Home
News

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு செல்லப்போகும் PF பணம்? EPFO-வின் புதிய முதலீட்டுத் திட்டம்! இதோ விவரம்..

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, பிஎஃப் சந்தாதாரர்களின் பணத்தைப் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வட்டி வழங்கி வருகிறது. இந்நிலையில், வழக்கமான முதலீடுகளுடன் புதிய முதலீட்டு வாய்ப்புகளையும் பயன்படுத்த ஈபிஎஃப்ஓ திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பிஎஃப் பணத்தில் குறிப்பிட்ட அளவை ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்துப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

ஈபிஎஃப்ஓ அமைப்பின் புதிய வருடாந்திர நிதி வருவாயில் இருந்து 3 சதவீதம் வரை மாற்று முதலீட்டு நிதிகளில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சுமார் 30 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஈபிஎஃப்ஓ அமைப்பு, ரூ.30 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதியை நிர்வகித்து வருகிறது. இந்த நிதிக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் வகையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சந்தாதாரர்களுக்கு வட்டி வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு செல்லப்போகும் PF பணம்?

இந்தப் புதிய திட்டத்தின்படி, இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியின் கட்டுப்பாட்டில் செயல்படும் வகை I மற்றும் வகை II மாற்று முதலீட்டு நிதிகளில் (AIF) முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை கடன் பத்திரங்கள் உள்ளிட்ட பாரம்பரிய முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த நிலையில், இனி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளிட்ட புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படலாம்.

EPFO முதலீட்டுக் குழுவின் இந்தப் பரிந்துரை, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மத்திய அறங்காவலர் குழுக் கூட்டத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்தக் கூட்டம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. குழுவின் ஒப்புதல் கிடைத்தால், புதிய முதலீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமின்றி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தனியார் பங்கு முதலீட்டு நிதிகள், ரியல் எஸ்டேட் நிதிகள் மற்றும் தனியார் கடன் நிதிகள் போன்றவற்றிலும் பிஎஃப் பணம் முதலீடு செய்யப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் புதிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் ஆதரவு கிடைக்கலாம்.

அதே நேரத்தில், இந்த முதலீடுகளுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளன. ஈபிஎஃப்ஓ அமைப்பு ஏஐஎஃப் நிதிகளில் குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். மேலும், வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ முதலீடு செய்வதற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு செல்லப்போகும் PF பணம்?

EPFO அமைப்பு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான சந்தாதாரர்களுக்கு வட்டி வழங்குவதுடன், ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியத் தொகையையும் வழங்க வேண்டியுள்ளது. எனவே, புதிய முதலீடுகள் மூலம் வருமானத்தை அதிகரிப்பதுடன், உறுப்பினர்களுக்கான பணப் பட்டுவாடாவும் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வது முக்கியமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், பிஎஃப் பணத்தை மாற்று முதலீட்டு நிதிகளில் முதலீடு செய்வதற்கான திட்டம் இன்னும் பரிசீலனை நிலையிலேயே உள்ளது. மத்திய அறங்காவலர் குழுவின் ஒப்புதல் மற்றும் இறுதி வழிகாட்டுதல்கள் வெளியான பிறகே இந்தத் திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் தெரியவரும். எனவே, பிஎஃப் சந்தாதாரர்களின் பணம் எந்த அளவுக்கு இந்த முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் என்பது அதிகாரப்பூர்வ முடிவுக்குப் பிறகே உறுதியாகும்.

Best Mobiles in India

English summary
Your PF Money May Soon Flow Into Startups! EPFO Plans a New Investment Strategy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X