இது டம்மி பாபுஜி- பிளிப்கார்ட்டில் கேமரா ஆர்டர் செய்த இளைஞர்: திறந்து பார்த்ததும் காத்திருந்த அதிர்ச்சி!

|

ஆன்லைன் ஆர்டர் வழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் முறை

ஆன்லைன் ஷாப்பிங் முறை

கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர். கூடுதலாக ஆன்லைனில் சலுகைகளும் வழங்கப்படுகிறது.

300-டி கேமரா ஆர்டர்

300-டி கேமரா ஆர்டர்

சென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் சமீபத்தில் பிளிப்கார்ட்டில் நடைபெற்ற டமாக்கா ஆஃபர் மூலம் கேனான் 300-டி கேமராவை ஆர்டர் செய்துள்ளார். இந்த கேமராவின் அசல் விலை ரூ.28,500 ஆகும் ஆஃபர் தின சலுகையில் இந்த கேமராவை இவர் ரூ.26,500 என ஆர்டர் செய்துள்ளார். இந்த கேமராவை கோடக் மஹேந்திரா வங்கி மூலம் 12 மாத தவணை முறையில் ஆர்டர் செய்திருக்கிறார்.

பிரித்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி

பிரித்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி

இந்த நிலையில் கேமரா பார்சல் டெலிவரி வந்துள்ளது. தான் ஆர்டர் செய்த கேமரா வந்துவிட்டது என்ற ஆசையாக திறந்து பார்த்துள்ளார். அதில் கேனான் கேமரா சீல் செய்யப்பட்ட பார்சல் இருந்திருக்கிறது. அதை பிரித்து பார்த்தபோது ஒரு பழைய பொம்மை கேமரா மற்றும் பெயிண்ட் டப்பா ஒன்றும் இருந்துள்ளது.

மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி அறிவுறுத்தல்

மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி அறிவுறுத்தல்

இதனால் அதிர்ந்து போன வினோத், நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் அவருக்கு தகுந்த பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து வினோத், இந்த நிகழ்வு குறித்து புதுவண்ணார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திவரும் காவல்துறையினர் ஆன்லைனில் இதுபோன்ற மோசடி செயல் தொடர்ந்து நடைபெறுவதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா பரிசோதனை மாதிரி

கொரோனா பரிசோதனை மாதிரி

இதேபோல் அமெரிக்காவை சேர்ந்த ஆண்ட்ரியா எல்லிஸ் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது பாட்டி வீட்டு தோட்டத்தை அலங்கரிக்க கடந்த சில வாரங்களுக்கு முன் வண்ணக் கொடிகளை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். பார்சலுக்குள் வண்ணக் கொடிகளுடன் வித்தியாசமான பாக்கெட் ஒன்று இருந்துள்ளது. அந்த பாக்கெட்டை எடுத்து எல்லிஸ் பார்த்த போது அதில் Biohazard (உயிருக்கு ஆபத்து) என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பைக்குள் ஒருவரின் கொரோனா பரிசோதனை மாதிரி இருந்ததை கண்டு எல்லிஸ் அதிர்ச்சி அடைந்தார்.

பூனைக்குட்டிக்கு பதிலாக புலிக்குட்டி

பூனைக்குட்டிக்கு பதிலாக புலிக்குட்டி

பிரான்ஸ் நாட்டு தம்பதிகள் சவானா பூனையை செல்லப்பிராணியாக வளர்க்க திட்டமிட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். ர்டர் செய்த பூனை வீட்டுக்கு வந்துள்ளது. பூனைக்குட்டியை ஆசை ஆசையாக தம்பதிகள் வளர்க்கத் தொடங்கினர். ஒரு வாரத்தில் பூனைக்குட்டியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. பின் சந்தேகமடைந்து விசாரித்ததில் இது பூனைக்குட்டி இல்லை புலிக்குட்டி என்பது தெரியவந்தது. அது வன உயிரியல் காப்பதுக்கு அனுப்பப்பட்டது.

ஸ்மார்ட்போனுக்கு பதிலாக துணிதுவைக்கும் சோப்

ஸ்மார்ட்போனுக்கு பதிலாக துணிதுவைக்கும் சோப்

சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் ஆன்லைன் தளம் மூலம் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்தார். ஆர்டர் செய்த பொருள் வீட்டுக்கு வந்த நிலையில் அதில் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போனுக்கு பதிலாக உள்ளே துணிதுவைக்கும் சோப்புகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Young Received a Fake Camera and Paint Box Instead of 300D Camera in Online Delivery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X