Home
News

முடியை மோப்பம் பிடித்த கரடி: செல்பி எடுக்கமுயன்ற இளம்பெண்- என்ன நடந்தது தெரியுமா? (வீடியோ)

மெக்சிகோவில் மலையேற்றத்துக்கு சென்று கொண்டிருக்கும்போது இளம்பெண்கள் அருகில் திடீரென கரடி ஒன்று வந்த நிலையில் அந்த இளம்பெண் கரடியுடன் செல்பி எடுத்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்

வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும்

பொதுவாக வனப்பகுதிகள், மலைகிராமங்களுக்கு பயணிக்கும் போது திடீரென விலங்கள் வந்தால் அதை தொந்தரவு செய்யாமல் கடந்து சென்று விட வேண்டும். அதே விலங்கு அருகில் வந்தால் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் அல்லது முடிந்தளவு நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதே வழக்கம்.

செல்பியில் கவனம்

செல்பியில் கவனம்

இருப்பினும் இந்த காலத்தில் ஏதேனும் விலங்குகளை பார்த்ததும் ஓடிவிட வேண்டும் அல்லது தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று உடனடியாக சிலரின் எண்ணம் செல்பியை நோக்கியும் கைகள் செல்போனை நோக்கியும் செல்கிறது.

செல்பி எடுக்கும் முயற்சியில் அசம்பாவதிங்கள்

செல்பி எடுக்கும் முயற்சியில் அசம்பாவதிங்கள்

பலர் செல்பி எடுக்கும் முயற்சியில் உயிரிழந்த சம்பவமும் பெரிதளவிலான விபத்துக்கள் என அசம்பாவிதங்கள் அரங்கேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. செல்பி குறித்த விழிப்புணர்கள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் ஆபத்து உணராத சிலர் இக்கட்டான சூழ்நிலைகளில் பயன்படுத்துகின்றனர்.

திடீரென வந்த கரடி

திடீரென வந்த கரடி

இந்த நிலையில் மெக்சிகோவில் இளம்பெண்கள் உட்பட சிலர் மலையேறி சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் திடீரென கரடி ஒன்று வந்துள்ளது. அதை பார்த்ததும் சிலர் அச்சத்தில் அதிர்ந்தபடி நின்றுள்ளனர். ஓடினால் கரடி துரத்திவிடுமோ என சிலர் அதே இடத்தில் அசையாமல் இருந்துள்ளனர்.

பெண்ணின் தலைமுடியை மோப்பம் படித்த கரடி

அப்போது அந்த கரடி இளம்பெண் ஒருவர் அருகில் வந்து இரண்டு காலால் நின்று அந்த பெண்ணின் தலைமுடியை மோப்பம் படித்தது. பின்னர் தொடர்ந்து அந்த பெண்ணின் வித்தியாதசத்தை உணர்ந்து தொட்டு பார்த்தது. அந்த பெண் அசையாமல் இருந்தது கரடி அங்கிருந்து நகர்ந்து சென்றது.

சமூகவலைதளங்களில் வைரலாகும் வீடியோ

ஆனால் கரடி பெண்ணின் முடியை மோப்பம் பிடித்தபோது அந்த பெண் உடனே செல்போனை எடுத்து செல்பி எடுக்க முயன்றார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை வியந்து பதிவிட்டு வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Young Women Takes Selfie with Black Bear Video Went Viral on Social Media
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X