இத்தனை நாளா இது தெரியுமே போச்சே.. உங்க போனை ரொம்ப தப்பா சார்ஜ் போடுறீங்க.. கடைகாரங்க உண்மையை சொல்லிட்டாங்க..
புது ஸ்மார்ட்போனை (smartphone) வாங்கிய உடன் சில கடைக்காரர்கள், முதல் முறை சார்ஜ் செய்யும் பொழுது புது போனை 8 மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இதை சரியான முறை என்று நம்பி பலர், இந்த செயல்முறையை பின்பற்றுகிறோம். ஆனால், தற்போதைய ஸ்மார்ட்போன்களில் இந்த செயல்முறையை பின்பற்றுவது மிகவும் தவறானது என்றும், பெரும்பாலான மக்கள் இப்போது அவர்களின் ஸ்மார்ட்போனை தவறாக தான் சார்ஜ் (wrong charging habits) செய்கிறார்கள் என்றும் விவரம் தெரிந்த கடைக்காரர் உண்மையை போட்டுடைத்திருக்கிறார். காரணம் மற்றும் தெளிவான விளக்கங்களை வழங்கியுள்ளார்.
பொதுவாக ஸ்மார்ட்போன் பேட்டரிகள் (smartphone battery) நிக்கல் கேட்மியம் (Nickel Cadmium) அல்லது லித்தியம் (Lithium) அல்லது லித்தியம் பாலிமர் (Lithium Polymer) ஆகிய பொருட்களினால் உருவாக்கப்படும். சமீப காலமாக மட்டுமே லித்தியம் அயான் (Lithium ion) மற்றும் லித்தியம் அயான் பாலிமர் (Lithium ion polymer) பேட்டரிகள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உங்க போனை ரொம்ப தப்பா சார்ஜ் போடுறீங்க.. கடைகாரங்க உண்மையை சொல்லிட்டாங்க:
முந்தைய தலைமுறை ஸ்மார்ட் போன்களில் நிக்கல் காட்மியம் பேட்டரிகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த நிக்கல் காட்மியம் பேட்டரிகளுக்கு தான் முதல் முறை சார்ஜ் செய்யப்படும் பொழுது அடையும் அதிகபட்ச சார்ஜிங் அளவை (charging level) ஞாபகம் வைத்துக் கொள்ளும் இயல்பு உண்டு. இதன் காரணமாகத்தான் ஆரம்ப காலம் முதல், புதிய போன் வாங்கியவுடன் அதன் பேட்டரியை எட்டு மணி நேரம் சார்ஜிங்கில் (8 hours battery charging) வைக்க அறிவுரை கூறப்படும்.
அப்படி எட்டு மணி நேரம் சார்ஜிங் செய்யும் பொழுது, அந்த பேட்டரிகள் அதன் அதிகபட்ச கொள்ளளவை அடைந்து விடும். இதன் மூலம் பேட்டரியின் திறன் அதிகமாக இருக்கும். இந்த காரணத்திற்காகத்தான் நிக்கல் காட்மியம் பேட்டரிகள் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் ஃபோன்களை வாங்கிய புதிதில் 8 மணி நேரம் சார்ஜிங்கில் போட அறிவுறுத்தப்படும்.
புது Mobile போனை 8 மணி நேரம் சார்ஜிங் செய்யலாமா? வேண்டாமா?
ஆனால், சமீப காலமாக நிக்கல் காட்மியம் பேட்டரிகளின் பயன்பாடு குறைந்து; லித்தியம் அயான் மற்றும் லித்தியம் பாலிமர் பேட்டரிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த லித்தியம் பாலிமர் பேட்டரிகளுக்கு தனது அதிகபட்ச கொள்ளளவை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே, இந்த பேட்டரிகள் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனை வாங்கிய புதிதில் 8 மணி நேரம் சார்ஜிங் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை.
அதேபோல, ஒவ்வொரு முறை மொபைல் சார்ஜிங் (mobile charging) செய்யும் பொழுதும் 100% அடைய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. எப்போதுமே ஒரு பேட்டரி 0% -த்தில் சார்ஜிங் செய்ய ஆரம்பித்து 100% அடைவதை ஒரு சார்ஜிங் சைக்கிள் (Charging Cycle) என்று குறிப்பிடுவோம். ஒவ்வொரு பேட்டரிக்கும் குறிப்பிட்ட முறைதான் சார்ஜிங் செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருக்கும்.
இந்த தவறை மட்டும் நாம் சார்ஜ் செய்யும் பொழுது நாம் செய்யவே கூடாது:
அந்தக் குறிப்பிட்ட முறை சார்ஜிங் சைக்கிள் முடிந்தவுடன் அந்த பேட்டரியின் வாழ்நாள் (mobile battery lifetime) முடிந்து விடும். எனவே, ஒரு போன் பேட்டரியை அதிக நாட்கள் பயன்படுத்த அந்த பேட்டரியில் இருக்கும் சார்ஜ் 20%-த்திற்கு கீழ் செல்லாமலும், 95%-த்திற்கும் மேல் சார்ஜிங் ஆகாமலும் பார்த்துக் கொள்வது அவசியம். இதன் மூலம் சார்ஜிங் சைக்கிள் பயன்படுத்தப்பட்ட எண்ணிக்கை நாம் கட்டுப்படுத்த முடியும்.
அதாவது, உங்கள் ஸ்மார்ட் போனின் சார்ஜ் 65% இருக்கும்பொழுது நீங்கள் அதை சார்ஜில் போட்டால், அது ஒரு சார்ஜிங் சைக்கிளாக கருதப்படாது. அந்த பேட்டரியில் இருக்கும் சார்ஜ் முற்றிலுமாக ட்ரைன் (drain) ஆன பிறகு சார்ஜ் போட ஆரம்பித்து, அது 100% அடையும் பொழுது அதனை சார்ஜிங்கில் இருந்து எடுத்தால் மட்டுமே அது ஒரு சார்ஜிங் சைக்கிளாக கருதப்படும். இந்த தவறான முறையை தான் நாம் அனைவரும் உடனே நிறுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க இனி வாங்கிய புதிதில் 8 மணி நேரம் சார்ஜிங் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. அதே போல ஒவ்வொரு முறை சார்ஜிங் செய்யும் பொழுதும் 20%-த்தில் ஆரம்பித்து 80% வரை சார்ஜிங் செய்தால் மட்டும் போதும். முழு கொள்ளளவை அடைய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது பேட்டரியின் திறனை பாதிக்க மட்டுமே செய்யும் என்பதை தெரிந்துகொண்டு சார்ஜ் செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








