நம் வயது, இருப்பிடம் போன்ற தரவுகளுக்கு விலை ரூ350!

|

கூகுள், பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏராளமான பயனர் தரவுகளை வைத்துள்ளன என்பதில் இரகசியம் ஏதுமில்லை. அவற்றை விளம்பரதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுவதன் மூலமே அவர்கள் பணம் சம்பாதிக்கின்றனர்.

கூகிள், பேஸ்புக் மற்றும் அமேசான்

கூகிள், பேஸ்புக் மற்றும் அமேசான்

ஆனால் புதிய அமெரிக்க சட்டத்தின் படி, கூகிள், பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள், அவர்களிடம் உள்ள தனிப்பட்ட பயனர் தரவுகளின் மதிப்பு எவ்வளவு என்பதை வெளிப்படுத்துவது கட்டாயம் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நமக்கான மதிப்பு என்ன ?

நமக்கான மதிப்பு என்ன ?

நாம் இலவசமாக சேவைகளை பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு கைமாறாக வேறு எதையோ வழங்குகிறோம் என பொருள். அந்த சேவைகளை வழங்கும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் நம்மை ஒரு பொருளாகவும் பார்ப்பதையும், அதன் பார்வையில் நமக்கான மதிப்பு என்ன என்று நாம் அறிந்திருக்க வேண்டும். இதில் அர்த்தமுள்ளது தானே?

இன்று: சலுகையுடன் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன்.!இன்று: சலுகையுடன் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன்.!

விளம்பர வருவாய்

விளம்பர வருவாய்

அமெரிக்க செனட்டர்களான மார்க் வார்னர் மற்றும் ஜோஷ் ஹாவ்லி இதேபோல சிந்தித்தனர். அதன் விளைவாக தொழில்நுட்ப நிறுவனங்கள் மக்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தி விளம்பர வருவாய் மூலம் பில்லியன் கணக்கான டாலர்களை சம்பாதிக்கும், டிஜிட்டல் இன்டர்நெட் யுகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் முழு வெளிப்பாடு தேவைப்படும் வகையிலான ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.!ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.!

சில மதிப்பீடுகளின் படி

சில மதிப்பீடுகளின் படி

ஒரு பயனரின் வயது, இருப்பிடம் மற்றும் உறவு நிலை ஆகிய தகவல்களின் மதிப்பு $ 5 டாலர் (கிட்டத்தட்ட ரூ .350) அல்லது அதற்கும் அதிகமான மதிப்புள்ளதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள்

பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள்

இந்த மசோதா சட்டமாக மாறினால் கூகிள், ஃபேஸ்புக், அமேசான், ட்விட்டர் மற்றும் பிற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், பயனர்களிடம் இருந்து இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் என்ன தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன மற்றும் அவற்றின் மதிப்பு என்ன என்பதைப்பற்றி பயனர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு 90 நாட்களுக்கு ஒருமறை அறிக்கை அனுப்புவது கட்டாயமாகும்.

கால் ஆஃப் டூட்டி கேம்: ஆண்ட்ராய்டு போனில் டவுன்லோட் செய்து விளையாடுவது எப்படி?கால் ஆஃப் டூட்டி கேம்: ஆண்ட்ராய்டு போனில் டவுன்லோட் செய்து விளையாடுவது எப்படி?

வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல்

வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல்

தற்போது திட்டமிடப்பட்டுள்ள இந்த சட்டமானது சுருக்கமாக டேஷ்போர்டு( Designing Accounting Safeguards to Help Broaden Oversight and Regulations on Data Act -DASHBOARD)என்று பெயரிடப்பட்டுள்ளது. கணக்குகளை பாதுகாத்து வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் ஒழுங்குமுறைகளை விரிவுபடுத்துவதற்கான வடிவமைக்கப்படும் சட்டம்.

கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ!கூடைப் பந்து எறிதலில் கின்னஸ் சாதனை படைத்த டொயோட்டா ரோபோ!

நேரம் வந்துவிட்டதா... இல்லையா?

நேரம் வந்துவிட்டதா... இல்லையா?

கூகிள், பேஸ்புக், அமேசான் போன்ற சில நிறுவனங்கள் தொழில்நுட்பத்தின் மூலம் மட்டுமே நமது கிரகத்தின் மிகப்பெரிய நிறுவனங்களாக இல்லாமல், பயனர் தரவுகளை விளம்பரதாரர்களுக்கு விற்பனை செய்யப்படுவதன் காரணமாகவே இந்ந நிலையில் உள்ளன. மற்றும் ஹேக்கிங் தனியுரிமை மோசடி மற்றும் பிற சிக்கல்கள் காரணமாக, தரவுகளின் உரிமையாளர்கள் கடந்த காலங்களில் சுரண்டப்பட்டுள்ளனர்.


அந்நிறுவனங்கள் தங்களது பயனர்களுக்கு பதிலளித்தவேண்டிய நேரம் வந்துவிட்டதா... இல்லையா?

Best Mobiles in India

English summary
your-age-location-and-relationship-data-is-worth-at-least-rs-350-for-facebook-google : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X