, வீடியோ பார்ப்பது, கேம் விளையாடுவது போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும். அதாவது போனை முழுவதும் சார்ஜ் போட்ட பின்பு அதை எடுத்து பயன்படுத்து நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
youth suffered burns when his cell phone exploded in his pocket : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X