Home
News

Zoom செயலி மூலம் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை: எப்படி., எங்கு தெரியுமா?

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஜூம் செயலி மூலம் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா

வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா

சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா உலகின் 213 நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. இந்த வைரஸுக்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்காத காரணத்தால் அதன் தாக்கமும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

50 லட்சத்து 3 ஆயிரத்து 170 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

50 லட்சத்து 3 ஆயிரத்து 170 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்னிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 50 லட்சத்து 3 ஆயிரத்து 170 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

19 லட்சத்து-க்கும் மேற்பட்டோர் குணமடைவு

19 லட்சத்து-க்கும் மேற்பட்டோர் குணமடைவு

இந்த கொடிய வைரசில் இருந்து 19 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருப்பினும் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை இதுவரை 3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் அதிகப்பட்சம்

அமெரிக்காவில் அதிகப்பட்சம்

அதேபோல் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் அமெரிக்காவில் அதிகபட்சமாக 15,70,908-க்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் ரஷ்யா, ஸ்பெயின், பிரேசில் என அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஜூம் செயலி மூலம் தூக்கு தண்டனை

ஜூம் செயலி மூலம் தூக்கு தண்டனை

இந்த நிலையில் சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான குற்றவாளி ஒருவருக்கு ஜூம் செயலி மூலம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மலேஷியாவை சேர்ந்தவர் புனிதன் கணேசன். 37 வயதான இவர், கடந்த 2011ம் ஆண்டு நடந்த ஹெராயின் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா பரவல் தடுக்க ஊரடங்கு

கொரோனா பரவல் தடுக்க ஊரடங்கு


உலகம் முழுவதும் போன்றே சிங்கப்பூரிலும் கொரோனா பரவல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிமன்ற பணிகள் அனைத்தும் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்று வருகிறது.

பரிசீலனை செய்து வருகிறோம்

பரிசீலனை செய்து வருகிறோம்

அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கும் ஜூம் செயலி மூலம், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்த குறிப்பில், கிரிமினல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இது முதல்முறை என கூறப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம் எனவும் விசாரணை ஏற்கனவே முடிவடைந்து விட்டதால், தண்டனை விவரம் ஜூம் செயலி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Young get a death sentence via zoom video calling app
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X