பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல்: தி பெஸ்ட் பிளான்-தினசரி 2ஜிபி டேட்டா.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது, ஆனால் சில
இடத்தில் டவர் பிரச்சனை உள்ளது என பல்வேறு மக்கள் கருத்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஏர்டெல், வோடபோன், ஜியோ, பிஎஸ்என்எல்
மேலும் ஏர்டெல், வோடபோன், ஜியோ போன் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி சிறந்த திட்டங்களை அறிவித்து வருகிறது. ஆனால் ஜியோ நிறுவனம் மட்டும் தொடர்ந்து கால் அழைப்புகளுக்கு கட்டணம் வசூல் செய்கிறது.இப்போது ஏர்டெல், வோடபோன், ஜியோ, பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்களைப் பார்ப்போம்.

ஜியோ ரூ.249-திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.249 திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறதுää குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். மேலும் ஜியோ டு ஜியோ நெட்வொர்க்குகளுக்கு இலவச அழைப்புகளும், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000எப்யுபி நிமிடங்களும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.449-திட்டம்
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449-திட்டம் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது, குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

வோடபோன் ரூ.299-திட்டம்
வோடபோன் நிறுவனத்தின் ரூ.299-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா,100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது,குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும்;. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.198-திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.198-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்றகுரல் அழைப்பு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக 54நாட்கள் வேலிடிட்டி ஆதரவுடன் இந்த திட்டம்வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications