சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு: ப்ளூடூத் அமைப்புடன் கூடிய விக் : வசமாக சிக்கிய இளைஞர்.!
இப்போது உள்ள சில தொழில்நுட்ப சாதனங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். ஆனால் இந்த தொழில்நுட்ப சாதனங்களை தேவையான இடத்தில் மட்டும் பயன்படுத்தினால் மிகவும் நல்லது. அதாவது உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அரசுத் தேர்வில் செய்த நூதன மோசடி ஒன்று அனைவரையும் அதிரச் செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வில் கலந்துகொள்ள வந்திருந்தவர்களை, தேர்வு வளாகத்திற்கு அனுப்புவதற்கு முன்பு சோதனை செய்து போலீசார் அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயம் 27 வயதுடைய இளைஞர் ஒருவரை சோதனை செய்த போது போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். அதாவது தேர்வில் ஏமாற்றி தேர்ச்சி பெற வேண்டி, அந்த இளைஞர் தலையில் ப்ளூடூத் அமைப்புடன் கூடிய விக் ஒன்றை அணிந்திருந்தார். இதனுடன் காதில் இயர்போனையும் வைத்திருந்தார். குறிப்பாக அந்த இளைஞரின் காதில் இருந்த இயர்போன் அளவு மிகவும் சிறியது என்பதால், அதனை இளைஞரின் காதில் இருந்து போலீசாரால் அகற்ற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மோசடியில் ஈடுபட்ட அந்த இளைஞரை, தற்போது போலீசார் பிடித்து சென்றுள்ளனர். குறிப்பாக இது தொடர்பான வீடியோ ஒன்றை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் ஷர்மான தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது இளைஞர் செய்த மோசடி செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது என்றுதான் கூறவேண்டும்.மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பல்வேறு பொதுமக்கள் இதுதொடர்பாக பல விதமான கமெண்ட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சில தொழில்நுட்ப சாதனங்களைதேவையான இடத்தில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. அதேபோல் தேர்வில் வெற்றிபெற நேர்மையான வழிகள் பல உள்ளன. ஆனால் இப்படி ஒரு குறுக்கு வழியை தேர்வு செய்வது எப்போதும் வெற்றியை தராது.

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், பயிற்சியும், முயற்சியும் மட்டுமே உங்களை வெற்றிபெற வைக்கும். அதேபோல் இப்போது சிலர் டிவி, செல்போன்களில் தான் மூழ்கியிருக்கிறார்கள். இதனால் உடல்நலமும் மனநலமும்தான் பாதிக்கப்படுகிறது. எனவே உங்களுடைய நேரத்தில் வீணடிக்கும் அந்த செயல்களைத் தவிர்த்து உங்களுடைய பொன்னான நேரத்தை அனைத்து விதத்திலும் பயன்தரும் வாசிப்புக்கு பயன்படுத்துங்கள். அதேபோல் ஒருவர் அறிவுரீதியாக தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனில் தொடர்ந்து படிக்க வேண்டும், இதுதான் தேர்வில் எளிமையாக வெற்றிபெற வைக்கும்.

குறிப்பாக புத்தகங்களை வாசிப்பது அறிவைப் பெருக்குகிறது, பின்பு மன அழுத்தத்தை குறைத்து மனநிலையைச் சீராக்குகிறது.மொழித்திறனையும் வளர்க்கிறது. அதேபோல் புத்தகங்களை வாசிப்பது நினைவுத்திறனையும் அதிகரிக்கிறது,
கவனச்சிதறலை தவிர்க்கிறது, மன அமைதியை ஏற்படுத்துகிறது, எல்லாற்றுக்கும் மேலாக ஒரு நல்ல பொழுதுபோக்காகவும் இருக்கிறது.


Click it and Unblock the Notifications