டைரிமில்க் சாக்லேட் காகிதம் இருந்தாலே ஜியோவின் 1ஜிபி டேட்டா இலவசம்: வாடிக்கையாளர்கள் குஷியோ குஷி.!
ஜியோ நிறுவனத்தின் சலுகையால் பல்வேறு தொலைபேசி நிறுவனங்களும் கதிகலங்கியுள்ளன. இந்தியா முழுக்கவும் ப்ரீ ரோமிங், காலர் டோன்களுக்கு கட்டணமும் கிடையாது. இலவசமாக மிஸ்டுகால் அலர்ட், 100 எஸ்எம்எஸ் ப்ரீ, மேலும
ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது முதல் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. இந்தியாவில் குறுகிய காலத்தில் இந்த நிறுவனத்திற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர்.

ஜியோ நிறுவனத்தின் சலுகையால் பல்வேறு தொலைபேசி நிறுவனங்களும் கதிகலங்கியுள்ளன. இந்தியா முழுக்கவும் ப்ரீ ரோமிங், காலர் டோன்களுக்கு கட்டணமும் கிடையாது. இலவசமாக மிஸ்டுகால் அலர்ட், 100 எஸ்எம்எஸ் ப்ரீ, மேலும் வரம்பற்ற அழைப்புகள் அனைத்து போன் நிறுவனங்களுக்கும் என பல்வேறு சலுகைகளை கொடுத்து வருகின்றது ஜியோ நிறுவனம்.

ஜியோவின் 1 ஜிபி டேட்டா ப்ரீ:
பல்வேறு நிறுவனங்களுக்கும் போட்டியாகவும், புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களை குஷிபடுத்தும் விதமாகவும் 4 ஜியில் 1 ஜிபி டேட்டாவை ஜியோ நிறுவனம் வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டைரி மில்க் சாக்லேட் காகிதம்:
ஜியோவின் 1 ஜிபி டேட்டாவை டைரி மில்க் சாக்லேட் காகிதம் இருந்தாலே இலவசமாக பெற முடியும். இந்த 1 ஜிபி டேட்டாவை எவ்வாறு பெறுவது என்று இனி காணலாம். முதலில் ரூ.10 முதல் தொடங்கும் டைரி மில்க் சாக்லேட் ரேப்பரை ஏதாவது ஒன்றை வாங்கி கொள்ள வேண்டும்.

மை ஜியோ ஆப்:
பிறகு நமது ஆன்ட்ராய்டு மொபையில் போனில் உள்ள மை ஜியோ ஆப்பை ஒப்பன் செய்து கொள்ள வேண்டும்.

1 ஜிபி டேட்டா டைரி மில்க்:
பிறகு மை ஜியோ ஆப்பில் திஸ் ரேப்பர் ஹேஸ் 1 ஜிபி டேட்டா இன்சைடு இட் என்று கொடுக்கப்பட்டு இருக்கும். அதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

அப்லோடு செய்ய வேண்டும்:
பிறகு ஆப்பில் தெரிவித்துள்ளபடி இப்போது பங்கேறுங்கள் என்று கொடுக்கப்பட்டு இருக்கும் அதையும் கிளிக் செய்ய வேண்டும். அப்போது மேகராவை திறக்க அனுமதி கொடுக்கவும் என்று கேட்கும் பிறகு அனுமதி கொடுத்து உள்ளே சென்று திறந்து டைரிமில்க் சாக்லேட்டை போட்டோ எடுத்து அப்லோடு செய்ய வேண்டும்.

1 ஜிபி டேட்டா பெற்ற அறிவிப்பு:
பிறகு 1 ஜிபி டேட்டா பெற்றத்திற்கான அறிவிப்பும் உடனே ஸ்கிரீனில் தெரிவிக்கும். மேலும் இந்த ஒன் ஜிபி டேட்டாவை பிறருக்கும் தானமாக வழங்கவும் முடியும். மேலும் நாமே வைத்துக் கொள்வதாக இருந்தாலும் கீப் 1 ஜிபி டேட்டா என்று இருக்கும் அதை கிளிக் செய்தும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஏமாற்றும் வழி:
ஏதாவது ஸ்மார்ட்போனிலே இல்லை லேப்டாப்பிலோ டைரி மில்க் ரேப்பரை டவுன் செய்தும், அதை அப்படியே ஜியோ ஆப்பில் மேற்கூறிய வழிமுறைகளை பயன்படுத்தியும் இலவசமாக 1 ஜிபி டேட்டாவை இலவசமாக பெற முடியும். இதனால் வாடிக்கையாளர்கள் குஷியாகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications