ஜூலை 1 : மொபைல்போன் கட்டணம் உயர்வு.!

ஏர்டெல் நிறுவனம் தற்போது கூறியுள்ள அறிக்கையில் மொபைல் கட்டணங்கள் 15சதவிகிதம் முதல் 18சதவிகிதம் வரை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

By Prakash
|

வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி பொருட்கள் மற்றும் சேவைகள் வரி அனைத்தும் அதிகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் உங்கள் ரீசார்ஜ் தொகை கண்டிப்பாக அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

பல்வேறு தரப்பினரும் இங்கு ஜிஎஸ்டியை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மேலும் அவர்கள் கூறும் கருத்துகளை அனைத்துக் கட்சி குழு ஒன்று கவனத்தில் ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து நிறுவனங்களின் டிடிஎச் சேவை பொறுத்தமட்டில் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் டிடிஎச் சேவைக்கு தற்போது 15 சதவீகித சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

  ஜிஎஸ்டி:

ஜிஎஸ்டி:

இந்தியாவில் ஜூலை 1 ஆம் தேதி ஜிஎஸ்டி பொருட்கள் மற்றும் சேவைகள் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால்,பல்வேறு ரீசார்ஜ் கட்டணங்கள் அதிகரிக்கும் என அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தகவல் தெரிவித்துள்ளது.

 ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் நிறுவனம் தற்போது கூறியுள்ள அறிக்கையில் மொபைல் கட்டணங்கள் 15சதவிகிதம் முதல் 18சதவிகிதம் வரை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு மக்களுக்கு சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது.

டிடிஎச்:

டிடிஎச்:

அனைத்து நிறுவனங்களின் டிடிஎச் சேவை பொறுத்தமட்டில் பல்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.மேலும் டிடிஎச் சேவைக்கு தற்போது 15 சதவீகித சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது.

 எஸ்டிடி மற்றும் லோக்கல் :

எஸ்டிடி மற்றும் லோக்கல் :

எஸ்டிடி மற்றும் லோக்கல் அழைப்புகளுக்கு ஒரு நொடிக்கு ஒரு பைசா வீதம் 1 நிமிடத்திற்கு 60 பைசா என்று இருந்த கட்டணம், இனி 1 நிமிடத்திற்கு 1.20 பைசா என்று உயர்த்தப்படவுள்ளது. அதேபோல் மொபைல்போனில் இருந்து லேண்ட் லைன் போன்களுக்கு பேசவும் கட்டணம் உயரவுள்ளது.

வோடபோன்:

வோடபோன்:

போஸ்ட் பெய்ட் உபயோகிப்பாளர்களுக்கு 20 சதவீத கட்டண உயர்வை ஏற்கனவே வோடபோன் நிறுவனம் அமல்படுத்தி உள்ளது. மற்ற மாநிலங்களிலும் படிப்படியாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ப்ளிக்பார்ட்:

ப்ளிக்பார்ட்:

ஜிஎஸ்டி வரி விதிப்பு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அதிநவீன மாடல்களுக்கு ப்ளிக்பார்ட் விலைக்குறைப்பை செய்துள்ளது. பிளிப்கார்ட் மட்டுமின்றி மேலும் பல இகாமர்ஸ் நிறுவனங்களும் போட்டி போட்டு ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்து வருவதால் புதியதாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு இது சரியான தருணம் என்றே கருதப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Your broadband mobile bills go up from next month; Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X