விமானங்களில் ஆப்பிள் மேக்புக் ப்ரோ கொண்டு செல்ல தடை! ஏன் தெரியுமா?

|

அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் தனது இணையதளத்தில் ஒரு அறிவிப்பைக் கடந்த ஜூன் 20 அன்று வெளியிட்டது. இதில் ஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப்களின் சில மாடல்களில் பேட்டரி கோளாறு இருப்பதாகவும் அதனால் ஏற்படும் ஆபத்து குறித்து, ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை அறிவித்திருந்தது.

ஆபத்து இருப்பதாக தெரிவித்த ஆப்பிள்

ஆபத்து இருப்பதாக தெரிவித்த ஆப்பிள்

ஆப்பிள் அறிவித்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 'குறைந்த எண்ணிக்கையிலான பழைய தலைமுறை 15' இன்ச் ஆப்பிள் மேக்புக் ப்ரோ மாடல் லேப்டாப்களில், பேட்டரி வெப்பமடைந்து தீ விபத்து நிகழ்வதற்கான ஆபத்து இருப்பதாக ஆப்பிள் கண்டறிந்துள்ளது' என்றும் தெரிவித்து.

எந்த வருட லேப்டாப்கள் பாதிக்கப்பட்டது தெரியுமா?

எந்த வருட லேப்டாப்கள் பாதிக்கப்பட்டது தெரியுமா?

பாதிக்கப்பட்ட மேக்புக் லேப்டாப்கள், செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 வருடத்திற்கு இடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்திற்குள் விற்பனை செய்யப்பட்ட சில மாடல்களில் பேட்டரி கோளாறு இருப்பதனால் உடனே பேட்டரிகளை இலவசமாக மாற்றிக்கொள்ளுங்கள் என்று ஆப்பிள் நிறுவனம், தயாரிப்பு வரிசை எண்ணுடன் கூடிய லேப்டாப் பட்டியலையும் வெளியிட்டது.

விமானம் மூலம் சேட்லைட் ஏவும் இஸ்ரோ: மிரளும் நாடுகள்.!விமானம் மூலம் சேட்லைட் ஏவும் இஸ்ரோ: மிரளும் நாடுகள்.!

ஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப்களுக்கு தடை

ஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப்களுக்கு தடை

இதனைத் தொடர்ந்து டிஜிசிஏ தலைவர் அருண்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவிட்டர் பதிவையும் பதிவிட்டுள்ளார். அதன்படி அனைத்து விமான பயணிகளையும் ஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப்களை விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.

பாதுகாப்பு அபாயம்

பாதுகாப்பு அபாயம்

டிஜிசிஏ தலைவர் அருண்குமார் ட்வீட் இல் தெரிவித்திருந்ததாவது, "ஆப்பிள் நிறுவனத்தின் குறைந்த எண்ணிக்கையிலான பழைய தலைமுறை 15' இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்களின் பேட்டரிகள் வெப்பமடைந்து பாதுகாப்பு அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

இதயம் இல்லாமலும் கூட உயிர் வாழலாம்.!இவருக்கு இதயமும் நாடித்துடிப்பும் இல்லை.!இதயம் இல்லாமலும் கூட உயிர் வாழலாம்.!இவருக்கு இதயமும் நாடித்துடிப்பும் இல்லை.!

லேப்டாப்பை உங்களுடன் எடுத்து செல்ல என்ன செய்ய வேண்டும்?

லேப்டாப்பை உங்களுடன் எடுத்து செல்ல என்ன செய்ய வேண்டும்?

டி.ஜி.சி.ஏ அனைத்து விமான பயணிகளையும் பாதிக்கப்பட்ட மாடல்களை, கை-சாமானாகவோ அல்லது செக்-இன் பேக்கேஜாகவோ எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும், பேட்டரி சரிபார்க்கப்பட்ட உரியச் சான்றிதழ் இல்லாமல் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவரின் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் சாதனத்தினால் தீ விபத்து

ஆப்பிள் ஐபோன் சாதனத்தினால் தீ விபத்து

ஆப்பிள் நிறுவனத்தின் லேப்டாப்கள் மட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களும் அதிகம் வெப்பாகும் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பல தீ விபத்துகளும் ஆப்பிள் ஐபோன் சாதனத்தினால் நிகழ்ந்துள்ளது.

ரூ.20,999க்கு கிடைக்கும் 45இன்ச் ஸ்மார்ட் டிவி-அதிரவிடும் வெஸ்ட்ன் பிராண்ட்.!ரூ.20,999க்கு கிடைக்கும் 45இன்ச் ஸ்மார்ட் டிவி-அதிரவிடும் வெஸ்ட்ன் பிராண்ட்.!

ஆப்பிள் ஐபோன் 7, 7 பிளஸ் மற்றும் எக்ஸ் தீப்பிடித்து வெடித்தது

ஆப்பிள் ஐபோன் 7, 7 பிளஸ் மற்றும் எக்ஸ் தீப்பிடித்து வெடித்தது

குறிப்பாக 2016 ஆம் ஆண்டு ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் போன்கள் வெடித்து, பயனரின் கார் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியது, அண்மையில் வெளியான ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மாடல் ஒன்று கடந்த நவம்பர் மாதம் தீப்பிடித்து வெடித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
You Can't Carry Your Apple MacBook Pro In Flights Here's Why : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X