நாம ஜெயிச்சிட்டோம் மாறா: இலகுரக விமானம் கண்டுபிடித்த காரைக்குடி இளைஞர்.! இதில் என்ன சிறப்பு தெரியுமா?

|

இந்தியாவில் உள்ள இளைஞர்கள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய புதிய சாதனங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இலகுர விமானத்தைக் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். மேலும் இதன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரைச் சேர்ந்தவர் எபினேசர் (வயது29). குறிப்பாக இவர் கண்டனூர் சிட்டாலாட்சி உயர்நிலைப் பள்ளியில் படித்து அதன்பிறகு அமெரிக்கா சென்று அங்கு ஏரோநாட்டிக்கல் படித்துள்ளார். தற்போது விமான பைலட்டாக பணியாற்றி வருகிறார்.

நாம ஜெயிச்சிட்டோம் மாறா: இலகுரக விமானம் கண்டுபிடித்த காரைக்குடி இளைஞர்

இந்நிலையில் நடுத்தர குடும்பங்கள் கூட சொந்தமாக விமானத்தை வாங்கும் வகையில் சிறிய வகை விமானத்தைக் கண்டுபிடித்து விரைவில் சோதனை ஓட்டமாகக் காரைக்கு அருகே செட்டிநாடு பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் விமான ஓடுதளத்தில் இயக்க உள்ளதாகத் தெரிவித்தார் எபினேசர்.

இதில் என்ன சிறப்பு?
அதாவது கார் வாங்கும் மக்கள் அதேவிலையில் குட்டி விமானத்தை வாங்கும் வகையில் தற்போது இந்த சிறிய இலகுரக விமானத்தை கண்டுபிடித்து உள்ளேன் என்று கூறிய எபினேசர், இந்த விமானம் எடை குறைந்த அலுமினியத்தால் செய்யப்பட்டது என்றும், இதில் மூன்று வகையான டேங்க் பொருத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதில் முதலாவது உப்பு தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து பயன்படுத்துவது, 2-வது டேங்கில் பாக்டீரியாவில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து பயன்படுத்துவது, கடைசி டேங்கில் இருந்து சாதாரண பெட்ரோலை பயன்படுத்தி இயக்குவது என கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக இந்த மூன்று வகையான டேங்க் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தெரிவித்தார் எபினேசர்.

அதேபோல் அவர் உருவாக்கிய இந்த விமானத்தில் ஒருவர் அல்லது 2 பேர் அமர்ந்து பயணம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த விமானம் 11 ஆயிரம் அடி உயரத்தில் 5 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு இதில் ஒரு மணி நேரத்திற்குள் 100 கிலோ மீட்டர் செல்லலாம் எனவும், 314 சி.சி.யுடன் 34 குதிரை திறன் கொண்ட என்ஜின் இந்த விமானத்தில் பொருத்தப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

நாம ஜெயிச்சிட்டோம் மாறா: இலகுரக விமானம் கண்டுபிடித்த காரைக்குடி இளைஞர்

குறிப்பாக இந்த விமானத்தை இயக்க 100 மீட்டர் ஓடுதளம் போதுமானதாகும். பின்பு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விமான பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் இந்த விமானத்தை வாங்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் விமானம் வெளிநாட்டில் ரூ.40 முதல் 60 லட்சம் விலையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விமானத்தை என்சிசி, போலிஸ், கடலோர பாதுகாப்புப் படை, வனத்துறையினர் என அனைவரும் பயன்படுத்தலாம் எனவும், அரசு எனக்கு அனுமதி கொடுத்தால் அனைவருக்கும் பயிற்சி அளிக்க தயாராக உள்ளதாகவும் எபினேசர் தெரிவித்தார். மேலும் இந்த விமானத்தைக் காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட விமான ஓடுதளத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்த மத்திய அரசின் விமான போக்குவரத்துத் துறையிடமும்,உச்சிப்புள்ளியில் உள்ள இந்திய விமான படை தளத்தில் எபினேசர் அனுமதி கேட்டுள்ளதாகத் தெரிகிறது.

நாம ஜெயிச்சிட்டோம் மாறா: இலகுரக விமானம் கண்டுபிடித்த காரைக்குடி இளைஞர்

எனவே விரைவில் அனைத்து அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விமான ஓடுதளத்தில் இந்த விமானத்தை இயக்கி சோதனை ஓட்டம் நடத்த உள்ளேன் என்று தெரிவித்தார் கண்டனூரைச் சேர்ந்த எபினேசர். அதேபோல் தற்போது இந்த சிறிய ரக விமானம் குறித்து அப்பகுதி முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

photo courtesy: news18.com

Best Mobiles in India

English summary
youth from Karaikudi village made a light aircraft at low cost: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X