பிளக் பாயிண்ட் ஆஃப்: இனி ரயிலில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் செய்ய முடியாது!

|

ரயில் ஏற்படும் தீவிபத்துகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாக ரயிலில் இரவு நேரங்களில் செல்போன் சார்ஜ் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் சார்ஜ் செய்ய முடியாது

செல்போன் சார்ஜ் செய்ய முடியாது

பொதுவாக பயனத்தின்போது அனைவருக்குமான பெரும்பாலான பொழுதுபோக்காக இருப்பது தங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்கள்தான். பயணத்துக்கு திட்டமிட்டு புறப்படும் பட்சத்தில் செல்போன் சார்ஜ் முழுவதுமாக செய்து வைப்பது வழக்கம். திடீர் பயணத்தின் போது சார்ஜ் செய்யப்படாதபட்சத்தில் பவர்பேங்க் அல்லது போக்குவரத்து வாகனத்தில் இருக்கும் பிளக் பாயிண்ட்டை பயன்படுத்துவோம்.

இந்திய ரயில்வே நிர்வாகம்

இந்திய ரயில்வே நிர்வாகம்

இந்திய ரயில்வே நிர்வாகம் பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ரயிலில் தீவிபத்து ஏற்படாமல் இருக்க எடுக்கப்படும் நடவடிக்கையாக இரவு நேரங்களில் ரயில் பிளக்பாயிண்ட்களில் சார்ஜ் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை

இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை

ரயில்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜ் செய்ய முடியாது என தெரவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தை தொடர்ந்து ரயில் பெட்டிகளில் இரவு நேரங்களில் சார்ஜிங் பாயிண்ட்கள் அணைத்து வைக்கப்பட வேண்டும் என ரயில் பாதுகாப்பு ஆணையர் பரிந்துரை செய்தார். ரயில்வே வாரிய அறிவுறுத்தல்படி மேற்கு ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட சமயத்தில் சார்ஜிங் பாயிண்ட் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளக் பாயிண்ட் ஆஃப்

ரயில் நிலையங்களில் தீவிபத்து நிகழ்வுகள் ஏற்பட்டு வருவதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயில்களில் இரவு நேரங்களில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி நிறுத்துவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளது என ரயில்வே மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் ஒரு அறிக்கையில் ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர், மொபைல் போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் சாக்கெட்கள் இரவு 11 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை சுவிட்ச் ஆஃப் செய்யப்படும் என தெரிவித்தார்.

புகைப்பிடிக்கவும், எரியக் கூடிய சாதனங்கள் எடுத்து செல்ல தடை

சமீபத்தில் டெஹ்ராடூன் செல்லும் சகாப்தி எக்ஸ்பிரஸ் சந்தேகத்திற்கு இடமான முறையில் தீவிபத்து ஏற்பட்டது. அடுத்த ஆறு நாட்களில் ராஞ்சி நிலையத்தில் ரயில் எஞ்சினில் தீவிபத்து ஏற்பட்டது. இந்திய ரயில்வே நிர்வாகம் ரயிலில் புகைப்பிடிப்பதற்கும், எரியக்கூடிய பொருட்களை எடுத்து செல்வதற்கும் எதிராக பல நடவடிக்கைகள் எடுத்தது.

தனியார் மயமாக்கும் முடிவு

பயனிகள் ரயில் தனியார் மயமாக்கும் முடிவின் முதற்கட்டமாக சில ரயில்கள் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் முற்றிலும் தனியார்மயம் ஆக்கப்படும் என தகவல்கள் பரவி வந்த நிலையில், இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்தார். அதில் ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது எனவும் இது அனைத்து இந்தியரின் சொத்து அதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ரயில்வேத்துறை ஒருபோதும் தனியார் மயமாக்கப்படாது எனவும் கூறினார். ரயில்வேத்துறை சிறப்பாக செயல்பட தனியார் முதலீடுகள் அவசியம் என கூறினார்.

Best Mobiles in India

English summary
You can't charge your Mobile phones, Laptops at night on train

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X