Home
News

Aadhaar அட்டையில் பெயர் முதல் முகவரி வரை ஆன்லைனில் மாற்றலாம்.. ஆனால் இதை மட்டும் மாற்ற முடியாது.. ஏன்?

இந்தியாவில் அனைத்து முக்கியத் திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் (Aadhaar) கட்டாயம் தேவைப்படுகிறது. அதுவும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் பல சேவைகளைப் பெற இந்த ஆதார் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உங்கள் ஆதார் அட்டையில் ஏதாவது தவறு இருந்தால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் கூட கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.

எனவே ஆதார் அட்டையில் எப்போதும் சரியான தகவல்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் ஆதாரில் பெயர், பிறந்த தேதி முகவரி மற்றும் பிற விவரங்களை ஆன்லைனில் அதாவது UIDAI-இன் அதிகாரப்பூர்வ போர்ட்டல் வழியாக அப்டேட் செய்து கொள்ள முடியும். ஆனால் உங்கள் ஆதார் கார்டில் உள்ள போட்டோவை ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரில் பெயர் முதல் முகவரி வரை ஆன்லைனில் மாற்றலாம்.. ஆனால்?

அதாவது ஆதார் அட்டையில் உங்கள் போட்டோவை அப்டேட் செய்ய வேண்டுமானால் அதற்கு நீங்கள் ஆதார் சேவை மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஆதார் அட்டையில் போட்டோ அப்டேட் செய்வதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஸ்டெப் 1: அதாவது https://uidai.gov.in/en/ என்ற இந்த யூஐடிஏஐ (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். இந்த தளத்தில் முகப்பு பக்கத்தில் ஆதார் என்ரோல்மென்ட் படிவத்தை (Aadhaar Enrolment Form) பதிவிறக்கம் (டவுன்லோடு) செய்து பிரிண்ட்-அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2: அதன்பின்பு நீங்கள் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்த அந்த படிவத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவும். அடுத்து அந்த படிவத்தை உங்களுக்கு அருகாமையில் இருக்கும் ஆதார் சேவை மையத்தில் சென்று, ஆதார் சேவை மைய அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.

ஸ்டெப் 3: குறிப்பாக அடுத்து ஆதார் சேவை மையத்தில் உங்களது பயோமெட்ரிக் விவரங்களை அளிக்க வேண்டும். அனைத்து விவரங்களை சரியாக அளித்த பின்பு ஆதார் சேவை மைய அதிகாரி உங்களை அங்கேயே புகைப்படம் எடுத்துக் கொள்வார். குறிப்பாக இந்த சேவைக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஸ்டெப் 4: அவ்வளவுதான் உங்களது ஆதார் அட்டையில் போட்டோவை மாற்றுவதற்கான செயல்முறை முடிந்துவிட்டது. மேலும் உங்களுக்கு ஒரு யூஆர்என் (URN) எண் அதற்கான ஒப்புதல் படிவத்துடன் அளிக்கப்படும். இதைக் கொண்டு உங்களுக்குச் சேவையின் நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

ஆதாரில் பெயர் முதல் முகவரி வரை ஆன்லைனில் மாற்றலாம்.. ஆனால்?

குறிப்பாக நேரில் சென்று போட்டோ அப்டேட் செய்யும் போது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. எனவே இதனால் தான் பிற விவரங்களைப் போல் இல்லாமல் ஆதார் கார்டில் உள்ள போட்டோ மட்டும் ஆதார் சேவை மையங்களில் மாற்றம் செய்யப்படுகிறது.

அதேபோல் ஆதார் அட்டையில் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்றவற்றில் ஏதாவது பிழை இருந்தால் அதை வரும் செப்டம்பர் 14 (September 14)-ம் தேதிக்குள், நீங்கள் இலவசமாகப் புதுப்பிக்கலாம். ஆனால் இந்த தேதிக்குப் பிறகு, எந்த ஒரு விவரங்களையும் அப்டேட் செய்ய வேண்டும் என்றால் அதற்குக் கட்டணம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.

More from GizBot

Best Mobiles in India

English summary
You Cant Do Only One Update in Aadhaar Card Online: Do You Know Why?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X