போதுமான இளம்பெண்கள் இல்லையே: டேட்டிங் ஆப் மீது ஆத்திரமடைந்து வழக்கு தொடர்ந்த இளைஞர்!

|

இணையதளத்தில் மிகக் குறைவான பெண்களே இருப்பதாக குற்றம் சாட்டிய அதன் வாடிக்கையாளர் இந்த செயலியின் ஆபரேட்டர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக டென்வர் போஸ்ட் தெரிவித்துள்ளது.

பிரபல டேட்டிங் ஆப்

பிரபல டேட்டிங் ஆப்

பிரபல டேட்டிங் ஆப் மீது இளைஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த ஆப்பில் 25-35 வயதுக்குட்பட்ட பெண்கள் ஏணையோர் இருக்கின்றனர் எனவும் இந்த அணுகலுக்கு டேட்டிங் ஆப்பில் மெம்பர்ஷிப் பெற வேண்டும் எனக் கூறி தன்னை மெம்பர்ஷிப் பெற வைத்து ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதில் பெண்கள் தட்டுப்பாடு அதிகளவில் இல்லை எனக் குறிப்பிட்டு அந்த இளைஞர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

டேட்டிங் ஆப் பயன்பாடு

டேட்டிங் ஆப் பயன்பாடு

குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் கொரோனா தொடங்கிய காலம் முதல் டேட்டிங் ஆப் பயன்பாடுகளானது அதிகரித்துக் கொண்டே வருகிறது. டேட்டிங் ஆப் பட்டியல் அதிகரித்து அதை பணம் செலுத்தி மெம்பர்ஷிப் பெறுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. நீங்கள் விரும்பும் ஒருவரை ஆன்லைன் கண்டுபிடித்து பேசுவது என்பது எளிதாகி விட்டது.

9409 டாலர் செலுத்தி மெம்பர்ஷிப்

9409 டாலர் செலுத்தி மெம்பர்ஷிப்

இதுதொடர்பான ஒரு விஷயத்தில் தான் அமெரிக்க இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார். அமெரிக்காவின் டென்வர் பகுதியை சேர்ந்த டேட்டிங் ஆப் ஆனது தங்களது செயலியில் 25 - 35 வயதிலுள்ள பெண்கள் ஏணையோர் இருக்கிறார்கள் என விளம்பரம் செய்துள்ளது. தடையின்றி சேட்டிங் செய்வதற்கு மெம்பர்ஷிப் பெற வேண்டும் என்றால் பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இயன் கிராஸ் என்ற 29 வயதான இளைஞர் ஒருவர் 9409 டாலர் அதாவது இந்திய மதிப்புப்படி 7.05 லட்சம் ரூபாய் செலுத்தி மெம்பர்ஷிப்பை பெற்றுள்ளார்.

35 வயதுக்குள் மொத்தமே 5 பெண்கள்

35 வயதுக்குள் மொத்தமே 5 பெண்கள்

இணைய அணுகலுக்கு மெம்பர்ஷிப் செலுத்தி உள்ளே சென்றவருக்கு ஏமாற்றமே எஞ்சி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த டேட்டிங் ஆப்பில் 35 வயதுக்குள் மொத்தமே 5 பெண்கள் இருந்திருக்கின்றனர். இதை பார்த்ததும் அந்த நபர் பெருமளவு ஆத்திரமடைந்து வழக்கு தொடர முன்வந்துள்ளார். இந்த வழக்கில் அந்த இளைஞர், The Denver Dating Co. ஐ நடத்தும் HMZ குழுமம் ஆனது அதன் தரவுத்தளத்திந் உண்மை தன்மையை மிகைப்படுத்தியாக குற்றம் சாட்டியுள்ளார். இளைஞர் அந்த நிறுவனத்திடம் இருந்து நஷ்ட ஈடு கோரி இருக்கிறார். அந்த ஆப்பில் மிகக் குறைவான பதிவு பெற்ற பெண்களே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவான ஆண்ட்ராய்டு சாதனங்கள்

பொதுவான ஆண்ட்ராய்டு சாதனங்கள்

பொதுவாக ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு செயலிகள் தேவைப்படும் பட்சத்தில், அதை பதிவிறக்கம் செய்வதற்கு கூகுள் ப்ளே ஸ்டோர் பாதுகாப்பான ஆதாரமாகக் கருதப்படுகிறது. பெரும்பாலானோர் ஆப்ஸ்கள் குறித்து கேள்விபட்டாலும் அது ப்ளேஸ்டோரில் இருந்தால் மட்டுமே பதிவிறக்கம் செய்வார்கள். காரணம் ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஆப்ஸ், பாதுகாப்பானது என்ற நம்பகத்தன்மையே ஆகும்.

டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட்

டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட்

டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட் சமீபத்தில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி அதை கசியவிடக்கூடிய தவறான உள்ளமைவோடு இருக்கும் 19000-க்கும் மேற்பட்ட பயன்பாடுகளை இருப்பதை கண்டறிந்தது. ஃபயர்பேஸ் தரவுத்தளத்தின் தவறான உள்ளமைவின் மூலம் 19,300 செயலிகள் பயனர் தரவை திருடி அதை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் என அவாஸ்ட் குறிப்பிட்டது. ஃபயர்பேஸ் என்பது பயனர் தரவை சேமிக்கக்கூடிய ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் பயன்படுத்தக் கூடிய கருவியாகும்.

பயனர்களின் பெயர்கள், முகவரிகள், இருப்பிடத் தரவு

பயனர்களின் பெயர்கள், முகவரிகள், இருப்பிடத் தரவு

இந்த செயலிகளை பயன்படுத்தும் பயனர்களின் பெயர்கள், முகவரிகள், இருப்பிடத் தரவு மற்றும் சில சமயங்களில் கடவுச்சொற்கள் போன்ற தகவல்களையும் சேமித்து வெளியிடலாம். அவாஸ்ட் தனது கண்டுபிடிப்புகளை கூகுளுக்கு அறிவித்துள்ளது. இதன்மூலம் செயலியை உருவாக்க டெவலப்பர்களுக்கு தகவல் தெரிவிக்க முடியும் என அவாஸ்ட் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்தது.

10% பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள்

10% பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள்

இது உடற்பயிற்சி, கேமிங், மெயில், உணவு விநியோகம் மற்றும் பலவற்றோடு தொடர்புடைய பயன்பாடுகளை பாதிக்கிறது. இந்த பிரச்சனை ஆனது ஐரோப்போ, தென்கிழக்கு ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் காணப்பட்டதாக தெரிவித்தது. அவாஸ்ட் த்ரெட் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள், ஃபயர்பேஸ் அடிப்படையிலான ஆப்ஸ்களின் 10% பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தில் இருக்கக்கூடும் என குறிப்பிட்டனர். இதுகுறித்து அவாஸ்ட் நிறுவனம் கூகுளுக்கு எச்சரிக்கை விடுத்தது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Youth Complained About Dating App that he was Cheated by Fake Advertisement

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X