Home
News

உங்க iPhone அடுத்த மாதம் முதல் வேலை செய்யாமல் போகலாம்! திடீர் அறிவிப்பால் கடுப்பில் ஐபோன் பயணர்கள்!

ஐபோன் பயனர்களுக்காக ஒரு அவசர எச்சரிக்கை செய்தி வெளியாகியுள்ளது. இதன்படி, ஐபோன் பட்டியலில் உள்ள சாதனங்களுக்கு சில முக்கிய சேவைகள் நிரந்தரமாக துண்டிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். இந்த பட்டியலில் உள்ள ஐபோனில், உங்கள் போன் இருக்கிறதா என்று செக் செய்யுங்கள்.

திட்டமிடப்பட்ட ஐபோன் மேம்படுத்தல் ஒரு குறிப்பிட்ட சாதனத்தின் பயனர்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஆப்பிள் நிபுணர் ஒருவர் அவசர எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார். ஐபோன் பயனர்கள் தங்கள் போன்களை உடனே ஐபோனின் மிக சமீபத்திய iOS பதிப்பிற்கு விரைந்து அப்டேட் செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பயனர்கள் அப்டேட் செய்யத் தவறினால், எதிர்காலத்தில் அவர்கள் தங்கள் ஐபோனின் அணுகலை இழக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.

உங்க iPhone அடுத்த மாதம் முதல் வேலை செய்யாமல் போகலாம்! ஏன்?

ஏனென்றால், iOS இன் பழைய பதிப்பு இனி ஐபோன்களில் கிடைக்கும் சில முக்கியமான அம்சங்களை கிடைக்க செய்யாது என்று உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அப்டேட் செய்யாத ஐபோன் பயனர்களுக்கு இனி மேப் சேவை கிடைக்காது. அதாவது அவர்களின் நகரத்திற்குச் செல்வதற்கான வரைபடங்களுக்கான அணுகல் துண்டிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், ஐபோனின் வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆன Siri அம்சம், அத்தியாவசிய பயன்பாடுகளுக்கான App Store மற்றும் பல முக்கியமான சேவைகளை பயனர்கள் இனி சரியான அப்டேட் இல்லாமல் பயன்படுத்த முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஐபோன் பயனர்கள் அத்தியாவசிய செயல்பாடுகளை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட் iOS 11.2.6 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஐபோன்களில் கவனம் செலுத்துகிறது. இந்த அப்டேட்டிற்கு மாறாவிட்டால் அதன் பயனர்கள் முக்கிய மென்பொருளைப் பயன்படுத்த முடியாது. iPhone 5 மற்றும் பழைய சாதனங்கள் இதனால் பாதிக்கப்படும். இருப்பினும், ஐபோன் 7-ஐ பயன்படுத்துபவர்கள் கூட தங்கள் சாதனத்தை அப்டேட் செய்யாவிட்டால், கட்டாயம் ஏதேனும் சேவைகளை பயன்படுத்துவதில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

உங்க iPhone அடுத்த மாதம் முதல் வேலை செய்யாமல் போகலாம்! ஏன்?

இந்த நடவடிக்கை குறித்து ஆப்பிள் இன்சைடர் @StellaFudge ட்வீட் செய்துள்ளார். ஆகையால், ஆப்பிள் ஐபோன் பயனர்கள் உடனே அவர்களுடைய சாதனத்தை அப்டேட் செய்யும்படி வலியுறுத்தப்படுகிறார்கள். உங்கள் ஐபோனை அப்டேட் செய்ய கூறி, நோட்டிபிகேஷன் வரவில்லை என்றால், அதை நீங்களே விரைவாகச் செய்யலாம். உங்கள் மொபைல் ஃபோனில் செட்டிங்ஸ் சென்று, General > Software Update தேர்ந்தெடுக்கவும்.

IPHONE 7 மற்றும் அதற்குப் பிந்தையவர்கள் தங்கள் சாதனங்களை விரைவில் அப்டேட் செய்ய வேண்டும். புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மேம்படுத்தல்களைப் பயன்படுத்த, iPhone 7 ஐ iOS 15-க்கு அப்டேட் செய்ய முடியும். இருப்பினும், ஐபோன் 7 iOS 16-ஐ ஆதரிக்காது என்பதை நினைவில் கொள்ளவும். ஐபோன் பயனர்கள் தங்கள் சாதனங்களைப் புதுப்பிக்குமாறு நிறுவனம் அறிவுறுத்துகிறது. இதனால் பயனர்கள் தொடர்ந்து சேவைகளைப் பயன்படுத்த முடியும்.

உங்கள் ஐபோனில் இனி App Store, Siri மற்றும் Maps போன்ற Apple சேவைகளை ஆதரிக்கவில்லை என்றால், நீங்கள் உடனே அப்டேட் செய்து பார்த்து, பிழையை நீக்கலாம். இந்தச் சேவைகளைத் தொடர்ந்து பயன்படுத்த, உங்கள் மென்பொருளை சமீபத்திய பதிப்பிற்கு அப்டேட் செய்வது முக்கியம்.

Best Mobiles in India

English summary
Your iPhone may not work from next month update immediately to avoid key essential functions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X