ஆன்லைனில் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போன்: பார்சலில் வந்த துணிதுவைக்கும் சோப்- உஷார்!
தனியார் நிறுவன ஊழியர் ஆன்லைனில் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு ஆர்டர் செய்த ஸ்மார்ட்போனுக்கு பதிலாக துணிதுவைக்கும் சோப்புகள் வந்துள்ளது.

ஆன்லைன் ஆர்டர்
ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் முறை
கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

300 முதல் 350 மில்லியனாக அதிகரிக்கும்
ஆன்லைன் டிஜிட்டல் முறையில் பொருட்கள் வாங்குபவர்கள் எண்ணிக்கை 100 முதல் 110 மில்லியனில் இருந்து 2025 ஆம் ஆண்டு 300 முதல் 350 மில்லியனாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என அறிக்கை தெரிவிக்கிறது. இதில் ஆன்லைன் விற்பனையில் உள்ள மொழி சிக்கல் தீர்க்கப்பட்டால் மில்லியன் கணக்கான நுகர்வோரை அடைய நிறுவனத்துக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தனியார் நிறுவன ஊழியர்
இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் ஆன்லைன் தளம் மூலம் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

ஆர்டர் செய்த பொருள் டெலிவரி
ஆர்டர் செய்த ஸ்மார்ட்போனுக்கு காத்திருந்த நிலையில், அவரது முகவரிக்கு ஆர்டர் வந்துள்ளது. அந்த ஆர்டரை வாங்கிய தனியார் நிறுவன ஊழியர் அதை பிரித்து பார்த்தார். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

ஆர்டர் செய்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்
தான் ஆர்டர் செய்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் என்று பிரித்துப்பார்த்த அந்தநபர் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் அவர் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போனுக்கு பதிலாக உள்ளே துணிதுவைக்கும் சோப்புகள் இருந்துள்ளது. இதுகுறித்து வாடிக்கையாளர்கள் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார்.

இமெயில் மூலம் அனுப்பி வைத்தார்
வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்ததோடு பார்சல் பாக்சில் இருந்த சீரியன் எண் ஸ்டிக்கர், பார்சலில் இருந்த ரசீது உள்ளிட்ட விவரங்களையும் இமெயில் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

இளைஞர் வருத்தம்
இருப்பினும் நிறுவனத்தின் தரப்பில் இருந்து மோட்டோரோலா ஸ்மார்ட்போனுக்கு செலுத்திய தொகையோ அல்லது மாற்று ஸ்மார்ட்போனோ தற்போது வரை வழங்கவில்லை என அந்த இளைஞர் வருத்தம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications