அமேசானில் பொருட்களை வாங்குவதற்க்கு முன் 'செக்' செய்ய வேண்டிய 2 தளங்கள்.!
ஆன்லைன் நிறுவனங்கள் சலுகைகளை அளிப்பதில் எந்த மர்மமுமில்லை. பெருவாரியான நிறுவனங்கள் தங்களது தளம் மற்றும் சேவைகள் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள சொல்லி கேட்கின்றனர் என்பதும் முக்கியமானது.
இப்போது ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் ஆமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற வலைதளங்கள் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் இ-காமர்ஸ் மாபெரும் தயாரிப்புகளை நிறைய விற்பனை செய்கிறது

இப்போது இணையத்திலேயே பொருள்கள், சேவைகளைப் பெற முடியும் என்ற நிலை வந்துவிட்டது. பிராண்டட் பொருள்கள் என வரும்போது, அவற்றை நேரில் போய் பார்த்துதான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தரம் உறுதிப்படுத்த ஒன்று என்பதால் பிடித்த மாடல் அல்லது நிறத்தை மட்டும் பார்த்து ஆர்டர் கொடுத்துவிட்டால், மிக எளிமையாக பொருட்களை வாங்க முடியும்.

அமேசான்:
அமேசான் ஷாப்பிங் அனுபவத்தில் திருப்தியடைந்தாலும், சில சமயம் பொருட்களை வாங்கும் முன் சில அம்சங்களை தவறாக வழிநடத்தும். உதரணமாக ஆஃபர் போன்ற சேவைகளில் பல சிக்கலகள் இருக்கும். மேலும் விலைமதிப்பு, கேஷ்பேக் மற்றும் கூப்பன்
போன்ற அம்சங்களில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும், இந்த சேவைகளில் பொருட்களை வாங்கும் போது மிகுந்த கவனம் வேண்டும்.

ஆன்லைன்:
ஆன்லைன் நிறுவனங்கள் சலுகைகளை அளிப்பதில் எந்த மர்மமுமில்லை. பெருவாரியான நிறுவனங்கள் தங்களது தளம் மற்றும் சேவைகள் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள சொல்லி கேட்கின்றனர் என்பதும் முக்கியமானது.

நம்பகமான வலைதளங்கள்:
அமேசானில் பொருட்களை வாங்கும் முன்பு Camelcamelcamel and Fakespot- என்ற வலைதளங்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த வலைதளங்களில் பொருட்களின் சிறந்த தரம் மற்றும் விலை போன்ற பல்வேறு
அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

இ-காமர்ஸ்:
செல்போன், லேப்டாப், மியூசிக் சிஸ்டம்ஸ், நகைகள், துணிகள், டிவி, பிரிட்ஜ், ஏஸி உள்ளிட்ட மின்னணு பொருட்கள், இனிப்புகள் உள்ளிட்ட தின்பண்டங்கள், இப்படி எல்லாமே இ-காமர்ஸ் வர்த்தகத்துக்குள் அடங்கிவிட்டன. எனவே அனைத்து பொருட்களையும் வாங்கும் முன் நாம் கவனமாக செயல்பட வேண்டும்.

யுஆர்எல்:
மிகவும் அதிமாக பயன்படுத்தப்படும் இந்த Camelcamelcamelவலைதளத்தில், நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களின் யுஆர்எல்(URL)-ஐ பயன்படுத்தினால் அவற்றின் நன்மதிப்பு, தரம், விலை, தயாரிப்பு, போன்ற அனைத்தும் தெளிவாக எடுத்துறைக்கும்.

மதிப்பீடுகள்:
பேக்ஸ் பாட் போன்ற தளத்தில் நீங்கள் வாங்கும் பொருட்களின் மதிப்பீடுகள் எவ்வளவு உண்மையானது என அருமையாக தெரிவிக்கும், தயாரிப்புகளின் பயனர் மதிப்புரைகளை ஆய்வு செய்து மிக தெளிவாக எடுத்துறைக்கும் தன்மை கொண்டவை இந்த பேக்ஸ் பாட் வலைதளம்.

சலுகைகள்:
சலுகைகள், அதிகபட்ச தள்ளுபடிகள் அளிப்பதன் மூலம் ஆரம்ப கட்டத்தில் இந்த நிறுவனங்கள் நஷ்டங்களையே சந்திக்கின்றன. இது எதற்கு என்றால், இதன் மூலம் நீங்கள் திரும்ப திரும்ப அந்த தளத்துக்கு செல்வதற்குதான்.

பண்டிகை:
பண்டிகை காலத்தில் கேஷ் பேக் ஆபர்கள் உண்மையிலே பயன்தரும். ஏனென்றால் அந்த நாட்களில் போட்டி அதிகம் என்பதால் பல ஆன்லைன் நிறுவனங்கள் பல சலுகைகளை அளிக் கின்றன. சிறிய திட்டமிடல் இருந்தால் மிக சரியாக ஆன்லைன் ஆபர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications