Home
News

இனி ஆபீஸ்ல பொய் சொல்லி லீவ் போட முடியாது! ஊழியர்களுக்கு ஆப்பு வைக்கும் புது AI அம்சம்!

இனி அலுவலகத்தில் யாரும் பொய் சொல்லி லீவ் எடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. யார் சொன்னது, நாங்களாம் அடிக்கடி பொய் சொல்லி தான் லீவ் போடுகிறோம் என்று கெத்தாக நினைத்துக்கொண்டிருக்கும் நபர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியானால், உங்கள் கேம் ஓவராகிகிவிட்டது மக்களே.

AI ரோபோட்களின் செயல்பாடுகள் குறித்து கடந்த சில வாரங்களாக பல திடுக்கிடும் தகவல்களை நாம் கேட்டறிந்து வருகிறோம். AI ரோபோட் என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு ரோபோட்களால் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வேலைகளுக்கு ஆபத்து ஏற்பட கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் மற்றொரு புது தகவல் ஊழியர்களின் அடி வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

இனி ஆபீஸ்ல பொய் சொல்லி லீவ் போட முடியாது! ஊழியர்களுக்கு புது AI ஆப்பு!

கரணம், அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இனி பொய் சொல்லி விடுமுறை எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. ஒரு ஊழியர் நன்றாக நலமுடன் இருக்கும் போது, நோய்வாய்ப்பட்டவர்கள் போல் இனி பொய் சொல்லி லீவ் எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது. ஊழியர்கள் உடனலம் குறைபாடு காரணத்தை காட்டி விடுமுறை எடுக்க இனி அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

ஊழியர்கள் பொய் சொல்லிறார்களா? அல்லது உண்மையிலேயே உடல் நலம் முடியாமல் தான் இருக்கிறார்களா? என்பதை AI தெளிவாக கண்டறியும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நபரின் குரல் தொனியில் இருந்து அவர் உடல்நலம் சரி இல்லாமல் இருக்கிறாரா? என்பதை AI கண்டறியும் என்று புதிய ஆராய்ச்சி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. சில ஊழியர்கள் நன்றாக இருக்கும் போது கூட, 'சளி'யால் அவதிப்படுவதாக அடிக்கடி பொய் கூறி லீவ் எடுப்பது வழக்கமாக உள்ளது.

சூரத்தில் உள்ள சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 630 பேரின் குரல் வடிவங்களை வெற்றிகரமாக ஆய்வு செய்தனர், அதில் 111 பேருக்கு சளி இருந்தது AI மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் சளி நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் பேச்சு முறைகளை வைத்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி ஆபீஸ்ல பொய் சொல்லி லீவ் போட முடியாது! ஊழியர்களுக்கு புது AI ஆப்பு!

மனித பேச்சில் காணப்படும் குரல் வடிவங்களை இந்த ஆய்வு பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இவை அதிர்வெண் அதிகரிக்கும் போது சத்தத்தில் குறையும் ஹார்மோனிக்ஸ் மூலம் கணக்கிடப்படுகிறது. பொதுவாக, அவற்றின் அதிர்வெண் அதிகரிக்கும் போது, ஹார்மோனிக்ஸ் வீச்சு குறைகிறது. கூடுதலாக, ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் அதே சீரற்ற வடிவத்தை வெளிப்படுத்த முடியும். ஆராய்ச்சியாளர்கள் இயந்திரக் கற்றல் வழிமுறைகளைப் பயன்படுத்தி, தனித்துவமான நபர்களின் பெருக்க வேறுபாடுகளை ஆய்வு செய்துள்ளது.

அதே நிகழ்வின் அடிப்படையில் சளி பிடித்தவர்களை AI சுலபமாக அடையாளம் கண்டதாக கூறப்படுகிறது. சோதனைத் தன்னார்வலர்கள் வார இறுதியில் என்ன செய்தார்கள் என்பதைப் புகாரளிப்பதற்கு முன் 1 முதல் 40 வரை எண்ணுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர் அவர்கள் ஈசோப்பின் கதையான தி நார்த் விண்ட் அண்ட் தி சன் பாடலைப் படிக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். குரலின் ஒளியை வைத்து சளி உள்ளதா? இல்லையா என்பதை 70% ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மருத்துவரிடம் செல்லாமல் ஒருவருக்கு ஜலதோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்க இனி மருத்துவர் தேவையில்லை. வெறும் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இனி லீக் கேட்கும் போது உண்மையான காரணத்தை கூறி லீவ் எடுப்பது சிறப்பானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
You can no longer lie in the office and take leave new AI feature identifies cold voice of an employees
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X