கோவை அருகே செல்போன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்து: மாணவர் உயிரிழப்பு.!

|

லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட் சாதனங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக சார்ஜ் செய்து கொண்டே இதபோன்ற சாதனங்களை பயன்படுத்துவது மிகவும் தவறு. அதேபோல் ஸ்மார்ட்போன் சூடாக இருந்தால் கொஞ்ச நேரம் அதை பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது.

 கோவை அருகே செல்போன் வெடித்து

இந்நிலையில் கோவை அருகே செல்போன் வெடித்து ஏற்பட்ட தீ வீபத்தில் காயமடைந்த ஒரு கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றிஇறந்தார். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கோவையில் இருக்கும்

அதாவது கோவையில் இருக்கும் மதுக்கரை காந்தி நகரை சேர்தவர் மயில்சாமி (57). இவரது மகன் சிவராம் (18) கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி தகவல் தொழில்நுட்பம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

புதிய Vivo T1 மற்றும் Vivo T1X பற்றிய சுவாரசிய தகவல்.. அடுத்த அறிமுகத்திற்கு ரெடியாகிறதா விவோ?புதிய Vivo T1 மற்றும் Vivo T1X பற்றிய சுவாரசிய தகவல்.. அடுத்த அறிமுகத்திற்கு ரெடியாகிறதா விவோ?

கடந்த 10-ம் தேதி இரவு வழக்கம்போல்

சிவராம் கடந்த 10-ம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டில் தனது அறையில் படுக்கையில் இருந்தவாறு செல்போன் உபயோகித்துள்ளார். அதன்பின்பு அந்த செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே தூங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. மறுநாள் அதிகாலை நேரத்தில் மின் இணைப்பில் இருந்த அந்த செல்போன் வெடித்துள்ளது.

மாதிரி இல்ல ஒரிஜினல்- பூமிக்கு வந்துட்டாங்க: 12 நாட்கள் விண்வெளியில் வெற்றிகரமாக நடந்த படப்படிப்புமாதிரி இல்ல ஒரிஜினல்- பூமிக்கு வந்துட்டாங்க: 12 நாட்கள் விண்வெளியில் வெற்றிகரமாக நடந்த படப்படிப்பு

அந்தசமயம் ஏற்பட்ட

அந்தசமயம் ஏற்பட்ட தீ சிவராமின் படுக்கையில் பரவி, அவர் மீது பற்றியது. இதில் அவரின் உடலில் பல்வேறு பகுதிகளில் தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனே அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சிவராம் உயிரிழந்தார்.

பசுமை பட்டாசு என்றால் என்ன? இந்த தீபாவளிக்காவது பசுமை பட்டாசு கிடைக்குமா? தெரிஞ்சு பத்தவைங்க..பசுமை பட்டாசு என்றால் என்ன? இந்த தீபாவளிக்காவது பசுமை பட்டாசு கிடைக்குமா? தெரிஞ்சு பத்தவைங்க..

ம் போது செல்போன் வெ

தற்போதைய காலக் கட்டத்தில் செல்போன் இல்லாத இளைஞர்களை கணக்கிட்டால் விரல்விட்டு எண்ணிவிடலாம். குறிப்பாக ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் போட்டிப்போட்டுக் கொண்டு, அனைவரையும் ஈர்க்கும் விதமாக புதிய செல்போன் மாடல்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் செல்போன் தொடர்பாக அவ்வப்போது அதிர்ச்சியூட்டும் செய்திகளில் ஒன்று செல்போன் வெடிக்கும் சம்பவம். அதாவது சார்ஜ் போட்டுக் கொண்டே போன் பேசும் போது செல்போன் வெடித்தது, பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்தது, தூங்கிக் கொண்டிருக்கும்போது செல்போன் வெடித்தது என பலவகை நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது.

நடுத்தர விலையில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்- சும்மா இல்ல கூடுதல் தள்ளுபடியுடன் அமேசானில் வாங்கலாம்!நடுத்தர விலையில் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்- சும்மா இல்ல கூடுதல் தள்ளுபடியுடன் அமேசானில் வாங்கலாம்!

மொபைல் சாதனங்களை சார்ஜ்

குறிப்பாக மொபைல் சாதனங்களை சார்ஜ் செய்தபடி பேசுவது மிகவும் தவறு. பின்பு மொபைல்போன் அல்லது புளூடூத் சாதனம் சூடாக இருந்தால் சிறிது நேரம் பயன்படுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது. மேலும் செல்போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். ஆனால் வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது, இதனால் பிரச்சனை வரும். எனவே அந்தந்த செல்போனுக்குதகுந்த சார்ஜர் மட்டும் பயன்படுத்தினால் மிகவும் நல்லது.

 செல்போனை உங்கள்

அதேபோல் செல்போனை உங்கள் தலையணையின் கீழ் வைக்க கூடாது, அது மிகவும் ஆபத்து. பின்பு நீங்கள் வாங்கும் போனுக்கு ஒரிஜினல் சார்ஜரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. அடுத்து ஸ்மார்ட்போன் கீழே விழுவதை தவிருங்கள், இது பேட்டரியை சேதம் செய்யும், பின்பு மின்கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக போன் சார்ஜில் இருக்கும்போது பேசுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

News Source: timesofindia

Best Mobiles in India

English summary
Cellphone explodes and fire dies student: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X