Home
News

டிவி ரிமோட் தொலைந்தால் வருத்தப்படாதீங்க.. போனில் இந்த ஆப் போதும்.. ரிமோட்டாக பயன்படுத்தலாம்.. எப்படி தெரியுமா?

இந்தியாவில் தற்போது அதிநவீன ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. அதுவும் சாதாரண டிவிகளை தூக்கிப் போட்டுவிட்டு நவீன ஸ்மார்ட் டிவிகளை மக்கள் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். அதேபோல் ஸ்மார்ட் டிவிகளில் இப்போது அனைத்து முக்கியமான ஆப்ஸ்களும் கிடைக்கின்றன.

அதேபோல் ஸ்மார்ட் டிவிகளுடன் ஸ்மார்ட ரிமோட் கூட கிடைக்கிறது. குறிப்பாக வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ஓடிடி தளங்களில் ஷார்ட்கட் பட்டன்கள் எனப் பல சிறப்பு அம்சங்களும் ஸ்மார்ட் ரிமோட்டில் இருக்கும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது உங்களது ஸ்மார்ட் ரிமோட் தொலைந்துவிட்டாலோ அல்லது மறந்து எங்காவது வைத்துவிட்டலோ கவலைப்பட வேண்டாம்.

டிவி ரிமோட் தொலைந்தால் வருத்தப்படாதீங்க.. போனில் இந்த ஆப் போதும்..

அதாவது இந்த பிரச்சனைக்கு ஒரு புதிய தொழில்நுட்பத் தீர்வை அளிக்கிறது கூகுள் நிறுவனம். அதாவது பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போன்களில் கூகுள் டிவி அப்ளிகேஷன் (Google TV app) மூலம் இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்க முடியும்.

குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த கூகுள் டிவி ஆப். அதாவது வால்யூம் அட்ஜஸ்ட் செய்வது,செட்டிங்ஸ் மாற்றுவது, தங்களுடைய ஃபேவரட் அப்ளிகேஷன்களை பயன்படுத்துவது போன்றவற்றை ரிமோட் இல்லாமலேயே செய்வதற்கு அனுமதிக்கிறது இந்த கூகுள் டிவி ஆப். சரி இப்போது இந்த அப்ளிகேனஷனை பயன்படுத்தி ஸ்மார்ட்போனை டிவி ரிமோட் ஆக மாற்றுவது எப்படி என்பதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டிவி ரிமோட் தொலைந்தால் வருத்தப்படாதீங்க.. போனில் இந்த ஆப் போதும்..

வழிமுறை-1: முதலில் உங்களது ஸ்மார்ட் டிவி மற்றும் ஸ்மார்ட்போன் ஆகிய இரண்டின் ப்ளூடூத் அல்லது WiFi நெட்வொர்க்கை ஆன் செய்ய வேண்டும். அடுத்து உங்களது ஸ்மார்ட்போனில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கூகுள் டிவி ஆப்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும்.

வழிமுறை-2: அதன்பின்பு கூகுள் டிவி ஆப் ஓபன் செய்து ஸ்கிரீனின் கீழ் வலது மூலையில் Remote button எனும் ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். உடனே இப்போது அருகில் உள்ள சாதனங்களோடு இணைவதற்கு ஆப் ஸ்கேன் செய்ய ஆரம்பிக்கும். பின்பு இந்த பட்டியலில் உங்களது டிவி வந்தவுடன் அதனைத் தேர்வு செய்யுங்கள்.

வழிமுறை-3: நீங்கள் டிவியை தேர்வு செய்த பின்பு டிவி ஸ்கிரீனில் ஒரு கோட் காண்பிக்கப்படும். இந்த கோடை பயனர்களின் போனில் இருக்கும் ஆப்-இல் என்டர் செய்ய வேண்டும். அதன்பின்பு Pair button ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

வழிமுறை-4: அவ்வளவு தான் ஸ்மார்ட்போன் உடன் டிவி பேர் ஆனதும், உங்களது போனை பயன்படுத்தி டிவியின் வால்யூம் மாற்றுவது, மியூட் செய்வது, வாய்ஸ் சர்ச் பயன்படுத்துவது போன்ற அனைத்தையும் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த ஆப் மூலம் உங்கள் ஸ்மார்ட் டிவியை எளிமையாக இயக்க முடியும்.

டிவி ரிமோட் தொலைந்தால் வருத்தப்படாதீங்க.. போனில் இந்த ஆப் போதும்..

அதேபோல் கூகுள் நிறுவனம் நேற்று இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூகுள் வாலெட் ஆப் (Google Wallet App) வசதியை அறிமுகம் செய்துள்ளது. டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், லாயல்டி கார்டுகள், கிஃப்ட் கார்டுகள் போன்றவற்றைச் சேமிக்க அனுமதிக்கிறது கூகுள் வாலெட் ஆப். இதுதவிர பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது கூகுள் வாலெட் ஆப்.

குறிப்பாக கூகுள் நிறுவனம் புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
You Can Use Your Smartphone as TV Remote: Here's How It Works
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X