இனி டுவிட்டர் மூலம் பொருட்களை வாங்க முடியும்

Written By:

டுவிட்டர் மூலம் பொருட்களை வாங்கும் புதிய அம்சத்தினை சேர்க்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருகின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் டுவிட்டர் மூலமாகவே பொருட்களை வாங்க முடியும்.

டுவிட்டர் தளத்தில் அறிமுகப்படுத்தும் ப்ராடக்ட் அன்டு ப்ளேசஸ் பேஜ் பக்கத்தில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க முடியும். புதிய பக்கங்களில் பொருட்கள் மற்றும் பிரான்டுகள் சார்ந்த விளம்பரங்கள் ட்வீட் வடிவில் காணப்படும்.

இனி டுவிட்டர் மூலம் பொருட்களை வாங்க முடியும்

ப்ராடக்ட் பேஜில் குறிப்பிட்ட பொருள் குறித்து மற்றவர்களின் ட்வீட்களை பார்க்க முடியும். மேலும் புதிய கலெக்ஷன்ஸ் பகுதியில் பிரான்டுகளை பரிந்துரைக்கவும் செய்யும்.

ப்ராஜக்ட் லைட்னிங் திட்டத்திற்கு அடுத்த படியாக டுவிட்டர் அறிமுகப்படுத்தி இருக்கும் இரண்டாவது திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Read more about:
English summary
Twitter has announced that the company is launching a product and place pages that allows users to discover and purchase items within the service.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot