வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் உள்ளதா என்று சரி பார்க்க இதை பண்ணுங்க.!
மக்களவைத் தேர்தல்கள் நெருங்கி வரும் நேரத்தில், இந்தியாவின் குடிமகனாக நீங்கள் வாக்களிக்க வேண்டுமெனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் பதிவாகி இருப்பது மிக முக்கியமான விஷயம்.
மக்களவைத் தேர்தல்கள் நெருங்கி வரும் நேரத்தில், இந்தியாவின் குடிமகனாக நீங்கள் வாக்களிக்க வேண்டுமெனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் பதிவாகி இருப்பது மிக முக்கியமான விஷயம்.
வாக்காளர் பட்டியல் என்பது இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட பெயர்களின் பட்டியலாகும். இதில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதிற்குட்பட்ட அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுவது வழக்கம்.

அடையாள அட்டை
இந்த அடையாள அட்டையில் உள்ள எண்களைக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் தான் மக்கள் அவர்களின் வாக்குச்சாவடிக்குச் சென்று எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிக்க முடியும்.

தேர்தல் ஆணையம் வலைத்தளம்
உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதாக என்பதை அறிவதற்கு, இந்தியா தேர்தல் ஆணையம் வலைத்தளம் ஒன்றை உருவாகியுள்ளது. இதில் உங்களின் பெயர் மற்றும் விபரங்களை டைப் செய்து உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று தெரிந்துகொள்ளலாம்.

சோதித்து பார்த்துக்கொள்ள எளிய முறை
அல்லது உங்களின் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள வாக்காளர் எண்ணை இந்த https://electoralsearch.in/ வலைத்தளத்தில் பதிவு செய்து சோதித்து பார்த்துக்கொள்ளலாம் என்ற எளிய முறையைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பெயர் பட்டியலில் இல்லை என்றால் இதை செய்யுங்கள்:
உங்கள் பெயர் மற்றும் உங்கள் குடும்பத்தினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று இந்த வலைத்தளம் மூலம் சரிபார்த்துக்கொள்ளுங்கள். உங்களின் பெயர்கள் பட்டியலில் இல்லை என்றால் https://www.nvsp.in/ இந்த வலைத்தளத்தில் உள்ள ஃபார்ம் 7 நிரப்பிச் சமர்ப்பியுங்கள், தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications