செல்பி மோகம்: பாலத்தில் நின்று செல்பி- சென்னை கூவம் ஆற்றில் தவறி உள்ளே விழுந்த இளைஞர்!

|

பலர் செல்பி எடுக்கும் முயற்சியில் உயிரிழந்த சம்பவமும் பெரிதளவிலான விபத்துக்கள் என அசம்பாவிதங்கள் அரங்கேறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. செல்பி குறித்த விழிப்புணர்கள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதன் ஆபத்து உணராத சிலர் இக்கட்டான சூழ்நிலைகளில் பயன்படுத்துகின்றனர். பொதுவாக வனப்பகுதிகள், மலைகிராமங்களுக்கு பயணிக்கும் போது திடீரென விலங்குகள் வந்தால் அதை தொந்தரவு செய்யாமல் கடந்து சென்று விட வேண்டும். அதே விலங்கு அருகில் வந்தால் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் அல்லது முடிந்தளவு நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதே வழக்கம்.

அதிகரிக்கும் செல்பி மோகம்

அதிகரிக்கும் செல்பி மோகம்

இருப்பினும் இந்த காலத்தில் ஏதேனும் விலங்குகளை பார்த்ததும் ஓடிவிட வேண்டும் அல்லது தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று உடனடியாக சிலரின் எண்ணம் செல்பியை நோக்கியும் கைகள் செல்போனை நோக்கியும் செல்கிறது. விலங்குகள் மட்டுமின்றி திருமணநிகழ்வுகளில் தொடங்கி துக்க நிகழ்வுகள் வரை அனைத்தில் செல்பி பங்கு பிரதானமாக இருக்கிறது. பொதுவாக புகைப்படம் என்பது நெஞ்சோடு ஒட்டிக் கொள்ளும் நினைவு. அதை பாதுகாப்போடு கவனமாக எடுத்தால் நினைவாக இருக்கும்.

தவறிவிழுந்த 30 வயது இளைஞர்

தவறிவிழுந்த 30 வயது இளைஞர்

இந்த நிலையில் நேப்பியர் பாலத்தில் இருந்து தவறிவிழுந்த 30 வயது இளைஞர் ஒருவரை அண்ணா சதுக்க காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு மீட்புப்படையினர் உதவியுடன் மீட்டனர். தனியார் நிறுவனத்தின் பணியாற்றி வந்த 30 வயது இளைஞர் காலை 7 மணியளவில் கூவம் ஆற்றில் தவறி விழுந்தார். கூவம் ஆறில் இருந்து சிறிய காயங்களுடன் மீட்கப்பட்ட அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டு சிகிச்சைக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

கூவம் ஆற்றுக்குள் தவறி விழுந்த இளைஞர்

கூவம் ஆற்றுக்குள் தவறி விழுந்த இளைஞர்

இதுகுறித்து தகவல் தெரிவிக்கையில், சென்னையில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த அந்த இளைஞர் திடீரென கூவம் ஆற்றுக்குள் தவறி விழுந்தார். இவரை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாகமீட்டனர். இந்த நபர் சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர். நேப்பியர் பாலம் அருகே செல்பி எடுத்துக் கொண்டிருந்த போது அவர் கூவம் ஆற்றுக்குள் தவறி விழுந்தார்.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட இளைஞர்

பாதுகாப்பாக மீட்கப்பட்ட இளைஞர்

கூவம் ஆற்றில் இளைஞர் தவறி விழுந்தது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்புத் துறை வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி இளைஞரை மீட்டனர். மேலும் கூவர் ஆற்றில் நீர் மட்டம் குறைவாக இருந்த காரணத்தால் இளைஞருக்கு அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பு மீட்கப்பட்டது. மேலும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Young Rescued Who Fallen in Chennai Koovam River For Trying to take Selfie

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X