ரூ.1500/-ஐ கையில் வைத்துக்கொள்ளுங்கள் : மலிவான 4ஜி போன்கள் ரெடி.!

கூடிய விரைவில் 4ஜி மொபைல் போன்களை 1,500 ரூபாய்க்கு எளிதாக வாங்கலாம்.

By Prakash
|

நாடு முழுவதும் அதிகப்படியான மக்கள் விரும்புவது 4ஜி மொபைல்கள். காரணம் இதன் இன்டர்நெட் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும். மேலும் இந்த வகையான மொபைல் போன்கள் இயக்கத்திற்க்கு மிக எளிமையாக இருக்கும்.

ரூ.1500/-ஐ கையில் வைத்துக்கொள்ளுங்கள் : மலிவான 4ஜி போன்கள் ரெடி.!

தற்போது இந்தவகையான மொபைல் போன்கள் சுமார் 3,000 ரூபாய்க்கு தொடங்குகிறது மேலும் இதன் சிறப்புகள் அதிக நாட்கள் உழைக்கும் வலிமைப் பெற்றவை.

 4ஜி மொபைல்போன்:

4ஜி மொபைல்போன்:

4ஜி மொபைல்போன்கள் தற்போது அதிக அளவு மக்கள் இதை வாங்க ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் இதன் செயல்பாடு பொருத்தமாட்டில் வங்கி மற்றும் பல்வேறு சேவைகளுக்குப் பயன்படுகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ:

தற்போது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் ஸ்பெக்ட்ரம் மிகக் குறைந்த விலையில் 4ஜி கட்டணத்தை அறிவத்தார். மேலும் கால் அழைப்புகள் மற்றும் டேட்டா போன்றவை தற்போது அதிகம் கொடுத்து வருவது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்:

 2ஜி, 3ஜி வேகம்:

2ஜி, 3ஜி வேகம்:

கடந்த ஆண்டு அதிகப்படியாக 2ஜி, 3ஜி போன்ற வேகங்களில் இன்டர்நெட் கிடைத்தது. மேலும் இதன் வேகம் குறிப்பிட்ட அளவுக்கு தான் இருக்கும். அனால் 4ஜி பொருத்தமாட்டில் அதிக அளவு நன்மை உள்ளது.

 4ஜி வோல்ட்:

4ஜி வோல்ட்:

ஜியோவின் அதிவேக 4ஜி இண்டர்நெட், தற்போது டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் நாடக இசைக்கான அணுகலுடன், 999 ரூபாய் செலவில் 4ஜி வோல்ட் தயாராக இருக்கிறது மற்றும் கூடிய விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

4ஜி மொபைல்கள்:

4ஜி மொபைல்கள்:

இன்று வெளியிடப்பட்ட தி எகனாமிக் டைம்ஸ் அறிக்கையில் சீன மொபைல் மற்றும் ஸ்ப்ரெட்ரெம் கம்யூனிகேஷன்ஸ் தற்போதைய நிலைகளிலிருந்து குறைந்தபட்சம் பாதியளவு விலைகளை குறைப்பதில் வேலை செய்து வருகிறது. இது 4ஜி அம்ச தொலைபேசி விலைகளை ரூ .1,500 க்குக் கொண்டு வரக்கூடும்.

ஷாங்காய்:

ஷாங்காய்:

ஷாங்காய் அடிப்படையிலான ஸ்ப்ரெட்ட்ரோம் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் லைஃப் ஃப்ளேம் 5 ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இது பல்வேறு வரவேற்ப்பை பெற்றுள்ளது.

வேலைவாய்ப்பு:

வேலைவாய்ப்பு:

ரிலையன்ஸ் ஜியோ இன்போம்காம், சீனக் கம்ப்யூட்டர் போன்றவைகளால் 4ஜி வோல்ட வசதியுள்ள போன்களை தயாரிக்கப்படும் இதனால் பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் உற்பத்திதறன் மிக அதிமாகும் வாய்ப்பு உள்ளது.

லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் :

லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் :

தற்போது லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் 4ஜி மொபைல் போன் விலை 3,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. மேலும் குறைந்த விலையில் கிடைக்க திட்டமிட்டுள்ளது அந்நிறுவனங்கள். கார்பன் தவிர, மற்ற தொலைபேசிகள் விலைகளை 1,500 க்கு கீழ் விறப்பனை செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது

ஸ்பேட்ட்ரம் கம்யூனிகேஷன்ஸ்:

ஸ்பேட்ட்ரம் கம்யூனிகேஷன்ஸ்:

ஸ்பேட்ட்ரம் கம்யூனிகேஷன்ஸ், இது பேஸ்பேண்ட் சிப் பிரிவில் நிலையான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது, மேலும் மீடியா டெக் மற்றும் குவால்காம் போன்ற தயாரிப்பு நிறுவனங்களிடம் சிப்செட் சாதனங்களை குறைந்த விலையில் வழங்க பல்வேறு மொபைல் நிறுவனங்கள் பேசிவருகின்றன.

ஜேபி மோர்கன்:

ஜேபி மோர்கன்:

நிதி சேவைகள் நிறுவனம் ஜேபி மோர்கன் சமீபத்திய கண்டுபிடிப்பில்இ 4 ஜி திறன் கொண்ட 4ஜி நெட்வொர்க் ரோல் அவுட்கள் விட வேகமாக இருப்பதால், மிகப் பெரிய மாற்றம் 2017-ல் ஏற்ப்பட்டுள்ளது. என ஜேபி மோர்கன் அறிவித்தார்.

ரிலையன்ஸ் நிறுவனம்:

ரிலையன்ஸ் நிறுவனம்:

ரிலையன்ஸ் நிறுவனம் பல்வேறு 4ஜி சேவைகளை வழங்கியுள்ளது.இதன் மூலம் பல்வேறு லாபாம் பெற்றுள்ளது. தற்போது ஏர்டெல்இ வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியோரால் ஆக்கிரோஷமான திட்டங்களை வழங்குவதன் மூலம் வளர்ந்துவரும் சந்தையில் 4ஜி வசதியுள்ள மொபைல் போன்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

Best Mobiles in India

Read more about:
English summary
You could soon buy a 4G feature phone only for Rs 1,500 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X