Home
News

பலே சைபர்போலீஸ்.,குழந்தைகள் ஆபாச பட விவகாரத்தில் ஒருவர் கைது:எப்படி சிக்கினான்,எத்தனை வயது தெரியுமா?

ஆபாச படம் பதிவேற்றம் மற்றும் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் பரவவிட்ட ஒருவன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

என்.சி.எம்.இ.சி, என்ற அமைப்பு

என்.சி.எம்.இ.சி, என்ற அமைப்பு

என்.சி.எம்.இ.சி, என்ற அமைப்பு இந்திய தேசிய குற்றப் பதிவு பணியகத்துக்கு அறிக்கை ஒன்று அனுப்பியது. 1984 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸால் நிறுவப்பட்ட அமைப்பு தான் என்.சி.எம்.இ.சி.

லாப நோக்கற்ற அமைப்பு

லாப நோக்கற்ற அமைப்பு

இந்த அமைப்பானது குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள், குழந்தைகள் துன்புறுத்துப்படுவதில் இருந்து தடுப்பதற்காக தொடங்கப்பட்ட லாப நோக்கற்ற அமைப்பாகும்.

குழந்தைகள் பாதிப்பு குறித்து அறிக்கை

குழந்தைகள் பாதிப்பு குறித்து அறிக்கை

இந்த அமைப்பு குறித்து இந்திய உள்துறை அமைச்சக வட்டாரம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு இந்திய அரசு என்.சி.எம்.இ.சி அமைப்புடம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அது, வருடந்தோறும் இந்தியாவில் குழந்தைகள் பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்த அமைப்பிடம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும்.

 25,000 குழந்தைகள் ஆபாசப்படம்

25,000 குழந்தைகள் ஆபாசப்படம்

இந்த நிலையில் என்.சி.எம்.இ.சி அமைப்பு ஜனவரி 23 ஆம் தேதி வரையிலான இந்திய குழந்தைகள் பாதிப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் ஜனவரி 23 ஆம் தேதிவரை, கடந்த ஐந்து மாதங்களில் 25,000 குழந்தைகள் ஆபாசப்படம் இந்தியாவில் இருந்து பல்வேறு இணையதளங்களில் பதிவேற்றம் செய்து உலாவருவதாக தெரிவித்துள்ளது.

டெல்லியில் தான் அதிகம்

டெல்லியில் தான் அதிகம்

இதிலும் இந்த பதிவேற்றமானது டெல்லியில் தான் அதிகம் நடந்துள்ளதாக என்.சி.எம்.இ.சி அமைப்பின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுத்தக்கட்டமாக மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் அது அரங்கேறியுள்ளது.

 பதிவேற்றம் குறித்து விசாரணை

பதிவேற்றம் குறித்து விசாரணை

இந்த புகார் குறித்து மகாராஷ்டிரா மூத்த ஐபிஎஸ் அதிகாரி தெரிவிக்கையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், பதிவேற்றம் செய்யப்பட்ட இடம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாகவே 7 எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

operation Black face

operation Black face

அதேபோல் மகாராஷ்டிராவின் மும்பை, தானே, புனே போன்ற பகுதிகளில் தான் இதுபோன்ற புகார்கள் அதிகமாக வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவில் operation Black face என்ற தலைப்பில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மட்டுமின்றி டெல்லி, குஜராத், கேரளா போன்ற பகுதிகளில் சைபர் கிரைம் பிரிவி போலீஸார்கள் சிலரை கைது செய்துள்ளனர்.

ஆபாச படம் பதிவேற்றம் தொடர்பாக ஒருவர் கைது

ஆபாச படம் பதிவேற்றம் தொடர்பாக ஒருவர் கைது

இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் ஆபாச படம் பதிவேற்றம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் பரவவிட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

18 வயதுக்கு கீழ் உள்ளவர் என தகவல்

18 வயதுக்கு கீழ் உள்ளவர் என தகவல்

சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் கொடுத்த தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் சோராப் தாலுக்காவில் வசித்து வந்தவர் என்றும் அவர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீஸார் கைது செய்து விசாரணை

போலீஸார் கைது செய்து விசாரணை

கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல இணையத்தில் ஆபாச படம் பதிவேற்றம் தொடர்பாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவரது ஐபி அட்ரஸ் மற்றும் மொபைல் கால் ரெக்கார்ட் மூலம் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து இவரை போலீஸார் கைதுள்ளனர்.

Source: indiatimes.com

Best Mobiles in India

English summary
Youth arrest for uploading porn videos in Karnataka
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X