2 மணிநேரமா குறுகுறுனு பார்க்குறாரே: ஒரே வீடியோவில் வேர்ல்ட் பேமஸ்- 2 மில்லியன் பார்வையாளர்கள்!

|

இளைஞர் ஒருவர் யூடியூப்பில் 2 மணி நேரம் ஒன்றும் செய்யாமல் அமர்ந்திருக்கும் வீடியோ 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை குவித்து வருகிறது.

ஆன்லைன் மூலம் சம்பாத்தியம்

ஆன்லைன் மூலம் சம்பாத்தியம்

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மூலம் சம்பாத்தியம் பிரதானமாக திகழ்ந்து வருகிறது. யூடியூப்பில் தனித்துவமாக வீடியோ பதிவிடுவது, பேஸ்புக்கில் பக்கம் தொடங்கி லைக் வாங்குவது, டுவிட்டர் பாலோவர் பெறுவது என பல்வேறு முயற்சிகளை பெரும்பாலோனார் எடுத்து வருகின்றனர்.

யூடியூப்பில் பிரத்யேக சேனல்

யூடியூப்பில் பிரத்யேக சேனல்

யூடியூப்பில் பிரத்யேக சேனல் தொடங்கி பணம் ஈட்டுபவர்கள் ஏராளமானோர். திரைப்பட விமர்சனம், தனித்துவ நகைச்சுவை வீடியோ, குறும்படம், ப்ரான்க் ஷோ என பல்வேறு வகையில் வீடியோ பதிவிடுவார்கள். இவர்களுக்கு யூடியூப்பில் வீடியோ பார்க்கும் போது தொடக்கத்திலோ இறுதியிலோ லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க மறக்காம சப்ஸ்க்ரைப் பட்டன க்ளிக் பண்ணுங்க என்ற வார்த்தைகள் இடம்பெறும்.

சப்ஸ்க்ரைப், லைக், வியூவ்ஸ்

சப்ஸ்க்ரைப், லைக், வியூவ்ஸ்

சப்ஸ்க்ரைப், லைக், வியூவ்ஸ் பொருத்தே அதில் விளம்பரங்கள் இடம்பெறச் செய்து யூடியூப்பில் இருந்து பணம் சம்பாதிக்க முடியும். இதற்கு யூடியூப் வாசிகள் படாதபாடு படுவர்கள். தங்களது சப்ஸ்கிரைப்பர்களை தக்கவைக்கவும் அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஒருவர் மிக எளிதாக யூடியூப் சேனல் தொடங்கிய உடனே சப்ஸ்க்ரைபர்களை அதிகரித்துள்ளார்.

வீடியோ அதிக வியூவ்ஸ்

வீடியோ அதிக வியூவ்ஸ்

இந்தோனேசியாவை சேர்ந்தவர் முகமது திடிட். இவர் வீடியோ அதிக வியூவ்ஸ் பெற்றதற்கும் சப்ஸ்கிரைபர் அதிகரித்ததுக்கும் முக்கிய காரணம் இவர் ஒன்னுமே செய்யாமல் அமர்ந்தே இருந்ததுதான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா.

யாரும் டிக்டாக் செயலியை வாங்கவில்லை என்றால் செப்டம்பர் 15-ம் தேதி கடைசி: டிரம்ப் அதிரடி.!யாரும் டிக்டாக் செயலியை வாங்கவில்லை என்றால் செப்டம்பர் 15-ம் தேதி கடைசி: டிரம்ப் அதிரடி.!

கேமராவையே வெறிக்க வெறிக்க பார்க்கிறார்

கேமராவையே வெறிக்க வெறிக்க பார்க்கிறார்

முகமது திடிட் கேமரா முன்பு அமர்ந்து கேமராவையே வெறிக்க வெறிக்க பார்க்கிறார். சுமார் 2 மணி நேரம் இவர் கேமரா முன்பு ஒன்றுமே செய்யாமல் அமர்ந்தபடி இருக்கிறார். வடிவேல் ஒரு காமெடியில் சும்மாவே இருக்கது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என கூறி ஒருவரிடம் சவால் விட்டு ஜெயித்தும் காட்டுவார்.

2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள்

அதன்படி முகமது கஷ்டத்தை உணர்ந்த சமூகவலைதள வாசிகள் அவரது வீடியோவுக்கு 2,480,155 அதாவது 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் குவிந்துள்ளனர். அதுமட்டுமின்றி கமெண்ட்கள் வழக்கம்போல் பஞ்சம் இல்லாமல் குவிந்திருக்கிறது. இதில் 2 மணி நேரம் இவரது மனதில் என்ன எண்ணங்கள் தோன்றியிருக்கும் போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

கல்வி கற்கும்படியான வீடியோ

கல்வி கற்கும்படியான வீடியோ

இந்த வீடியோ குறித்து முகமது திடிட், இந்த வீடியோ எதற்காக உருவாக்கப்பட்டது என்றால், இந்தோனேசியா இளைஞர்களுக்கு கல்வி கற்கும்படியான வீடியோவை வெளியிடும்படி கூறினர். அதன்காரணமாக கனத்து இதயத்துடன் இந்த வீடியோ பதிவிட்டுள்ளேன். இதன் நன்மை பார்வையாளர்களாக உங்களை பொறுத்தது என கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
young doing nothing for 2 hours post video in youtube gets more than 2 million views

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X