இந்திய Iron man: மின்னணு கழிவுகளில் இளைஞர் உருவாக்கிய அயர்ன் மேன்!

|

மணிப்பூரைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் மின்னணு கழிவுகளின் மூலம் அயர்ன் மேன் கவசத்தை தயாரித்துள்ளார்.

சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் மேல் அதீத ஈர்ப்பு

சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் மேல் அதீத ஈர்ப்பு

மணிப்பூர் மாவட்டம் தவ்பால் பகுதியை சேர்ந்தவர் நிங்கோம்பம் பிரேம். 20 வயதான இவர் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் மேல் அதீத ஈர்ப்பு கொண்டு இருந்துள்ளார். இதன் காரணமாக பிரேம், அயர்ன் மேன் கதாபாத்திர உடையை ரேடியோ டிவி போன்ற மின்னணு கழிவுகளில் தயாரித்துள்ளார்.

மார்வெலின் பிரதான கதாபாத்திரமான அயர்ன் மேன்

மார்வெலின் பிரதான கதாபாத்திரமான அயர்ன் மேன்

சூப்பர் ஹீரோ ஈர்ப்பு காரணமாக மார்வெலின் பிரதான கதாபாத்திரமான அயர்ன் மேன் கவசத்தை அவர் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து பிரேம் கூறுகையில், தனது குழந்தை பருவத்தில் இருந்து ஒரு ரோபோவை உருவாக்க வேண்டும் என விரும்பியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அயர்ன் மேன் உடையை தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் 2015-ல் தொடங்கியது என கூறினார்.

ரேடியோ மற்றும் தொலைக்காட்சி கழிவுகள்

ரேடியோ மற்றும் தொலைக்காட்சி கழிவுகள்

அயர்ன் மேன் கவசத்தில் பெரும்பாலான பாகங்கள் மின்னணு கழிவுகளில் இருந்து சேகரித்ததாகவும், இவைகள் அனைத்தும் ரேடியோ கடைகள் மற்றும் தொலைக்காட்சி பொருட்களால் தயாரிக்கப்பட்டவை. பிரத்யேக பொருட்கள் வாங்க முடியவில்லை என்பதால் இதன் கழிவுகள் மூலம் பொருட்கள் உருவாக்கியதாக கூறினார்.

சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!

பயிற்சி ஏதும் பெறவில்லை

பயிற்சி ஏதும் பெறவில்லை

இதற்கென பயிற்சி ஏதும் பெறவில்லை என்று கூறிய பிரேம் அயர்ன் மேன் மீதான ஆர்வம் மட்டுமே இந்த கவசத்தை உருவாக்க முடிந்தது என கூறினார். அயர்ன் மேன் கவசத்தின் பெரும்பாலான இயக்கங்கள் மோட்டார்களிலும், உடல் பாகங்கள் அட்டைப் பெட்டிகளாலும் தயாரிக்கப்பட்டவை.

அயர்ன் மேன் கவசம்

அயர்ன் மேன் கவசம்

அதோடு இதில் தூக்கி எரியப்பட்ட மின்னணு பொருட்கள், எமர்ஜென்சி லைட், சிரஞ்ச்சுகள், ஸ்பீக்கர், சிறிய வகை எலக்ட்ரானிக் பொம்மை பாகங்கள் உள்ளிட்டவை கொண்டு இவைகள் உருவாக்கப்பட்டதாக பிரேம் கூறியுள்ளார். மேலும் அவரது வீட்டில் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையான சிலிந்தி வரவழைக்கும் இயந்திரம் ஒன்றையும் பிரேம் தயாரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

பிரேமுக்கு நிதி வழங்குமாறு அரசிடம் கோரிக்கை

பிரேமுக்கு நிதி வழங்குமாறு அரசிடம் கோரிக்கை

இதுபோன்ற சிறந்த சாதனங்களை உருவாக்க பிரேமுக்கு நிதி வழங்குமாறு அரசிடம் அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். பிரேம், தனது படைப்புகளை பேஸ்புக்கில் பதிவேற்றியதையடுத்து, ​​இதேபோல் பலவற்றை உருவாக்குமாறு மக்கள் அவரிடம் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.

source: republicworld

image: twitter @PoliceThoubal

Best Mobiles in India

English summary
youth created a replica of Marvel's iconic character 'Iron Man' out of electronic waste

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X