மகராஷ்டிரா: மழையில் செல்போன் பயன்படுத்திய வாலிபர் மரணம்.!

|

உலகளவில் செல்போன் பயன்பாடு மிகவும் அதிகமாகவே உள்ளது, குறிப்பாக நமது தினசரி வேலைகளை எளிமையாக்கும் வகையில் இந்த செல்போன் அருமையாக பயன்படுகிறது என்றே கூறவேண்டும். குறிப்பாக இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

அபிஜீத் என்ற வாலிபர்

அபிஜீத் என்ற வாலிபர்

இந்நிலையில் மகராஷ்டிராவில் மழை பெய்யும் போது, செல்போன் பயன்படுத்திய அபிஜீத் என்ற வாலிபர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகோலா மாவட்டத்தை சேர்ந்தவர்

அகோலா மாவட்டத்தை சேர்ந்தவர்

மகராஷ்டிரா மாநிலம் அருகில் உள்ள அகோலா மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஜீத் ஸ்ரீ கிருஷ்ணா, இவரின் வயது 22. இந்த வாலிபர் நேற்று வெளியில் சென்று கொண்டிருக்கும் போது தீடிரென்று மழை பெய்தது.

கடந்த ஒரு வாரத்தில் டிரெண்டுக்கு வந்த ஆண்ட்ராய்டு கேம்ஸ்!கடந்த ஒரு வாரத்தில் டிரெண்டுக்கு வந்த ஆண்ட்ராய்டு கேம்ஸ்!

மரத்தடி ஒன்றில் நின்று கொண்டார்

மரத்தடி ஒன்றில் நின்று கொண்டார்

அந்த சமயம் மழையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அபிஜீத் மரத்தடி ஒன்றில் நின்று கொண்டார் என்று கூறப்படுகிறது. அப்போது செல்போனில் தனது நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் செல்போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மின்னல் தாக்கி உயிரழந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரூ.12,490-விலையில் மூன்று ரியர் கேமராக்களுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை12.!ரூ.12,490-விலையில் மூன்று ரியர் கேமராக்களுடன் விற்பனைக்கு வரும் விவோ வ்யை12.!

செல்போன் கதிர்வீச்சு

செல்போன் கதிர்வீச்சு

குறிப்பாக மழை பெய்து கொண்டிருக்கும் போது செல்போன் பயன்படுத்தியதால் தான் அபிஜித் உயிரழந்தார் என முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஏற்கனவே அவர் மரத்தடியில் நின்று கொண்டிருந்ததால், செல்போன் கதிர்வீச்சு, மின்னல் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்பு இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.

Best Mobiles in India

English summary
Youth loses life for using mobile phone in rain : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X