இனி இன்டர்நெட் இல்லையெனில் கவலை வேண்டாம்.. UPI மூலம் பணம் அனுப்பலாம்.. ரூ.5000 லிமிட்.. விவரம் இதோ..
நாடு முழுவதும் யுபிஐ (UPI) சேவையை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த யுபிஐ சேவை மூலம் சில நொடிகளில் பணம் அனுப்ப முடிகிறது. எனவே தான் தான் அதிக மக்கள் இந்த சேவையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சில சமயம் நெட்வொர்க் பிரச்சனை, சர்வர் கோளாறு காரணமாக யுபிஐயில் பணம் அனுப்புவது சிலருக்குச் சிரமமாக இருக்கலாம்.
இந்த நெட்வொர்க் பிரச்சனை அவ்வப்போது வருவதால் ஆன்லைன் பேமெண்ட் தளங்களை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது சிலருக்கு மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது என்றே கூறலாம். குறிப்பாக இந்த நெட்வொர்க் சிக்கல் ஏற்படும் போது யுபிஐ மூலம் பணம் செலுத்துவதில் அதிக சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் யுபிஐ கட்டணங்களை ஆஃபலைனிலும் செய்ய முடியும்.

அதன்படி நெட்வொர்க் வேகம் குறைந்தால் அல்லது நெட்வொர்க் வேலை செய்யாத சமயத்தில் இணைய வசதி இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனை செய்வதற்கான ஆப்ஷனை அரசாங்கம் வழங்கியுள்ளது. அதாவது USSD கோடை பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனை செய்ய முடியும். குறிப்பாக இந்த ஆஃப்லைன் பேமென்ட் முறையை ஸ்மார்ட்போன், ஃப்யூச்சர் போன் என அனைத்து வகையான ஃபோன்களிலும், அனைத்து வகையான நெட்வொர்க்களிலும் பயன்படுத்த முடியும்.
ஆனாலும் உங்கள் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மூலமே நெட் வசதி இல்லாமல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்பதை கவனத்தில் கொள்க. அதேசமயம் ஒருமுறை ஆன்லைனில் இருந்து உங்கள் வங்கி அப்ளிகேஷன் அல்லது இணையதளம் மூலம் UPI PIN செட் அப் செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதன் பிறகு இணைய வசதி தேவைப்படாது.
ஆஃப்லைன் முறையில் பணம் அனுப்புவது எப்படி?
இந்த சேவையைப் பெற உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பயன்படுத்த வேண்டும். அதன்படி முதலில் *99# என்ற நம்பரை டயல் செய்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு ஆப்ஷன் வரும், அதில் பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேலன்ஸ் சரி பார்த்தல், பின் நம்பர் அமைப்பது எனப் பல சேவைகள் காண்பிக்கப்படும்.
அடுத்து நீங்கள் பணம் அனுப்ப 1-ஐ டைப் செய்து Send என்பதை கிளிக் செய்யவும். அதுவும் பெறுநரின் மொபைல் நம்பர், UPI ID அல்லது வங்கி கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு போன்றவற்றை உள்ளிடலாம். அதன்பின்பு அனுப்ப வேண்டிய தொகையையும் UPI PIN-ஐயும் உள்ளிட்டதும், பரிவர்த்தனை சில வினாடிகளில் முடிந்து விடும்.
இருந்தபோதிலும் இந்த ஆப்லைன் முறையில் சில வரம்புகள் உள்ளன. ஒரு ஆஃப்லைன் பரிவர்த்தனையின் அதிகபட்ச வரம்பு ரூ.5000 ஆகும். மேலும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.0.50 கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பாக இதுவே ஆன்லைன் UPI-யிலிருந்து மாறுபடும் முக்கிய அம்சம். ஆனாலும் சில அவசர நேரங்களில் இது மிக பயனுள்ளதாக இருக்கும். முக்கியமாக, இந்த சேவை விடுமுறை நாட்களிலும் செயல்படும். எந்த நெட்வொர்க், எந்த மொபைல் சாதனத்திலும் இதைப் பயன்படுத்தலாம்.

நேஷனல் பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) தான் இந்த ஆஃப்லைன் சேவையைக் கொண்டுவந்தது. இணைய வசதி இல்லாத சூழலில் சிக்கி தவிக்கும் பலருக்கும் இற்த ஆஃப்லைன் யுபிஐ முறை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதுவும் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், ஊரகப் பகுதிகளிலும் சமமான பயன்பாட்டை பெறச் செய்வதே இந்த ஆஃப்லைன் யுபிஐ சேவையின் நோக்கமாகும். குறிப்பாக சில அவசர சூழலில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








