மொபைல் போனின் கவரில் பணம், ஏடிஎம் கார்டுகளை வைப்பீங்களா? இனி இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.. ஏன்?
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். அதுவும் இந்த ஸ்மார்ட்போன் நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது என்றே கூறலாம். ஆனாலும் நம்மில் சிலர் இந்த ஸ்மார்ட்போன்களில் ஒரு சிறிய தவறைச் செய்கிறோம். அது நமக்கு மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும். அது என்னவென்று இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது சிலர் மொபைல் போனின் (mobile phone) கவரில் பணத்தை வைக்கின்றனர். இது பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத் தெரிந்தாலும் கூட மிகவும் ஆபத்தானது. ஸ்மார்ட்போன்கள் வெடித்த அல்லது தீப்பிடித்த சம்பவங்கள் குறித்து அடிக்கடி சமூகவலைதளங்கள் அல்லது செய்தித்தாள்களில் நாம் பார்க்கிறோம். இதற்கு கவனக்குறைவே காரணம் என்று கூறப்படுகிறது.

கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு
குறிப்பாக மொபைல் போன் மிகவும் சூடாகும் போது தான் இதுபோன்ற பிரச்சனைகள் வருகிறது. அதாவது சிலர் நீண்ட நேரம் போன்களை பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் மொபைலுக்கு சார்ஜ் போட்டுவிட்டு மறந்துவிடுகிறார். இதன் விளைவாக மொபைலில் ஒரு காந்தப்புலம் உருவாகிறது. அந்த நேரத்தில் மொபைல் போனின் பின்புற அட்டையில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு இருந்தால், அது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.
அதுவும் மொபைலால் உருவாக்கப்பட்ட காந்தப்புலம் நமது கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் இருக்கும் காந்த பட்டை தரவை சேதப்படுத்தும். இதுதவிர போனின் செயலி அல்லது பேட்டரியில் அதிகப்படியான அழுத்தும் தந்து சேதத்தை ஏற்படுத்தும். அதேபோல் தவறான சார்ஜரை பயன்படுத்தும் போது பேட்டரி வெடிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.

ரூபாய் நோட்டுகள்
இந்த கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மட்டுமின்றி பலர் ரூபாய் நோட்டுகளை மொபைல் போனின் கவரில் வைக்கின்றனர். இது நிச்சயம் பாதுகாப்பானது அல்ல. அதாவது ரூபாய் நோட்டுகளில் பல வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மொபைல் போனில் உருவாக்கும் வெப்பத்தை வேளியேற அனுமதிப்பது இல்லை.
எனவே இந்த சூழ்நிலையில் தான் வெப்பம் போனில் உள்ளே சிக்கி வெடிப்பை ஏற்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் போனின் பின்புறம் வைக்கும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் கூட போனில் உருவாகும் வெப்பம் வெளியேறுவதைத் தடுக்கின்றன. இதனால் ஆபத்து வருகிறது.
ஆகவே கிரெடிட்டி அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் ரூபாய் நோட்டுகளை மொபைல் கவரின் பின்னால் வைப்பதை தவிர்க்க வேண்டும். பின்பு இதற்கு பதிலாக தனி கார்டு ஹோல்டர் அல்லது பணப்பையை பயன்படுத்துவது நல்லது.

மொபைல் போன் தீப்பிடிக்காமல் இருக்க செய்ய வேண்டியது?
1. மொபைல் போனின் கவரில் ரூபாய் நோட்டுகள், நாணயம், டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை வைக்கக் கூடாது.
2. மொபைல் போன எப்போதும் சுத்தமாகவும், உலர்வாகவும் வைக்க வேண்டும்.
3. போனின் பேட்டரியை அளவுக்கு அதிகமாக சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும். சேதமடைந்த போன் பேட்டரிகளைப் பயன்படுத்தக் கூடாது.
4. போன்களுடன் வரும் ஒரிஜனல் சார்ஜரை பயன்படுத்துவது நல்லது.
5. வெப்பத்தை குறைவாக வெளியிடும் போன்களை பயன்படுத்துங்கள்.
6. குறிப்பாக போன் சார்ஜிங்கில் இருக்கும்போது கேம் விளையாடுவதை தவிர்க்கலாம். மேலும்
போன்கள் சார்ஜில் இருக்கும்பொழுது வீடியோக்கள் பார்ப்பதை தவிர்ப்பது பேட்டரியின் வாழ்நாளை கூட்டும்.


Click it and Unblock the Notifications








