Google பாஸ்வேர்ட் மேனேஜர்.. இனி இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்.. எப்படி தெரியுமா?
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பயனுள்ள தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது கூட குடும்ப உறுப்பினர்களுடன் பாஸ்வேர்டைப் பகிர்ந்து கொள்ளும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜர் (Google Password Manager) ஆனது உங்களின் அனைத்துவித டிஜிட்டல் கணக்குகளின் பாஸ்ட்வேர்ட்களை நினைவில் வைத்துக்கொள்ளும் பின்பு இது ஒரு பாதுகாப்பான வசதியாகும். தற்போது கூகுள் நிறுவனம் இந்த கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜரைப் பயன்படுத்தி உங்களுடைய பாஸ்வேர்டை குடும்ப உறுப்பினர்களுடன் பகிரலாம் என்று தெரிவித்துள்ளது.

அதாவது இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த புதிய அம்சத்தைப் பற்றி கூறி இருந்தது கூகுள் நிறுவனம். ஆனால் தற்போது தான் குடும்ப உறுப்பினர்களுடன் பாஸ்வேர்டைப் பகிர்ந்து கொள்ளும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த வாரம் வெளிவரும் 24.20 வெர்ஷன்க்கு கூகுள் பிளே (Google Play) சேவைகளைப் புதுப்பிக்கும்போது இந்த புதிய அம்சம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூகுளின் பாஸ்வேர்ட் மேனேஜர் ஆனது மொபைல், டெஸ்க்டாப் போன்றவற்றில் கிடைக்கும். பின்பு இது குரோம் பிரவுசர் மூலம் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நீங்கள் குடும்ப குரூப்பை அமைத்திருந்தால் மட்டுமே பாஸ்வேர்ட்களை பகிரும் அம்சம் கிடைக்கும். பின்பு இந்த பாஸ்வேர்ட்களை பகிரும்போது, அந்த குரூப்பில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே உங்கள் கணக்குகளுக்கான தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் மேனேஜர் பாஸ்வேர்டை குடும்ப உறுப்பினர்களுடன் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
முதலில் குரோம் பிரவுசரில் பாஸ்வேர்ட் மேனேஜர் பிரிவுக்கு சென்று ஏற்கனவே சேமிக்கப்பட்ட கணக்குகளில் ஒன்றை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து கூகுள் உங்களுக்கு Share copy of your password எனும் பாப் அப் மெசேஜ் ஒன்று காண்பிக்கும். அதில் தான் உங்களது குடும்ப உறுப்பினர் விவரங்களை நிரப்ப வேண்டும்.
அவ்வளவு தான், இதன் மூலம் அந்த குறிப்பிட்ட பாஸ்வேர்டை நீங்கள் பயன்படுத்தும் எந்த ஒரு ஆப் அல்லது சேவைக்காகவும் உங்கள் குடும்ப உறுப்பினரும் பயன்படுத்தலாம். குறிப்பாக கூகுள் மேனேஜர் பாஸ்வேர்டை குடும்பத்துடன் பகிர்வது அதிக பாதுகாப்பை வழங்கும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இந்த புதிய அம்சம் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதேபோல் சமீபத்தில் வெளியான தகவலின்படி, உலகம் முழுவதும் பல நாடுகளில் கூகுள் பே (Google Pay) சேவையை ஜூன் 4ம் தேதி முதல் நிறுத்தப் போகிறது கூகுள் நிறுவனம். இதன் பிறகு ஆப் மூலம் பணம் செலுத்த முடியாது. கடந்த 2022-ம் ஆண்டு தான் கூகுள் வாலட் (Google Wallet) அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்பு கூகுள் பே பயனர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. ஆனாலும் கூகுள் பே செயலியை வரும் ஜூன் 4 -ம் தேதி முதல் நிறுத்த உள்ளது கூகுள் நிறுவனம்.

அதாவது ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு, அமெரிக்காவில் இருக்கும் மக்கள் கூகுள் பே மூலம் பணம் அனுப்பவோ, பணம் பெறவோ முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது 180 நாடுகளில் பயனர்கள் கூகுள் பே செயலிக்கு பதிலாக கூகுள் வாலட் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். குறிப்பாக பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த கூகுள் வாலட். அதனால் பல்வேறு மக்கள் இதை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
மேலும் கூகுள் நிறுவனம் அனைத்து அமெரிக்கப் பயனர்களையும் கூகுள் வாலட்டுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கூகுள் வாலட்டை விளம்பரப்படுத்தவே இந்நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனாலும் ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு, கூகுள் பே செயலி இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் வேலை செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








