உங்கள் கண்கள் லேசர் கண்களாக மாற வேண்டுமா?

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒளிக்கதிர்களால் கண்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.

|

நீங்கள் பல காமிக் கதைகளில் வரும் சூப்பர் ஹீரோக்கள் கண்களில் லேசர்களுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். கிரேக்க தொன்மையியல் படி ஒருவரின் கண்களில் இருந்து வெளீயாகும் கதிர்களுக்கு மிகுந்த சக்தி உண்டு. நிச்சயமாக கண்களில் இருந்து வெளியாகும் ஒளிக்கதிர்களுக்கு மனித ஆன்மாவுடன் தொடர்பு உண்டு. இந்த நிலையில் நமது விஞ்ஞானிகள் இதுவரை கற்பனையில் கண்ட லேசர் கண்களை தற்போது நனவாக்கியுள்ளனர்.

உங்கள் கண்கள் லேசர் கண்களாக மாற வேண்டுமா?

அறுவை சிகிச்சை இல்லாமல் லேசர் கண்கள்
எந்தவித அறுவை சிகிச்சையும் இல்லாமல் உங்கள் கண்களை லேசர் கண்களாக மாற்று எப்படி தெரியுமா? மிக எளிது. உங்கள் கண்களில் லேசர் காண்டாக்ட் லென்ஸை அணிந்து கொள்ளுங்கள், அவ்வளவுதான். லேசர் காண்டாக்ட் லென்ஸ் அணிந்த பின்னர் உங்கள் கண்களில் இருந்து வெளியேறும் லேசர் கதிர்களில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்கவும், உங்கள் பார்வைத்திறன் பாதிக்காமல் இருக்கவும் நீங்கள் சிலவற்றை செய்ய வேண்டியதிருக்கும். இதற்காகத்தான் மால்ட்டி கேதர் என்பவருடைய டெக்னாலஜி தற்போது வந்துள்ளது.

இவர் கடந்த 2011ஆம் ஆண்டு சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைகளை லேசர் கதிர்களின் மூலம் அழித்து அந்த சமயத்தில் உலகம் முழுவதும் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே முறையின்படிதான் தற்போது கண்களில் இருந்து லேசர் கதிர் வெளியேறும் முறையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் உயிரியல் அணுகுமுறைக்கு பதிலாக இயந்திர முறையாக மாறியுள்ளது..

உங்கள் கண்கள் லேசர் கண்களாக மாற வேண்டுமா?

லேசர் வெளியேற்றும் லென்ஸை உருவாக்குவதற்கு, கேதர் அவர்களின் ஆய்வகம் ஒரு லேசரை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படாத, திடமான சவ்வுகளை பயன்படுத்தியுள்ளது. இந்த. சாதனம் மற்றொரு லேசர் மூலம் பயன்படுத்தப்படும்போது மட்டுமே இந்த லேசரில் இருந்து லேசர் கதிர்கள் வெளியாகும் என்பதுக் குறிப்பிடத்தக்கது. தண்ணீரில் கடையக்கூடிய ஒரு பொதுவான பேடாட் என்ற பாலிமர் முதலில் உருவாக்கப்படுகிறது. அதன் பின்னர் ஆய்வர்கள் இன்னொரு வித்தியாசமான பாலிமரை அதன் மேல்பகுதியில் வைத்து அதன் பின்னர் அதன் மூலம் ஒளி உமிழும் வகையில் செய்கின்றனர். இந்த ஒளி அடுத்த செமி கண்டக்டிங் பாலிமருக்கு சென்று அந்த ஒளியை லேசராக மாற்றுகிறது. இறுதியாக இந்த பாலிமர் தண்ணீரில் வைக்கப்பட்டு அதுவே லேசர் கதிராக கண்களில் உள்ள காண்டாக்ட் லென்ஸில் இருந்து வெளியேறுகிறது.

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒளிக்கதிர்களால் கண்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. மேலும் இதன்மூலம் வெளியேறும் வெளிச்சத்தின் தன்மை மிகவும் குறைவுதான். ஆனால் காமிக் கதைகளில் வெளியேறும் கதிர்களை போல் இந்த கதிர்களால் நமக்கு எதிரில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு இல்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் இந்த லேசர் கதிர்களில் இருந்து வெளியேறும் சக்தி நானோவாட் அளவில்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த கதிர்கள் சக்தி வாய்ந்தவையும் ஆகும்

உங்கள் கண்கள் லேசர் கண்களாக மாற வேண்டுமா?

உங்களுக்கு லேசர் கண்கள் தேவையா?
விரைவிலேயே உங்கள் கண்கள், வேற்று கிரக மனிதர்களுக்கு இருக்கும் கண்களை போல் லேசர் கண்களாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த சக்திவாய்ந்த ஒளிக்கதிர்கள் உங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்புக்கு உதவும். விஞ்ஞான முறையின்படி உங்களுக்கு பாதுகாப்பு தர இந்த ஐரிஸ் லேசர் கதிர்கள் உதவும் வகையில் உருவாக்கபட்டுள்ளது. இந்த லேசர் கதிர்கள் மூலம் உங்கள் கண்கள் லேசர் கையெழுத்துகளை கண்டுபிடிக்கும், அதேபோல் உங்களை எச்டி போட்டோ மூலம் ஏமாற்றுபவர்களை எளிதாக கண்டுபிடித்து கொடுக்கும்.

எதிர்காலத்தில் இந்த லேசர் கதிர்கள் முலம் நாம் பல பயன்பாடுகளள பெறலாம், குறிப்பாக இந்த லேசர் கதிர்கள் மூலம் ஹைடெக் வாட்டர் மார்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மைத்தன்மை வெளீப்படும். எனவே இந்த லேசர் மூலம் நாம் சூப்பர் ஹீரோவாக மாற முடியாது என்றாலும் நம்மை நாம் பாதுகாத்து கொள்ள டெக்னாலஜியை பயன்படுத்தலாம்

உங்கள் கண்கள் லேசர் கண்களாக மாற வேண்டுமா?

மேலும் லேசர் கதிர்கள் மூலம் பார்கோட்களை மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும் எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளது. பிரெட் கிங்ஸ் அவர்களின் கோட்பாடுகளின்படி 'வாழ்க்கை என்பது ஒரு ஸ்மார்ட் கோடு. இதனை விஞ்ஞான ரீதியாக எதைப் பற்றியும் கூற முடியும் என்பதனை புரிந்து கொள்கிறோம்.
Best Mobiles in India

English summary
You Can Shoot Lasers Out of Your Eyes With These Contacts: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X